Search This Blog

Wednesday, July 22, 2009

அறு சுவை பதிவர்கள்

நண்பர் செந்தழல் ரவி அவர்களினால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட "சுவாரஸ்யப் பதிவர்" பட்டம் சூட்டும் படலம் இப்போது என் முறையாகிவிட்டது. என் உள்ளத்து உணர்வுகளை, என் மக்களோடு கை கோர்த்து நடந்து வந்த பாதைகளில் சந்தித்த சோதனைகளை - அரிதாக சாதித்த சாதனைகளை பதிவுகளாக்கும் நோக்கத்துடன் கடலேறி என்னும் இத்தளத்திலே ஏறி வந்தேன். உள்ளத்தில் எழுந்த சில விடயங்களை சொல்லியிருக்கின்றேன்; பல விடயங்களை சொல்ல நாவிருந்தும் சொல்ல முடியாமல் மௌனம் காத்திருக்கின்றேன். அப்போது வெளிப்பட்டுப் போகும் என் மூச்சின் வெம்மை ஆதவனையே சுட்டெரிக்கும் வல்லமையுள்ளதாய் உணர்வேன்.

என் பதிவுகளுக்கு ஊக்க மருந்துகளாக கிடைக்கின்ற பின்னூட்டங்களும் வாக்குகளும் என்னை இன்னும் இந்தப் பதிவுலகத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கின்றன. இப்போது நண்பர் சுபானு அவர்களினால் எனக்கு வழங்கப்பட்ட "சுவாரஸ்ய பதிவர்
" எனும் விருது மகிழ்ச்சியளிக்கின்றது. மனமுவந்து அவர் அளித்த இந்தக் கௌரவத்தை தலைசாய்த்து வாங்கிக் கொள்கின்றேன். நன்றி நண்பரே...

இப்போது என் முறை. இவ்விருதை அறுவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டியது அன்பான அறிவுறுத்தல். பதிவுலகத்தில் அநேகமாக எல்லோருடைய பதிவுகளையும் விரும்பி வாசிப்பேன். ஆனாலும் ஒரு சில பதிவர்கள், ஒரு சில பதிவுகள் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன(ர்). அவ்வகையில், எனக்கு கிடைத்த இவ்விருதினை என் பதிவுலக நண்பர்கள் அறுவருக்கு வழங்குவதில் பெருமையடைகின்றேன். அவர்களும், மறுக்காது இவ்விருதினைப் பெறுவதில் உவகையடைவார்களென உளமார நம்புகின்றேன்.

லோசன்
இலங்கையின் ஊடக, வானொலித் துறையில் பின்னிப்பிணைந்துள்ள ஒருத்தர். வானொலியாலும், வலைப்பதிவாலும் எல்லோருக்கும் பரிச்சயமான அண்ணர். என்னுடைய பதிவுலகத்திற்கு வழிகாட்டியென்று இவரை மாட்டிவிடவும் உள்ளூர ஆசை. ஆனால், இவர் ஏற்கனவே இந்த விருதைப் பெற்றது மட்டுமன்றி (சுபானுவிடமிருந்தே பெற்றார் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி), அவ்விருதுக்கு நன்றி தெரிவிக்கும் பதிவில் நான் விருது கொடுக்க எண்ணியவர்களில் இருவரை கண்டெடுத்து அவர்களுக்கு வழங்கியவர்.
http://www.loshan-loshan.blogspot.com

சயந்தன்
இவருடைய எழுத்துக்கள் பேசுகின்ற பொருள் கனதியானது. நாட்டு நடப்பை பற்றி சீரியஸாகவும், சில வேளைகளில் எள்ளி நகையாடியும் இவர் இடுகின்ற கட்டுரைகள், சிறுகதைகளுக்கு நான் எப்போதிருந்தோ அடிமை. அண்மையில் இவர் எழுதிய பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள், மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை எனும் பதிவுகள் எங்கள் நிகழ்கால வாழ்வின் சூனியத்தை உணர்த்தி நிற்கின்றன.
http://sajeek.com

சதீஷன்
இளம்புயல்... அறிவிப்புத்துறையில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்திருக்கும் இவர் வலையுலகிலும் அதிரடிப் பதிவுகளுக்குச் சொந்தக்காரர். வானொலி வாழ்க்கையில் மட்டுமல்ல, பதிவுலக வாழ்விலும் லோசனுடன் சேர்ந்து பயணிப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. அடிக்கடி இடுகின்ற கிரிக்கட் பதிவுகளே இதற்கு சாட்சி. ஒருபடி மேலே சென்று, திரையுலகத்துக்கு விருது வழங்கும் நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர். http://sshathiesh.blogspot.com

நிமலபிரகாசன்
பல்கலைக்கழக மாணவன். சிறந்த கணனி அறிவியலாளி. தொழில் நுட்பம் சார்ந்தும் - சிலவேளைகளில் நக்கல் நளினங்களுடநும் இவர் இடும் பதிவுகள் பிரமாதம். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான தளங்களுக்கு சொந்தக்காரர். http://talkouttamil.blogspot.com

கரவைக்குரல்
பாடசாலைக் காலங்களிலிருந்து இவரை அறிவேன். சிறந்த பேச்சாளர். வில்லுப்பாட்டில் கொடிகட்டிப்பறந்த வானம்பாடி. இப்போது பதிவுலகத்திற்கும் புதுவரவானவர். மண்வாசனை வீசும் பதிவுகளின் சொந்தக்காரன். http://karavaikkural.blogspot.com


புல்லட் பாண்டி
அண்மைக்காலமாக பதிவுலகில் பேனாவைத் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பவர். இசை வகுப்பு, வேலைத்தளம், ஆங்கிலத்திரைப்படம் என அரக்கப்பறக்க ஓடித்திரிகின்ற 'மனுசன்'. நகைச்சுவை சொட்ட சொட்ட இவரிடுகின்ற பதிவுகள் வாய்விட்டுச் சிரிக்க வைப்பன. http://ariyalion.blogspot.com

மீண்டுமொரு முறை நண்பர் சுபானுவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு, விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். இனி உங்கள் முறை.... உங்கள் தெரிவாளர்களுக்கும் முன்கூட்டிய எனது வாழ்த்துக்கள். :)

9 comments:

 1. நன்றி கடலேறி.... இன்னும் சில நாட்களில் விரைவில் திரும்பி வருவேன்.. எழுதாமலிருந்த இடைவெளியிலிலேயே விருதுகள் தந்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள்...

  ReplyDelete
 2. ஆஹா நீங்களுமா? என் விரதத்தை முடித்துக்கொண்டு விருதை பெருமையாக ஏற்றுக்கொள்கின்றேன். மிகவிரைவில் விருது வழங்கும் பதிவர்களில் நானும் இணைய போகின்றேன்.(சான்று என்னை திட்டலாம் நான் தரும் பொது அப்படி பதிவிட்டு விட்டு இப்போ ஏற்கிரீர் என்று என்ன செய்வது காலம் என்னை மாற்றி விட்டது. உங்கள் விருதுக்கு நன்றிகள். அதேநேரம் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். நண்பா சான்று உங்கள் பணியை தொடரப்போகின்றேன். கடலேறி இன்னும் ஏறிப்போக வாழ்த்துக்கள் நன்றிகள்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்..........!!!!!!!!!1

  நல்ல தேர்வுகள்...

  ReplyDelete
 4. பதிவர்களை அறிமுகம் செய்த விதம் ரொம்ப அருமை ,குறித்துக் கொண்டேன்.
  நல்ல பதிவு .
  ஒட்டு போட்டாச்சு

  ReplyDelete
 5. உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி சகோதரா...

  ReplyDelete
 6. நண்பர்களே...

  அனைவரினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. உங்கள் பாராட்டுக்கும் அளித்த விருத்துக்கும் நன்றி சகோதரா

  ReplyDelete
 8. இன்றுதான் நீங்கள் அனுப்பிய இந்த விருது தொடர்பான மடலை எனது Inboxல் பார்த்தேன். நீங்கள் அனுப்பிய நேரத்தில் நான் ஒரு வெளிநாட்டு பயண அவசரத்தலிருந்ததால் கவனிக்கவில்லை.

  விருதுக்கும் எனது பதிவை இங்கு அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி.

  (பதில் போட 2 மாதம் தாமதமாகிவிட்டது)

  ReplyDelete

You might also like