![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPdrHZ3MKjY2vQMc7WTate_nQ4GuvMlt8HGTrAWprcuTkNXtCoN_sBIVKDHednFlVYTTac1oGfVqvHLUP5jmBOI-gWuy83pMQdPIJospDLQFafGUh81aWaJK50mV73NeTsT40XOVS_wQyn/s320/vgvcv.jpg)
முத்துக்களின் குமரனே... நீ கேட்டவர்களிடம் நியாயம் வேண்டி எத்தனை உயிர்கள் மடிந்தன. பேச்சளவில் தன்னுடன் அஹிம்சையையும் சேர்த்துக் கொண்ட நாடு நீ நேசித்த மக்களுக்கு அளித்த அஹிம்சைப் பரிசுகளை வரலாறு செப்புகின்றது.
உன் இன உணர்வுக்கு, எங்கள் மேல் கொண்ட பற்றுக்கு தலை வணங்கும் அதேவேளை இப்படிப்பட்ட செயல்கள் இனியும் வேண்டாம். இன்னொரு உயிருக்காக உன்னுயிரைக் கருக்காதே. உடலுக்கல்ல... உணர்வுகளுக்கு தீ மூட்டுங்கள். அத்தனையும் போதும்.
தலைவர்களே... எப்படி சுகமாக இருக்கின்றீர்கள்...? இனி எப்போது அடுத்த ஆலோசனை மாநாடு? தமிழினத் தலைவர் மதிப்புக்குரிய தமிழக முதல்வர் கருணாநிதி ஐயாவை நலம் வினவியதாக சொல்லிவிடுங்கள்.
பேச்சளவிலே அகிம்சையை இணைத்துக்கொண்டதால் செயலளவில் தேவையில்லை என முடிவுசெய்துவிட்டார்கள் போலும்...!!!
ReplyDeleteஅதீரை ஆட்சிக் கதிரைக்கு ஆசை உள்ளவர்களுக்கு நீங்கள் கேட்ட கேள்விகள் புரியாது??? நாங்கள் சபிக்கப்பட்ட ஜென்மங்கள்?? அவலப்பட்டு மடிவதே எங்கள் விதி.
ReplyDeleteஎங்களுக்காக மற்றவர்கள் தியாகம் செய்யும் போது நாங்கள் மட்டும் வெட்டியாக இருக்கிறோமே???
ReplyDeleteஏன்?