Search This Blog

Friday, May 15, 2009

Youtube வீடியோ - தெரியாதவை சில

பெரிதாக முகம் தெரியாத ஒருத்தர் அவர். அவரைப்பற்றியதான ஒரு செய்தி இணையத்தில் வந்திருந்தது. யார் அவர் என அறியும் ஆவல் மேலிட தேடியதன் விளைவாக அவர் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று Youtube தளத்தில் கிடைத்தது. அந்த பத்து நிமிடத்திற்கும் மேலான வீடியோவில், ஐந்தே ஐந்து செக்கன்கள் மட்டும் அவரின் முகம் காணக்கிடைத்தது.

ம்ம்ம்... youtube வீடியோக்களை ஆரம்பத்தில் இருந்தன்றி குறிப்பிட்ட நேரத்திலிருந்து இயங்க ஏதாவது வழிகள் இருப்பின் நன்றாயிருக்கும் என எண்ணினேன். அதனால் சலிப்பு மனநிலை, நேரவிரயம் அத்துடன் வீணான இணையதரவிறக்க எல்லை தாண்டுதல் போன்ற விடயங்களிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.


இன்று இணையத்தில் உலாத்திக் கொண்டிருந்த போது எனக்குள் ஆச்சரியம்... அன்று எது இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினேனோ அதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டிருந்தன. Youtube தள வீடியோக்களை இடைநடுவிலிருந்தும் இயக்க முடியுமாம். அந்த வீடியோ இணைய முகவரியின் இறுதிப்பகுதியில் #t=1m33s என்பதைச் சேர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட அந்த வீடியோவை 1 நிமிடம் 33 செக்கன்களிலிருந்து இயக்க முடியும்.

உதாரணத்துக்கு,
http://www.youtube.com/watch?v=vh3uaeKXFHg#t=1m33s


ஆனால், பொதுவாக பதிவுலகில்
Youtube வீடியோக்களை இணைக்கும் போது அவற்றின் Embed வடிவங்களைத்தான் இணைக்கின்றோம். குறிப்பிட்ட நேரத்திலிருந்து அவ்வீடியோக்கள் இயங்குவதற்கு, இதற்கும் ஏதாவது வழிமுறைகள் உண்டா எனத் தேடியபோது Google தேடுபொறி என்னைக் கைவிடவில்லை. :-)

உதாரணத்துக்கு, கீழுள்ள Embed Code இல் தடித்த - சிவப்பு நிற பகுதிகளினால் குறித்துக்காட்டப்பட்ட பகுதிகளை இணைப்பதன் மூலம் அந்த வீடியோவை 113 செக்கன்களின் பின்னர் இயங்க வைக்க முடியும்.
(பெரிதாக்குவதற்கு படத்தின் மேல் சொடுக்குக.)





முதலாவது பாடல் - என் சுயநலத்துக்கானது.
இரண்டாவது பாடல் - ஏனோ தெரியவில்லை; இட்ட காரணம் புரியவில்லை. :(

6 comments:

  1. ஆனா,அந்த முதலில் உள்ள 113 செகண்ட் வீடியோவை நமக்கு தெரியாமல் இறக்கிவிட்டு தான் காண்பிக்க ஆரம்பிக்கிறதோ என்று சந்தேகம் இருக்கு.

    ReplyDelete
  2. @மரைக்காயர்
    //super
    ம்... நன்றி வருகைக்கும் கருத்துக்களுக்கும்

    ReplyDelete
  3. தொழில்நுட்பம் எழுத ஆரம்பித்ததற்கு நன்றி

    ReplyDelete
  4. @shirdi.saidasan@gmail.com
    //தொழில்நுட்பம் எழுத ஆரம்பித்ததற்கு நன்றி

    ஏதோ முடிந்தளவு. ஆனால், நீங்கள் தான் தொழில்நுட்ப விடயங்களில் சமுத்திர ஆழம் மிக்கவராய்ச்சே... :-)
    நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete

You might also like