எனக்குத் தெரிந்த இரண்டு கமல் பைத்தியங்களில் இவரும் ஒருத்தர். ஆனால், சினிமா பைத்தியக்காரன் அல்ல... உலகநாயகனுக்காக உருகி வழிகின்ற இவரைக் கமலஹாசன் அகராதி என்றால் கூட தப்பில்லை. கமலைப்பற்றி என்ன வேண்டுமோ இவர் கை நுனிவிரலில் கிடைக்கும்.
இத்தனை அகவைகளைத் தாண்டிவிட்ட பின்னும் குழந்தைத்தனம் மாறாத இவரின் "கொல்" என்ற சிரிப்பு சிலவேளைகளில் எரிச்சல்களை தந்திருக்கின்றன. ஏனெனில், அதனால் தானே இன்னமும் பச்சிளம்பாலகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.
இலவச ஆயிர நிமிட தொலைபேசி சேவைக்கு உரித்துடையவர். இவருக்கு அழைப்பெடுக்கும் எவருக்கும் இது தெரிந்திருக்குதோ இல்லையோ அந்த ஆயிர இலவச நிமிடங்களும் கரியாகிக் கொண்டிருக்கின்றது என்பது மட்டும் புரிந்திருக்கும். பிறகென்ன.. நான் அழைப்பெடுக்க அதை அணைத்துவிட்டு திருப்பி அழைப்பெடுக்கும் பெரும் மனசு யாரிடமிருக்கும்.
வாரத்தில் குறைந்தது ஐந்து இரவுகளிலாவது எவருக்கும் தெரியாமல் எங்கோ ஒளிந்திருந்து அந்த நான்கு பேரும் கும்மியடிப்பார்கள். சிலருக்கு மூக்குடைபடும்... சிலருக்கு டவுசர் கிழியும்... நீலம், பச்சை, வெள்ளை வண்ணங்கள் வரும்... சில வேளைகளில் முட்டி மோதி கும்மி முடியும். ஆனாலும், சொந்தச் செலவில் கருத்துக்களை உதிர்த்து சூனியம் வைப்பதில் இவருக்கு நிகர் இவரே...
உன்னைப் போல் ஒருவன்... இவருடன் இணைந்து பார்த்த முதல் படம். அதிர்ஸ்டவசமாக அது கமலின் படம். இடைவேளையில் இவரும் லோஷன் அண்ணாவும் சொன்ன "கமலிடம் எதிர்பார்த்தவைகள்" இறுதிப் பாகத்தில் பேசப்பட்டது இன்னமும் எனக்கு பிரமிப்பைத் தருகின்றது.
தோசை... முதன்முதலாய் இருவரும் சேர்ந்து உண்ட உணவு. அந்தத் தோசை உண்பதற்காய், அதிகாலை ஐந்து மணிக்கு புல்லட்டின் கதவுகள் தட்டப்பட்டது ஊரறிந்த இரகசியம். அன்று தான் தெரிந்தது இவர் ஒரு தாவர உண்ணி என... :)
எல்லோரையும் இவருக்குப் பிடிக்கும் எனப் பொய் சொல்ல மாட்டேன். ஏனெனில், நடிகர் விஜய் உள்ளாரே....
இவர் அண்மையில் செய்த சாதனை: இருக்கிறம் சந்திப்பு முடிய சுபாங்கனின் துணையுடன் பத்திரமாக வீடு போய்ச் சேர்ந்து, இரவு பன்னிரண்டு மணிக்கு யாரோவென எண்ணி எனக்கு அழைப்பெடுத்து கதைத்து தொலைத்தது. ஒரு பொல்லாப்பும் இல்லை.
மிக விரைவில் எங்களுக்கு கிடைக்கப் போகும் இனிய செய்தியொன்றும் உள்ளது. இந்தத் தேவனுக்கு ஒரு தேவதை... இளவரசனுக்கு ஒரு இளவரசி!!!
இத்தனையும் எதற்காக என்கிறீர்களா...?
இன்று இவருக்கு பிறந்த நாள்.
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வந்தியரே...
எனது வாழ்த்துக்களும் அண்ணாவுக்கு....
ReplyDeleteதொடாந்து பலகாலம் பச்சிளம் பாலகனாக வாழ எனது வாழ்த்துக்கள்....
அருமையான ஒரு பிறந்தநாள் பரிசு..
ReplyDeleteஒவ்வொரு வரிகளிலும் தொனித்த பல்பொருள் அர்த்தங்களையும் ரசித்தேன்..
வந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஆதிரைக்கு சுவை நயத்துக்கு வாழ்த்துக்கள்..
இலவச ஆயிரம் நிமிடங்களும், இளவரசியே தேவதையாகக் கிடைக்கப் போகிறார் என்பது எனக்குப் புதியவை..;)
எது நடந்தாலும் அந்த இன்ஸ்டன்ட் சிரிப்பு மட்டும் மறையக் கூடாது என வாழ்த்துகிறேன்..
பிறந்தநாள் வாழ்த்துகள், அந்த இனிய செய்திக்கும் சேர்த்து...!!!
ReplyDeleteவந்தி அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :))))
ReplyDeleteஆதிரை உங்களின் வாழ்த்துப் பதிவு வந்தி அண்ணாவின் அறியாத விடயங்களை அறிய தந்தது.
பதிவுக்கு நன்றி.
மூஞ்சிப் புத்தகத்தில ஏலவே வாழ்த்தினாலும் மீண்டும் வாழ்த்துக்கள் வந்தியருக்கு
ReplyDelete14வது (என்னிடம் இப்படித்தான் பச்சிளம் பாலகன் சொல்லச் சொன்னார்) பிறந்த நாளைக் கொண்டாடும் வந்தியருக்கு என்னுடைய வாழ்த்துக்களும். ஆதிரையின் பதிவில் ஆயிரம் அர்த்தங்கள். பதிவுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவந்திக்கு அழகான பிறந்த நாள் பரிசு...
ReplyDeleteவாழ்த்துக்கள் இருவருக்கும்
வாலிப வயதைக் கடந்தும் வாலிபனாகத் துடிக்கும் முத்த........... மன்னிக்கவும் மூத்த பதிவர் வந்தி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிரைவில் மேளதாளங்கள் ஒலிக்கப்போகிறதாமே உண்மையா?
ம்ம்... அருமையான பரிசு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
ReplyDelete//இளவரசியே தேவதையாகக் கிடைக்கப் போகிறார்//
இது உண்மையா? பேயை தான் திருமணம் முடிக்கப்போவதாக என்னிடம் சொன்னாரே....? எது தவறான செய்தி???
கவலையை விடுங்கள்....
நம் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் அனைவருக்கும் பிறந்த நாள் Treat தந்து அசத்தப்போகின்றாராம் :) :) :)
தேவதையைக் கரம்பிடிக்கப் போகும் வந்தி மணாளனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுலகில் சாகசமும் பச்சிளம் பாலகனாய் பலவயதும் கண்ட என் மாமா வந்திக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாவி மனிஷா நான் கால் பண்ணும் புது கட பண்ணாமல் ஆண்செர் பன்னிரிங்களா? இளவரசி ???/
ReplyDeleteவந்தி
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பதிவுலக மார்க்கண்டேயன், பச்சிளம் பாலகன், சிந்தனைச் சிற்பி, சிரிப்பின் சிகரம் வந்தி அண்ணாவுக்கு இனிய நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete// இரவு பன்னிரண்டு மணிக்கு யாரோவென எண்ணி எனக்கு அழைப்பெடுத்து கதைத்து தொலைத்தது. ஒரு பொல்லாப்பும் இல்லை.
//
இதுவேற நடந்திருக்கா?
அண்ணி மேட்டர் புதுசு. விருந்து எப்போ?
வந்தியண்ணாக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பிறந்த நாள் பரிசு.
//இருக்கிறம் சந்திப்பு முடிய...
அண்டைக்கு மழை எண்ட படியால் தண்ணீல மிதந்திருப்பார். அது ஒத்துக் கொள்ளாததால அப்பிடி நடந்திருப்பார். ஆதிரை அண்ணா அதையெல்லாம் பெரிது படுத்தாதேங்கோ...
நன்றிகள் ஆதிரை என்னைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கின்றீர்கள். என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.
ReplyDeleteNice Interpretation abt Vanthi...
ReplyDeleteWish him the late wishes..