Search This Blog

Friday, August 14, 2009

ஆகஸ்ட் 23 - வரலாறும் எங்களுடன் கை குலுக்கின்றது

இலங்கைப் பதிவர்களுக்கு நற்செய்தியாக திரட்டிகள், வலைத்தளங்கள் தொட்டு உள்ளூர் ஊடகங்கள் வரையில் பதிவர் சந்திப்பு தொடர்பாகவே பேசுகின்றன. எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது தெரிந்ததே.

இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால்.....??? அநேக பதிவர்களின் நலன் கருதி விடுமுறை நாளாக இருத்தல் நன்று என்பதற்கேற்பவே - எதேச்சையாக நாங்கள் தேர்ந்தெடுத்தது எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை. ஆனால், வலையுலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் போது அந்நாள் முக்கியமிக்க நாளொன்றாகும். ஆம்... இற்றைக்கு 10 ஆண்டுகளின் முன்னர் இதே நாளில் - ஆகஸ்ட் 23, 1999 முதன் முதலாக Blogger தொடங்கப்பட்டது.

Blogger பத்தாவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கும் நாளில் இலங்கையில் முதன் முதலாக பதிவர் சந்திப்பை நடாத்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்வேளையில், Blogger தொடர்பான சில தகவல்களையும் இங்கு பகிர்வதில் மகிழ்ச்சியே...


★ ஆகஸ்ட் 23, 1999 அன்று முதன் முதலாக Pyra Labs எனும் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.

★ பெப்ரவரி 2003 இல் கூகிள் நிறுவனத்தினால் வாங்கப்பட்டது.

★ 2004 இல் கூகிளுக்குச் சொந்தமாக்கப்பட்ட Picasa உடன் Blogger ஆனது இணைந்து படங்களை தரவேற்றும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

★ மே 2007 இல் Blogger ஆனது கூகிளின் வழங்கிகளுக்கு (Server) முழுமையாக மாற்றப்பட்டது.அத்துடன் இந்தப் பத்தாண்டு கால இடைவெளியில் Blogger எட்டிய சில மைல்கற்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
★ ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடங்களும் 270,000 சொற்கள் Blogger இல் எழுதப்படுகின்றன.

★ ஒவ்வொரு வாரமும் மில்லியன் கணக்கானோர் Blogger இன் உதவியுடன் பதிவு இடுகின்றனர்.

★ மூன்றில் இரண்டு பங்கு Blogger traffic அமெரிக்க நாட்டிலிருந்து வருகின்றது. இரண்டாமிடத்தில் பிரேசிலும், அதைத் தொடர்ந்து முறையே துருக்கி, ஸ்பெயின், கனடா, ஐக்கிய இராய்ச்சியம் ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

Blogger இல் பேசப்பட்ட மிகவும் பிரபலமான விளையாட்டு என்னவென்று தெரியுமா? - சரியான பதில் சொல்பவர்களில் அதிர்ஸ்டசாலிக்கு பதிவர் சந்திப்பில் சிறப்புப்பரிசு காத்திருக்கின்றது.
(உபயம்: லோஷன் :P)

Blogger இன் பத்தாவது ஆண்டு நிறைவு நாளில், ஒரு நல்லதொரு நிகழ்வினை இலங்கையில் படைப்போம் என்ற நம்பிக்கையை ஊட்டி நிற்கின்ற அனைவருக்கும் நன்றிகள்.

6 comments:

 1. குருட்டு லக்கென்பதோ? இல்லை இப்படி ஒரு விதி என்பதா? என்ன இது? ஆச்சரியத்திலும் சந்தோசத்திலும் மூச்சடைத்துவிட்டது..

  ReplyDelete
 2. கலக்கல் பதிவு ஆதிரை. எப்படி இதெல்லாம் தேடி எடுத்தீர்கள். அப்போ எங்கடை சந்திப்புக்கு புளொக்கர்ஸ் ஸ்பொன்சர் பண்ணுவார்களா? அந்த விளையாட்டு கிரிக்கெட் தானே

  ReplyDelete
 3. 10 வது ஆண்டில் இலங்கையில் பதிவர் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆதிரை அண்ணா

  ReplyDelete
 4. கூடைப்பந்து அல்லது கார் ரேஸ் அல்லது கால்பந்து. இந்த 3ல் ஏதாவது ஒரு விளையாட்டுக்கு தான் அதிக பதிவுகள் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் நம்ம கிரிக்கட் இந்த கணிப்புல வராது என்று நினைக்கிறேன்.

  நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. என்ன ஒரு சந்தர்ப்பம்... இன் பத்தாவது ஆண்டு எமது இலங்கைப் பதிவர் சந்திப்பால் கௌரவிக்கப்படுகிறது.. :)
  (கொஞ்சம் ஓவர் தானோ?)

  எல்லாம் நல்லாத் தானே போயிட்டிருந்துது...

  சரியான பதில் சொல்பவர்களில் அதிர்ஸ்டசாலிக்கு பதிவர் சந்திப்பில் சிறப்புப்பரிசு காத்திருக்கின்றது.
  (உபயம்: லோஷன் :P)
  //
  சும்மா இருந்த ஒருத்தனை என் இப்பிடி சுவருக்கு முண்டு குடுக்க கூப்புடுறீங்க?

  வந்தி, புல்லட் மாதரி எத்தனை பிரபலங்கள் இருக்கிறாங்க..

  ஆதிரை.. ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க.. சரியான விடையை நானே சொல்லி பரிசை நானே எடுக்கிறேன்..

  கால்பந்து தானே??? i mean soccer???

  ReplyDelete
 6. ஆச்சரியமான விடயம்தான். தகவலுக்கு நன்றி அண்ணா. சந்திப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete

You might also like