Search This Blog

Wednesday, March 3, 2010

ஓருயிரல்ல...

கொதித்துக் கொண்டிருந்தது புகையிரத தண்டவாளம்...
அருகில் துடித்துக் கொண்டிருந்த தலையில்
வளர்ந்திருந்த சிகைதான்
அடையாளம் காட்டியது பெண்ணென்று...
ஐஞ்சு மீற்றர் இருக்கலாம்
எஞ்சிய உடல் குருதி வெள்ளத்தில்...

காதல் தோல்வி
எப்போதும் போலவே முந்திக்கொண்ட சந்தேகம்...
குடும்ப வறுமை...
தீராத நோய்...
பரீட்சையில் தோல்வி...
வாழ்க்கையில் விரக்தி...
ஊர் கூடிக் காரணம் கற்பித்தது.
“படிச்சவள் செய்யிற வேலையா இது...?”
ஆதங்கங்களும் எரிச்சல்களும்
செத்துப்போனவளை விசரி என்று சபித்தன.

பொலீஸ் வந்தாயிற்று...
மஞ்சள் கோடும் கீறியாச்சு...
நீதிபதி வரவுக்காய்
தலையும் முண்டமும் சேராமல் காத்திருந்தன.
கேரளா நதியில் தேனிலவு கொண்டாடும்
அவள் காதலனுக்கு மட்டும் தெரிந்திருந்தது
செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!!

29 comments:

  1. // கேரளா நதியில் தேனிலவு கொண்டாடும்
    அவள் காதலனுக்கு மட்டும் தெரிந்திருந்தது
    செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!! //

    :'(

    ReplyDelete
  2. அருமை ஒர் உயிர் அல்ல ஈருயிர்...எல்லா போலி காதலும் இப்படி ஈருயிர் கலந்தபின் ஒர் உயிர் பிரிகிறது உலகைவிட்டு.

    ReplyDelete
  3. அந்தக் கடைசிவரி :(

    ReplyDelete
  4. நன்றாகயிருக்கிறது ஆதிரை. முடிவு சிந்திக்க தூண்டுகிறது

    ReplyDelete
  5. // கேரளா நதியில் தேனிலவு கொண்டாடும்
    அவள் காதலனுக்கு மட்டும் தெரிந்திருந்தது
    செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!! //


    தற்கொலைக்கும் அதற்கு முதலும் இருந்த துணிவு பிறகு எங்கே போனது..
    இதில் பிழை 75 % பெண்ணில் தான்.
    கவிதை நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நிஜமாவே இருக்கு. பட் பீல் பண்ணி எழுதினா தான் இப்படி எழுத முடியும் இன்னு தோணுது.. அது தான் எங்கையோ உதைக்குது..

    ReplyDelete
  7. கடைசி வரி....ம்ம்
    ஆண்களை சாடுகிறீர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

    ReplyDelete
  8. கவிதை முடிவு நல்லா இருக்கு,
    ஆனால் அந்த பெண்ணோட முடிவு சரி இல்லை.

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நான் வேங்கை சொன்னதை ஆமோதிக்கிறேன்

    கடைசி வரி கவுத்திட்டிங்க ஆண்களை

    ReplyDelete
  10. நான் வேங்கை சொன்னதை ஆமோதிக்கிறேன்

    கடைசி வரி கவுத்திட்டிங்க ஆண்களை

    ReplyDelete
  11. நான் வேங்கை சொன்னதை ஆமோதிக்கிறேன்

    கடைசி வரி கவுத்திட்டிங்க ஆண்களை

    ReplyDelete
  12. யதார்த்தம் அத்தனையும் உண்மை.
    சரியாத்தான் புரிஞ்சிருக்கிறீங்கள்
    அருமை..........அருமை..........

    ReplyDelete
  13. நல்லா இருக்கு!! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்களின் பிரச்சினையை யதார்த்தத்தை புரிந்துகொண்டு எழுதியிருக்கிறது உண்மையிலேயே பாராட்டுக்குரியது......

    ReplyDelete
  15. நெஞ்சைத் தொட்டது.

    ReplyDelete
  16. கவுதை கலக்கல்... இறுதிவரிகள் நெஞ்சை தொடும் வரிகள்...


    வாழ்த்துக்கள் அண்ணா...... நல்லா இருக்கு

    ReplyDelete
  17. ம்ம்! பெண்கள் கவனமாக இருக்குவேணும்.. ஆனால் ஏன் கேரளாவை இதற்குள் இழுத்தீர்கள்? ஏதாவது உண்மையான தற்கொலைச்செய்தியின் விளக்கமோ? எனக்கு தெரியவில்லை.. இலங்கையில் உப்படி உதுவும் நடப்பதில்லை என்பது சந்தோசம்..

    என்றாலும் நல்ல கருத்து!

    ReplyDelete
  18. //ம்ம்! பெண்கள் கவனமாக இருக்குவேணும்.. ஆனால் ஏன் கேரளாவை இதற்குள் இழுத்தீர்கள்? ஏதாவது உண்மையான தற்கொலைச்செய்தியின் விளக்கமோ? எனக்கு தெரியவில்லை.. இலங்கையில் உப்படி உதுவும் நடப்பதில்லை என்பது சந்தோசம்..

    என்றாலும் நல்ல கருத்து! //

    புல்லட் அண்ணா இதுக்கு முதல் சீரியஸாகப் பின்னூட்டியது இலங்கனின் தமிழில் மாற்றங்கள் பதிவுக்கு...
    அந்தப் பதிவுக்கு என்ன நடந்தது என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.
    இங்கும் அவர் சீரியஸாகப் பின்னூட்டியிருப்பதால் இதிலும் ஏதோ ஆப்பு வர வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன்.
    எதற்கும் கவனமாக இருக்கவும்...

    ReplyDelete
  19. //செத்துப் போனது ஓருயிர் அல்ல... ஈருயிர்!!!//
    என்ன அண்ணா, காதலன் விட்டிட்டு போக முதல் ஏதும் கசமுசா பண்ணிட்டானா? ;)

    ReplyDelete
  20. தமிழ் மதுரம்March 6, 2010 at 4:25 PM

    சோகங்களைத் தாங்கிய ஆதங்க வெளிப்பாடாய்க் கவிதை அமைந்துள்ளது??

    ‘’கொதித்துக் கொண்டிருந்தது புகையிரத தண்டவாளம்...
    அருகில் துடித்துக் கொண்டிருந்த தலையில்
    வளர்ந்திருந்த சிகைதான்
    அடையாளம் காட்டியது பெண்ணென்று...

    கவிதையின் ஆரம்ப வரிகளிலே தெரிகிறது கவிஞனின் கவிதைத் தார்ப்பரியம்... வாழ்த்துக்கள் ஆதிரை....

    தாங்களும் காதல் வசப் பட்டதாகக் கேள்வி உண்மையோ? (புல்லட் பாண்டியின் ரகசியப் புலனாய்வுத் தகவல்)

    ReplyDelete
  21. என்ன இந்த முறை பெண் காதல்??

    ReplyDelete
  22. இது உங்கள் 100 ஆவது பதிவல்லவா? எண்ணிக்கை அவ்வாறு சொல்கின்றது...

    பதிவு அருமை...

    ReplyDelete
  23. 100 ஆவது பதிவு என்ற மைல்கல்லுக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  24. உங்களை 100ஆவதாக பின்தொடர்கிறேன்...

    (ஹி ஹி... :) 3 கோபி உதுக்குள்ள இருக்கிறான்.... )

    ReplyDelete
  25. கருத்துரைத்த அனைவருக்கும் நன்றிகள்.

    வரோ, கோபி...,
    எழுதிவைத்து வெளியிடாமல் இருக்கின்ற பதிவுகள் பலவாயினும், இது நூறாவது பதிவுதான். நன்றிகள்.

    ReplyDelete
  26. @தாருகாசினி
    //ஒரு ஆணாக இருந்துகொண்டு பெண்களின் பிரச்சினையை யதார்த்தத்தை புரிந்துகொண்டு எழுதியிருக்கிறது உண்மையிலேயே பாராட்டுக்குரியது......//

    பெண்களின் பிரச்சினையை - அல்லது ஆணின் பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் மனது பால் வேறுபாடு எதுவும் பார்த்துக் கொள்வதில்லை என்பது என் கருத்து.

    உங்கள் பாராட்டுக்கு நன்றிகள்

    ReplyDelete
  27. @கமல்
    //தாங்களும் காதல் வசப் பட்டதாகக் கேள்வி உண்மையோ? (புல்லட் பாண்டியின் ரகசியப் புலனாய்வுத் தகவல்)//

    புஷ்வானமாகிப் போன புல்லட்டின் புலனாய்வை நம்பிய உங்களை என்ன செய்யலாம்...

    ReplyDelete
  28. சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
    http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

    ReplyDelete

You might also like