Search This Blog

Thursday, July 30, 2009

காதலும் கத்தரிக்காயும்

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..." மனது இப்படித்தான் ஆறுதல் வேண்டிக் கிடந்தது. அதில் உண்மை கூட இருந்தது. நேற்று வரை நடந்தவைகள் நகுலனுக்கு நல்லவைகளாகத் தான் இருந்தன. இன்று நடப்பதை ஏற்க மனது முரட்டுப் பிடிவாதம் பிடித்தாலும், உண்மை அதுவன்றோ....!

"அவள் சந்தோசமாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி." உற்றுப்பார்த்தான். அவள் முகம் மலர்ந்துதான் இருந்தது. அதனால் தானோ இந்த வார்த்தைகள் இப்போது நகுலனுக்கு சுடுகின்றன. அவள் விருப்பமின்றி கூட இப்படி நடந்திருக்கலாம் அல்லவா...? வெளிநாட்டு மாப்பிள்ளை - அதுவும் "கார்ட்" கிடைத்தவன் என்றதும் அக்காளுக்கு அவன் தந்தை நடாத்தி வைத்த திருமணம் போல... "படிக்கப்போறேன்... படிக்கப்போறேன்..." என அவன் அக்கா எத்தனை தடவை கெஞ்சிப்பார்த்தாள். படித்து என்னத்தைக் கிழிக்கப்போறாய் என்ற தந்தையின் கர்ணகடூரம் கனடாவிலிருந்து வானைக்கிழித்துக் கொண்டு ஒருத்தனைக் கொண்டு வந்ததில் முடிந்தது.

"சுதந்திரி... இல்லையில்லை... கணபதி சுதந்தரி..."
பல்கலைக்கழகத்தில் தந்தை பெயரை இணைத்துச் சொல்ல வேண்டுமென்பது முதலாம் வருட விதிகளில் ஒன்று. ராகிங்கின் தொடக்கப்புள்ளியும் இதுதான். இப்படித்தான் முதலாம் வருட சுதந்தரி இரண்டாம் வருட நகுலனுக்கு அறிமுகமானாள். அம்மா பெயர், அப்பா தொழில், சகோதரங்கள் எத்தனை, என்ன செய்கிறார்கள் என்று சுபமாக ஆரம்பித்து... சீனியரில் எந்த அண்ணா வடிவு, சீனியரில் யாரைப் பிடிச்சிருக்கு, லவ்வு இருக்குதா, அது இருக்குதா, இது இருக்குதா என்ற மிரட்டல்களின் இறுதியில்..... நீ ஒவ்வொரு நாளும் என்னுடன் கதைக்க வேண்டுமென சுதந்தரிக்கு நகுலன் சொன்ன போது, அதுவரை இருந்த சீனிய ர் என்கின்ற மேலாண்மை உடைந்து சிதறி, ஒரு இறைஞ்சல் இழையோடியது. ஒரு நேரச் சாப்பாடு கேட்டு பிச்சைக்காரன் ஒருத்தன் நகுலனைக் கெஞ்சியது ஞாபகம் வந்து தொலைந்தது.



மிஸ் கோல்களினால் கூட உறவுகள் தொடரலாம் என்பதும், இரவு பதினொன்று ஐம்பத்தைந்துக்கு சிணுங்குகின்ற குட்நைட்டுக்களாலும், பின்னர் ஐந்தே ஐந்து நிமிடம் தாண்டி வரும் குட்மோர்னிங்களாலும் நலம் பேணலாம் என்பதும் ஆச்சரியமளிக்காத உண்மைகள்.

அவளுக்கு அவன் எப்போதும் 'அண்ணா'வாகவும், அவனுக்கு அவள் தங்கையாக அல்லாமல் எப்போதும் சுதந்தரியாகவும்தான் இருந்தார்கள். அவளுக்கு அவன் 'நகுலனாக' இல்லாதவரை வெளியுலகம்(த்துக்கு) மெய்ப்பித்த நட்பு வாழ்ந்துகொண்டுதான் இருந்தது.

பல்கலைக்கழக மூன்றாம் வருடத்தில் ஒருநாள் நகுலன் அடித்தளத்தை ஆராய முற்பட்டான்.
"இனிமேல் நீர் என்னை நகுலனென்றே கூப்பிடு..."
"அதெப்படி..."
"நான் சுதந்தரியென பெயர் சொல்லி கூப்பிடுகிற மாதிரி..."
"ஒரு சீனியரை எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறது...?"
"சீனியர்... ஜூனியர் எல்லாம் முதல்வருடத்திலேயே போய் விட்டுது..." அப்படியாயின் இது என்ன உறவென்று அவள் கேட்டிருந்தால், நகுலனுக்குப் பதில் இருந்திருக்காது. சிலவேளை அன்றே கட்டுடைந்திருக்கும்.

"எப்படியென்றாலும் வயது கூடினவைகளை நான் பெயர் சொல்லிக் கூப்பிடமாட்டன்..." முடிவாகச் சொன்னாள்.

"சரியான பிடிவாதக்காரியாக நிற்கிறாய்... உனக்கு வாறவன் என்ன பாவம் செய்தவனோ..." சொன்னவாறு ஓரக்கண்ணால் அவள் முகத்தை திருடினான். கண்ணைச் சிமிட்டி, உதடுகளைச் சுழித்து, செல்லமாகச் சிணுங்கி... அந்தளவும் அவனுக்குப் போதுமாக இருந்தது. எங்கோ ஒரு வெளி நோக்கி அவன் முகம் திரும்பியது.

எவருக்கும் தெரியாமல்... யாருக்கும் புரியாமல் வளர்ந்து விட்ட அப்பயிர் இனிக்கருகித்தான் போகுமா? சீ... அவளுக்கு கம்பஸ் முடிஞ்ச போதாவது சொல்லியிருக்க வேண்டும். யார் கண்டது... எனக்கு வெளிநாடு விருப்பமில்லை என்ற போது, தனக்கும் வெளிநாடு விருப்பம் இல்லை என்றவள்... முடிவுகள் காலத்துடன் மாறித்தான் போகின்றன.
★★★

நண்பர் ஒருத்தரின் காதல்கவிதைகளின் தாராளங்கள் தாங்க முடியவில்லை. நடந்தால், இருந்தால், நின்றால்... மழை பொழிந்தால் கூட அவருக்கு காதல் வருகின்றது.

அவரைச் சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேன். அவர் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் நோண்டியெடுத்து என் அர்த்தம் விளக்கி ருவீட்டிக் கொண்டிருந்தேன். அவர் எரிச்சல் அடைந்திருக்க வேண்டும். அதுதானே எந்நோக்கமும்...

"காதலும்... கத்தரிக்காயும்..." அவரிடமிருந்தே வந்தது. ஆனால், நல்ல காலம் எனக்குப் பதிலாய் வரவில்லை. இன்னொருத்தர் என் பங்கையும் சேர்த்து வாங்கியிருந்தார்.

காதலுக்கும் கத்தரிக்காயுக்கும் என்ன சம்பந்தம்? எதுகை மோனை நிறுவல்களை ஏற்க முடியவில்லை. "காதலும் கதலியும்..." இங்கே எதுகை மோனைகள் விஞ்சி நிற்பதாய் உணர்கின்றேன்.

கால ஓட்டத்தில் நாம் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால், ஓரிடத்தில் கவிஞன் இப்படி எழுதி வைத்தான்.
"
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?"

இன்னும் ஓரிடத்தில் விளக்கம் இப்படி இருந்தது.
கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்தாகனும் அப்படின்னு ஒரு பழமொழி இருக்குங்க. அர்த்தம்: ஒரு விஷயத்த (காதல) ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது.

சொல்வதில் உண்மை இருந்தாலும், காதலை எறிந்து பேசும் பொழுதில் தானே கத்தரிக்காயும் சேர்ந்து விடுகிறது.
★★★

லண்டன் மாப்பிள்ளை... யாழ்ப்பாணப் பொம்பிள்ளை... கல்யாணம் கொழும்பில்... மண்டபத்தை நிரப்புவதற்காகவும், ஓர்டர் கொடுத்த சாப்பாட்டுக்கு நட்டம் வராமல் இருப்பதற்காகவும் இயலுமானவரை எல்லோருக்கும் சொல்லியும் கதிரைகள் பல வெறுமையாக இருந்தன.

சபையோரின் தொட்டுக் கும்பிடுதல் முடிந்து, சுதந்தரியின் கழுத்திலே மூன்று முடிச்சுப் போடும் முகூர்த்த நேரம்... மேள தாளங்களுடன் நாதஸ்வரம் உச்சஸ்தாதியில் ஒலிக்கின்றது.

"காதலும் கத்தரிக்காயும்..." காதுக்குள் யாரோ இரைவது போன்றிருந்தது நகுலனுக்கு. ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைத் தெருவுக்கு வராத கத்தரிக்காயொன்று வாடி விழுந்தது.

பிற்குறிப்பு 1: அண்மைக்காலமாக நான் ரசித்துப்படிக்கும் காதல் கவிதைகள் இங்கே.

பிற்குறிப்பு 2: காதலும் கத்தரிக்காயும் எனும் தலைப்பின் கீழ் சுவாரசியம் கலந்த பின்னூட்டங்களுடனான இடுகையொன்று சாரலில் இருந்தது. சாரலும் இடம்மாற அதையும் காணக்கிடைக்கவில்லை. அதை மீள்பதிவிடமுடியுமா?

23 comments:

  1. // ஒரு நேரச் சாப்பாடு கேட்டு பிச்சைக்காரன் ஒருத்தன் நகுலனைக் கெஞ்சியது ஞாபகம் வந்து தொலைந்தது.

    நன்றாயிருக்கு உவமானம்..

    ReplyDelete
  2. காதல் கவிதைகள் எழுதக் காதலிக்கத் தேவையில்லை சின்ன இரசனை மட்டும் இருந்தால்ப் போதும் என நான் நினைக்கின்றேன்..

    ReplyDelete
  3. // இருந்த சீனிய ர் என்கின்ற மேலாண்மை உடைந்து சிதறி, ஒரு இறைஞ்சல் இழையோடியது.

    சொந்த அனுபவமோ..
    யாரும் இப்படிப் போய் மாட்டினிங்க..

    ReplyDelete
  4. உங்களது பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்துவருகின்ற ஒருவர் நான்..
    ”தகுதிகள்” என்னும் தலைப்பில் தாங்கள் எழுதிய கதையும் இந்தக் கதைக்கும் நீங்கள் எடுத்திருக்கின்ற கதைக்களம் மற்றும் கரு என்பன ஒரே தன்மை வாய்ந்ததாக இருக்கின்றதே.. அதாவது தாங்கள் இப்படியான கருவொன்றினால் பாதிப்புக்குள்ளானவர் போலத் தோன்றுகின்றதே..
    ?

    ReplyDelete
  5. அந்த லிங்கைதான் நானும் தேடுகிறேன் :)
    இருந்தால் சொல்லவும்

    ReplyDelete
  6. //முடிவுகள் காலத்துடன் மாறித்தான் போகின்றன.
    கதையின்ர முடிவை மாத்துங்கப்பா!!!
    கவலையாயிருக்கு.... :( :(
    எந்தனை நாளுக்குதான் சோகப்படம் ஓட்டப்போறிங்க?

    ReplyDelete
  7. @கார்த்தி

    //கதையின்ர முடிவை மாத்துங்கப்பா!!!
    கவலையாயிருக்கு.... :( :(


    கார்த்திக்காக மட்டும்,

    பிற்குறிப்பு-01 க்கு முன்னைய பந்தி இப்படி மாறியது.

    ஓங்கி ஒலித்த நாதஸ்வரங்கள் திடீரென அமைதி காத்தன. சபையின் குறுக்கே பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய்(?) புயலென சுதந்தரி எழுந்து வந்தாள். சொல்லாத காதல் ஒன்று சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட, நகுலனின் கழுத்திலே மாலைகள் தவழ்ந்தன.

    ReplyDelete
  8. என்ன முடிவிது.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. சொல்லாத காதல் எப்படி.. அவ்வளது துணிவு அந்த நேரத்தில் வரும்.. சொல்லியே பலகாதல்கள் புரியாத போது சொல்லாத காதல்.. முத்தின கத்தரிக்காய்தான் காற்காசுக்கும் பெறாது..

    ReplyDelete
  9. @சுபானு
    //என்ன முடிவிது.. என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. சொல்லாத காதல் எப்படி.. அவ்வளது துணிவு அந்த நேரத்தில் வரும்.. சொல்லியே பலகாதல்கள் புரியாத போது சொல்லாத காதல்.. முத்தின கத்தரிக்காய்தான் காற்காசுக்கும் பெறாது...

    சுபானு அடம்பிடிக்கதீர்கள். அதுதானே முதலிலே சொல்லிவிட்டேன் கார்த்திக்காக மட்டும் அந்த முடிவு என...


    // சொல்லியே பலகாதல்கள் புரியாத போது சொல்லாத காதல்..

    அதுவும் பல காதல்கள்...

    ReplyDelete
  10. கார்த்தி, சின்னப்பிள்ளைத்தனமா சினிமா படத்தில் மட்டும் நடக்கும் முடிவையெல்லோ கேக்குறீர்.....
    சிலவேளைகளில் உண்மை உறைக்கத்தான் செய்யும். என்ன செய்ய? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  11. அச்சச்சோ அச்சச்சோ.... திடீரென்று ஒரு இடத்தில நகுலன் நந்தன் ஆயிட்டானே?? எப்பிடி?.. அப்ப இது நகுலன் கதை இல்லை நந்தன் கதையோ?

    ReplyDelete
  12. கீத், எழுத்துக் கூட்டி வாசிப்பதில் நீர் பலே கில்லாடியப்பா...

    ReplyDelete
  13. @கீத் குமாரசாமி
    கீத்த்த்த்த்த்..............
    ஏற்றுக் கொள்கின்றேன். பழகின ஒருத்தனில் பழியைச் சுமத்தாமல் தப்ப எண்ணினேன். மாட்டுப்பட்டுவிட்டேன்.
    தவறுதலாக வந்த நந்தன் இப்போது நகுலனாகிவிட்டான். நன்றி கீத்...

    ReplyDelete
  14. // அப்ப இது நகுலன் கதை இல்லை நந்தன் கதையோ?
    நானும் பார்த்தேன் திடீரென்று நகுலன் நந்தனாகிட்டான் வேண்டுமென்று செய்யப்பட்ட மாற்றமோ தெரியவில்லை????
    நந்தன் கதையோ நகுலன் கதையோ முடிவு ஒண்டுதானே!!!

    ReplyDelete
  15. @கார்த்தி
    //நந்தன் கதையோ நகுலன் கதையோ முடிவு ஒண்டுதானே!!!

    சம்பவத்தின் முடிவு நந்தனை நகுலனாக்கியது என்று வைத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  16. எனக்காக இன்னொரு முடிவுக்கு ரொம்ப நன்றி...

    //கார்த்தி, சின்னப்பிள்ளைத்தனமா சினிமா படத்தில் மட்டும் நடக்கும் முடிவையெல்லோ கேக்குறீர்.....
    என்ன செய்ய நல்ல முடிவை போட்டாதானே படம் ஹிட்டா ஓடும். அது மாதிரிதானே புளொக்கும். :)

    ReplyDelete
  17. சுதந்திரிJuly 31, 2009 at 9:14 AM

    //நந்தன் கதையோ நகுலன் கதையோ முடிவு ஒண்டுதானே!!!!!!!!!!!

    கார்த்தி
    எல்லா காதலுக்கும் முடிவு ஒரே மாதிரி இருக்காது.
    காதல் என்றும் தோற்பதில்லை.

    ReplyDelete
  18. ஆம்.. காதல் என்றும் தோற்பதில்லை.. ஆனா காதலித்தாட்கள் தோற்றுவிடுவார்கள் :)

    ReplyDelete
  19. பார்த்து தெரிந்த அனுபவங்களா? சொந்த அனுபவங்களா???

    :)

    ReplyDelete
  20. சொந்தக் கதைபோல் இருக்கின்றது

    ReplyDelete
  21. என் முதல் வருகை நண்பரே... உங்கள் இடுகைகள் அருமை தொடர்கிறேன்...

    ReplyDelete
  22. @கண்ணன்
    //பார்த்து தெரிந்த அனுபவங்களா? சொந்த அனுபவங்களா???

    @வந்தியத்தேவன்
    சொந்தக் கதைபோல் இருக்கின்றது

    இதெல்லாம் சொந்தக்கதைகள் அல்ல. பார்த்துத் தெரிந்தவையாக இருக்கலாம்.

    ReplyDelete
  23. @சந்ரு
    //என் முதல் வருகை நண்பரே... உங்கள் இடுகைகள் அருமை தொடர்கிறேன்...


    நன்றி சந்ரு. தொடர்ந்தும் வருக

    ReplyDelete

You might also like