2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை!!!
2010 இன் முதலாவது ருவீட்டு...
@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வழமையான ஒரு விடியல் ஆயினும் புதுவருடத்துக்கான எதிர்பார்ப்புக்கள் இல்லாமலும் இல்லை... எல்லோருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.ஜனவரி 01, 2010. புதியதொரு வருடத்தின் முதல் நாள். வழமையான விடியல்....
இருந்து பாருங்கள்... 2010 இன் கடைசியில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமை கரம் மாறியிருக்கும். #ருவீட்டர் #கூகிள்கூகிள் ரசிகனாக எனது அதீத நம்பிக்கை. ஆனால், 2010 இல் கூகிள் தன் அசையா இருப்பைத் தக்க வைக்க Facebook உடன் போராட வேண்டிய நிலை.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வந்த வேளையில் - நல்லூர்க்கந்தனின் காலடியில் காணிக்கைகள் செலுத்தப்பட்ட படங்கள் இணையத்தில் வந்திருந்தன...
எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன் #நாட்டு_நடப்புஇன்று? நாட்டு நடப்பு எப்படித்தான் அவசர கதியில் மாறிப்போகின்றது.
பகிஸ்கரிப்பு என்பது நாங்கள் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான நியாயமாகிவிடக்கூடாது. #நாட்டு_நடப்புஜனவரி 04, 2010. ஜனாதிபதித்தேர்தலை முன்னிறுத்தி...
மொழி நடையும், கருத்தும் பிடித்திருந்தது.
RT: @cowboymathu: @thinkynt கறுப்பு வளையல் கையுடன் ஒருத்தி குனிந்து வளைந்து பெருக்கிப் போனாள், வீடு சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு #கவிதை
ஜனவரி 26 நள்ளிரவு தாண்டி விழித்திருந்த வேளை... ஏதோ நம்பிக்கையில் காத்திருந்திருக்கிறேன்... ஜனாதிபதித் தேர்தல் 2010 முடிவுகள் சிலவற்றின் இறுதியில் இப்படி ருவீட்டி விட்டு நித்திரைக்குப் போயிருந்தேன்.
இனி நான் விழித்திருக்கத் தயாரில்லை. வளமான எதிர்கால நாளைய நாளில் சந்திப்போம். Good night
அகராதியில் இல்லாத "சிறுபான்மை" வாக்களித்தபின் இலங்கைப் படத்தில் இருக்கிறது.
மூன்று வருடத்துக்குப் பின்னர் யாழ். சென்று வந்தேன்... களைப்பு!!! மகிழ்ச்சி!!!
ஒரு நாள் போட்டியில் ஆகக்கூடிய ஓட்டங்களை சச்சின் பெற்ற மறுகணம்
Congratz Sachin......
நித்தியின் சீடர்களை விட, சாருவின் சீடர்களின் கருத்துக்களுக்காக ஏன் நான் காத்துக்கிடக்கின்றேன்...ஏன் நான் காத்திருந்தேன்?
காதல் காதல் காதல்
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும் போது....
நான் பதிவெழுத ஒரு idea தந்தமைக்கு நன்றி. ;-)
ReplyDeleteநான் எற்கனவே ருவிற்றரில் இரசித்த, பார்த்த ருவீற்றுகள் தான்.
என்றாலும் தொகுப்பாகப் பார்க்கையில் அதுவும் மகிழ்ச்சி தான். :-)
பதிவுலகிற்கு மீள வரவேற்கிறேன்.
வலை முகவரி எல்லாம் மாறி புதியவராகவே வந்திருக்கிறீர்கள். ;-)
என் சொற்றை கோபி திருடிட்டாரே...
ReplyDelete/////எமக்கு உயிர்ப்பிச்சை தர மறுத்த சீருடை - எம்மிடம் வாக்குப் பிச்சைக்காய் வெண்ணிற வேட்டியுடன் #நாட்டு_நடப்பு////
ReplyDeleteஎனக்கு இந்த ருவிட்டி ரொம்ப பிடித்திருக்கிறது...
அண்ணே,
ReplyDeleteஅந்த "எனக்குத் தன் சுடுசோறு" எண்டதில இருக்கிற எழுத்துப் பிழையை திருத்தப்படாதோ?
உங்களுக்குச் சுடுசோறு கிடைக்கேல எண்டது வேற விசயம்.
மீட்டல்???
ReplyDeleteகங்கு,
உங்கட ரூவீற்றுக்களை வைத்து ஐநூறு பதிவாவது போடலாம்.
சுடுசோறு,
எழுத்துப் பிழையைக் கவனிக்க. தன் அல்ல தான்.
பதிவுலகிற்கு மீள வரவேற்கிறேன் :)
ReplyDeleteகடைசி ட்வீட் கலக்கல், புதிய முகவரி அதைவிடக் கலக்கல் ;-)
// கன்கொன் || Kangon said...
நான் பதிவெழுத ஒரு idea தந்தமைக்கு நன்றி. ;-)
//
ஆங்கிலப்பதிவா? அதன் நீளத்தை நினைக்க இப்போதே தலை சுற்றுகிறது :P
மது மற்றும் அபிபிபிமானி மிக்க நன்றி..
ReplyDeleteஅட ஆதிரை மீண்டும் பதிவராகிறார்..
ReplyDelete//பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை!!!
//
ஆகா.. மனுஷனின் ரசனை இப்ப எப்பிடி ஆகிட்டுது.. :)
புது வலைப்பதிவு, புதுப் பதிவு.. ம்ம்ம்ம் புதுசு புதுசா கலக்கிறீங்க சித்தப்பூ :)
நீண்ட நாளைக்கு பிறகு வருகைக்கு வாழ்த்துக்கள் ஆதிரை அண்ணா.
ReplyDeleteஎனக்கும் பதிவெழுத ஒரு தலைப்பு தந்ததுக்கு நன்றி
ReplyDeleteமீழ்வருகைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபின்னோக்கிப் பார்த்தலின் ரசனை... சுவாரகசியங்கள் மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கின்றன.
ReplyDeleteநல்ல சில ட்விட்டுகள்..
ReplyDeleteஅப்ப புல்லட்டும் வருவார் போல?
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவளமான எதிர்காலம்..அக்காலத்தின் அருமையான பிரதிபலிப்பு
ReplyDelete