Search This Blog

Monday, August 10, 2009

ஒன்றுகூடும் இலங்கைப் பதிவர்கள்

இதுவரை காலமும் பலமுறை முயன்றும் இயலாது போன - சில சமயங்களில் கைக் கெட்டியும் வாய்க்கெட்டாது போன பதிவர் சந்திப்பு இலங்கையில் நடைபெற உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.


பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌...

வலைப்பதிவர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.

லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு: மின்னஞ்சலினூடாக பலரை தொடர்பு கொண்ட போதிலும் சிலரின் பதில்களுக்காக இன்னமும் காத்திருக்கின்றோம்.

இது தொடர்பான தகவல்கள் எட்டாதவர்கள் தயக்கமின்றி தொடர்பு கொள்ளுமாறும் தங்களின் வருகையினை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபனைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

அனைவரும் தனிப்பட்ட அழைப்பாக கருதி பங்கெடுப்பீர்களென நம்புகின்றோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

12 comments:

 1. இலங்கைப் பதிவர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த பதிவர் சந்திப்புக்குரிய ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றிகள். இச் சந்திப்பிலே இலங்கை பதிவர்கள் அனைவரையும் அழைப்பதோடு என் ஒத்துளைப்புக்களுடன் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் விழா களைகட்டட்டும்!!!
  யாழ் செல்வதால் என்னால் வரமுடியவில்லை.
  கவலையாயிருக்கிறது!!!!

  ReplyDelete
 3. வெற்றியோடு ஒன்றாய் சேருவோம். கலக்குவோம். அண்ணே இதற்கான ஏற்ப்பாட்டில் நிறைய விடயங்கள் செய்ய வேண்டி இருக்கும். எனவே உங்கள் இந்த மிகப்பெரிய வேலைகளில் நானும் உதவியாக இருக்க விரும்புகின்றேன்.

  ReplyDelete
 4. நன்றே அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ஒன்றுபடுவோம் நண்பர்களே... நினைத்ததை விட வரவேற்பும் ஆதரவும் அதிகமாகவே உள்ளது..

  ReplyDelete
 6. உண்மையாக.. நல்ல வரவேற்புகிடைக்கின்றது.. கலக்குவோமில்ல...!

  ReplyDelete
 7. பிரிச்சு மேய்ஞ்சிடுவோம்..

  ReplyDelete
 8. வலைப்பதிவர்கள் சந்திப்புக்கு வழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அனைவரினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

  நிச்சயமாக இந்த சந்திப்பை சிறப்புற ஒழுங்கமைத்து நிறைவேற்றலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் சிறப்பாக நடத்தி இலங்கை பதிவர்களுக்கு பெருமை சேருங்கள்.

  ReplyDelete
 11. கண்டிப்பாக நானும் கலந்து கொள்வேன்.

  வாருங்கள் இலங்கைத் தமிழ் நண்பர்களே

  அன்புடன்
  கொல்வின்
  இலங்கை

  ReplyDelete

You might also like