Search This Blog

Wednesday, May 19, 2010

யாழ்தேவியும்... நான் கண்ட காதலும்...


நட்சத்திரங்களைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் இருக்கத்தான் செய்கின்றன. திரட்டிகள் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா? இதற்கு தமிழ்மணமும் தப்பவில்லை. இப்போது யாழ்தேவி நோக்கியும் கற்கள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாரத் தமிழ்மண நட்சத்திரம் தொடர்பாக எட்டிப்பார்த்த சர்ச்சை இது : http://www.luckylookonline.com/2010/05/blog-post_17.html


முதலாவது இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பின் போதே, யாழ்தேவி காத்திரமான விமர்சனங்களுக்கு - குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கின்றது. இறுதியாக நண்பர் சந்ருவும் தன் ஆதங்கங்களை இங்கே யாழ்தேவி நோக்கி எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். நிர்வாகிகள் யாராவது பதில் சொல்லுங்கப்பா...!!!

மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்..! ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்..! ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா? நிர்வாகிகளே..! யாத்ரா வேலைப்பளு என நீங்கள் காரணம் சொன்னாலும், கல்லெறிபவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல... எனது முதுகையும் குறிபார்க்கத் தவறமாட்டார்கள்!!! தாங்காது என்னுடல்... ஆவன செய்யுங்கள்!!!

யாழ்தேவி நட்சத்திர வார இறுதியில், தினக்குரல் பத்திரிகையில் வெளிவரும் பதிவரின் ஆக்கம் நட்சத்திர வாரத்தில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த என்னை என்ன செய்வது?

எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்!!! அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.

அது மட்டுமா? அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே... ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..!!! ஆனால், காதல் என்ற போது கசந்தும், பின்னர் உள்ளடக்கத்துக்குள் ஏதோ கண்டுபிடித்து (அது என்னவென்று கட்டாயம் அவரை கேட்கணும்) - தெளிவு பெற்று வாழ்த்தியும் அமர்ந்த அன்பருக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான். "அமெரிக்கா என்றாலும்... ஆண்டிப்பட்டி என்றாலும்... காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?"

ஊடகப் பாதையில் மிக முக்கிய பாத்திரமாக பரிணமித்துக் கொண்டிருக்கும் வலைப்பதிவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் யாழ்தேவிக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும். கடந்த இரு வாரங்களாக என்னை நட்சத்திரமாக்கி அழகு பார்த்த யாழ்தேவிக்கு நன்றிகள்.

6 comments:

 1. யுவ கிருஷ்ணாவின் பதிவுடன் பல இடங்களில் ஒத்துப்போகிறேன், ஆனால் திரட்டி வேறு... இது தொடர்பாக ஒரு பதிவை நிச்சயம் எழுதுவேன். அது இப்போதல்ல, எழுதவிருக்கும் பதிவு தொடர்பாக அந்த திரட்டி குழு உறுப்பினர் ஒருவருக்கும் கூறிவிட்டேன்... அவரும் நிச்சயமாக எழுதச்சொல்லி விட்டார்..

  ReplyDelete
 2. ஆகா.. மூன்றாவது வாரமுமா? வாழ்த்துக்கள்.. (மாட்டினீங்களா?)

  லக்கியின் பதிவையும் வாசித்தேன்.. சரி தான்.. :)

  யாழ்தேவி இப்போது தானே ஆரம்பம்..
  தவறுகளை இடித்துரைப்போம்.. திருத்திக் கொள்வார்கள்..

  //அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.//

  வாழ்க..

  இலங்கையின் லக்கி லுக் ஆதிரை வாழ்க.. ;)

  ReplyDelete
 3. 3ம் வார வாழ்த்துக்கள்.... ;)

  இவ்வாரம் 'இளமையான, படித்த' என்பதோடு 'அழகான' என்ற பொய்யும் சேர்ந்து மின்னஞ்சல் வந்ததா? ;)

  தினக்குரலில் வெளிவரும் ஆக்கம் எப்போது வெளிவந்ததாகவும் இருக்கலாம், அதுவும் உங்களுக்கு எத்தனை அழகான, அற்புதமான ஆக்கத்தைத் தெரிந்து அனுப்பியிருக்கிறார்கள்....

  யாத்ரா 2010 புத்தகத்தில் அந்த ஆக்கத்திற்கு பாராட்டுகளுக்குக் குறைவில்லை.... :P

  எனக்குத் தெரிந்து, பலர் தினக்குரல் பத்திரிகையில் விடுபட்டிருக்கிறார்கள், காரணம் நட்சத்திர வாரம் என்பது தொடங்கி எவ்வளவோ காலத்திற்குப் பின்பே தினக்குரலில் வெளியிடத் தொடங்கினார்கள், ஆகவே அந்தளவு பெரிய இடைவெளியில் விடுபட்டவர்களும் அதற்குள் உள்வாங்கப்பட்டு தினக்குரலில் பிரசுரிக்கப்படுகிறது என்று நம்புகிறேன்.
  எதற்கும் யாழ்தேவி நண்பர்கள் விடையளிக்கட்டும்.

  //ஆனாலும், அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வல்லமை படைத்த நல்லுள்ளம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கின்றது. மகிழ்ச்சி..!!!//

  :)))

  // காதலுக்கு குற்றம் சொல்ல ஊரே வரும்போது, நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?" //

  உங்கள் வீட்டிலும் அப்படி என்று கேள்விப்பட்டேன்... ;)

  வாழ்த்துக்கள் நட்சத்திரம்...

  ReplyDelete
 4. //மே 3, 2010 தொடக்கம் தொடர்ந்து வந்த ஏழு நாட்களுக்கு யாழ்தேவி நட்சத்திரப்பதிவராக நான் அறிவிக்கப்பட்டேன். சந்தோசம்..! ஒரு வாரம் கழித்து இன்னும் ஏழு நாட்களுக்கு என் நட்சத்திரவாரம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரட்டிப்புச் சந்தோசம்..! ஆனால், அறிவிக்காமலே மூன்றாவது வாரமா? //

  வாழ்த்துகள்


  //எண்ணிக்கை நூறைத்தாண்டிய என் பதிவுகளில் ஒரு வருடத்துக்கு முதல் எழுதிய நான் கண்ட காதல் எனும் பதிவை தெரிந்தெடுத்து பத்திரிகையில் பிரசுரித்த யாழ்தேவி நிர்வாக நண்பனுக்கு கோடி நன்றிகள்!!!//


  வாழ்த்துகள்


  //அதை உறவினர்கள் பார்த்து மகிழ வேண்டுமென அக்கறை எடுத்து அவர்களுக்கு தொலைபேசிய உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்தாலும் தகாது. கண்ட காதலை, கொண்ட காதலாக கொண்டாடியவர்களை நினைத்து என் தலையில் அடித்துக் கொள்கின்றேன்.//

  வாழ்த்துகள்


  //அது மட்டுமா? அந்தப் பதிவைத்தான் யாத்ரா புத்தகத்திலும் இட்டுள்ளார்களாமே//

  வாழ்த்துகள்

  ReplyDelete
 5. என்னது மூன்றாவது வாரமா? நான் இந்த முறை வாழ்த்து சொல்லமாட்டேன். ட்ரீட் தான் வேண்டும் யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இது. அண்ணே காதல் என்றால் என்ன அப்பிடி ஏதாச்சும் உங்கள் வாழ்க்கையில் வந்ததா?

  ReplyDelete
 6. அப்புறம் பழையபடி பனர் மாத்திட்டிங்க. இது நல்லாய் இருக்கு. முதல் வரு பனர் மாத்தி இருந்த காரணம் என்னவோ? இரண்டு கேள்வி கேட்டிருக்கேன் கடையம் பதில் சொல்லணும் இல்லை?????

  ReplyDelete

You might also like