Search This Blog

Friday, January 9, 2009

பல்கலை வந்து பார்

வைரமுத்துவுக்கும் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நேற்றுத்தான் அந்தக் கவிதையை படித்தேன். எலிபிடிக்கப் போன லோசன் அண்ணா கடைசியில் கைப்பற்றி வந்த பொக்கிசம் அது. ஃபெயில் பண்ணிப்பார் எனும் தலைப்பில் 1997 களில் தான் அனுபவித்தவைபற்றி எழுதியிருந்தார். அக்கவிதையைப் படித்துக் கொண்டிருந்தபோது தான் எனக்குள்ளும் ஒரு உசுப்பல். பல்கலையில் இரண்டாம் வருட பரீட்சை முடிந்தபின் கிறுக்கிய கிறுக்கல்கள் ஞாபகம் வந்தது. கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற ஒருவித வெறியுடன் பழைய புத்தகங்கள் எல்லாம் தேடிப்பார்த்தேன். ம்ஹூம்... கிடைக்கவேயில்லை அந்தக் கிறுக்கல். என்னிடம் பாடக்குறிப்புக்களை கடன் வாங்கிக்கொண்ட தம்பிமாரின் (சத்தியமாக தங்கைகள் இல்லை) கைகளில் சிக்கியிருந்தால் தந்துதவுவீர்களாக... கோடி புண்ணியம் கிடைக்கும்.

எனினும், அன்று நான் கிறுக்கியிருப்பேன் என இன்று எண்ணுபவைகளுடன் இன்னும் சிலவற்றை சேர்த்து, பலவற்றை மறந்திருப்பினும் ஞாபகம் உள்ளவற்றிலும் சிலவற்றை நீக்கி இன்றிரவு என் தூக்கத்துக்கு ஆப்பு வைத்ததுதான் இந்த "பல்கலை வந்து பார்". லோசன் அண்ணாவினை எப்படி சகித்தீர்களோ அதற்கு மேலாகவும் சகிப்புத்தன்மை, பொறுமை பெற வேண்டுமா? (குருவி பார்க்காதவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு) மேலே செல்க...


பல்கலை வந்து பார்...
"இஞ்சினியர் மாப்பிள்ளை - அல்லது
பொம்பிள்ளை"
வாழ்த்தி அனுப்பிய ஊர்
பப்பா மரத்தில் ஏற்றியதை
முதல் நாளிலேயே உணர்வாய்.
முதல் நான்கு நாட்களும்
நான்கு வருட தேரோட்டத்துக்குத் தயார் செய்தலாம்.
நீ கடைசி வரிசையில் கண்மூடித் துயிலுவாய்
உன்னைத் தயார்படுத்திய வாறு...

உன்னை வரவேற்க
'சீனியர்' கொடுத்த
'கிரிபத்'உம் 'கிரி பக்கற்'உம்
அன்று முதல் உனக்கு காலை உணவாகும்...

பல்கலை வந்து பார்...
கூடிப்பேசுவோமென்று
கூட்டிச் செல்வதுதான்
உனக்குப் பகிடிவதை...
தொடமாட்டார்கள்; - ஆனால்,
கதைத்தே உன்கதை முடிக்கும்
கனவான்களும் இருக்கின்றார்கள்.
தப்பிக்கப் பார் - முடியாது போனால்
கற்றுக்கொள் தப்பில்லை.
அந்தப் பரம்பரை எப்போதும் அழியக்கூடாது.

உயர்தரத்தில் ஆங்கிலத்திற்கு
கொடி (F) நட்டு வந்தவனாயின்
கொடுத்து வைத்தது உன் விரிவுரைகள்.
கொஞ்சக்காலம் போகப்பிடிக்கலாமென்றது
நாலு வருடம் தாண்டியும் போகலாம்.

3A எடுத்தாலும் பல்கலையில் முதல் நிறுவல்
"பூச்சியத்தையும் பூச்சியத்தையும் கூட்டினால் பூச்சியம்"
பாடமாக்கிய ஸ்ரெப்(step) மறந்திடின்,
பூச்சியமும் பூச்சியமும் சேர்ந்து
ஒன்றாக வந்து நின்று பல்லிளிக்கும்.

பல்கலை வந்து பார்...
சாப்பாட்டை எட்டுப் பேர் பகிர மறுத்தாலும்
Assignment எட்டல்ல...
எண்பது பேருக்கும் ஒன்றுதான்.
Ctrl+C உம் Ctrl+V உம் உனக்கு
சொல்லித்தெரிவதில்லை.
ஈயடிச்சான் கொப்பிக்கதைகள்
காவியக்குவியலாக நிறைகின்றன.
நீ வர மறுத்தாலும் - உன் தோழர்கள்
மறக்க மாட்டார்கள் உன்னையும்
காப்பியத் தலைவனாக்க...

பரீட்சையிலும் திணறாத திணறல்
சகோதர மொழி நண்பனின்
நல விசாரிப்புக்கள் கொண்டுவரும்..!
சிலவேளை மெளனங்கள் தான்
உனக்குரியதாக வேண்டும்...

பல்கலை வந்து பார்...
கடிதங்கள் கிடையாது...
மின்னஞ்சல்களும் இருக்காது...
மிஸ் கோலுகள் தான் உனது காதல் தூதுவர்கள்...
நள்ளிரவு பன்னிரண்டுக்கும்
விடிகாலை மூன்றுக்கும் கூட
வெவ்வேறு முனைகளிலிருந்து தூது வரும்.
சிலவேளை அதிலே செய்தி வரும்.
தொலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றியே
உனக்கு 'கரண்ட் பில்' எகிறும்.

ஒருவருடம் கழிந்து உனக்கு
'சீனியர்' பட்டம் கிடைக்கும் போது
'ஜூனியர்' பிள்ளைகளுக்கு
தேவதை நாமமும் கூடியே வரும்...
நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே
அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.

பரீட்சை.....
ஒரு முறை அனுபவித்துப் பார்...

உனக்கு நரகத்தின் அர்த்தம் புரியும்.
ஆறு மணிக்கு அலாரத்துணையுடன் தூக்கம் கலைந்து -
நூலகத்துக்கு இடம்பிடிக்க வரிசை காத்து -
நூலக மேசைகளிலும் கடைவாய் வடித்து -
'குப்பி'க்கு பறந்து -
'பாஸ் பேப்பருக்கு' தவம் கிடந்து -
படுக்கைக்கு போகும்போது
உனது ஊரில் சேவல் கூவிவிடும்.
பரீட்சை முடிந்த அன்றிரவே
கோட்டை புகையிரத நிலையத்தில்
யாழ்தேவிக்கு காத்திருக்கத்தான்
உனக்கு கொடுத்துவைக்கவில்லை.
பரவாயில்லை...
மீன் ரின்னும் பாணும் போதும்
வெள்ளவத்தை வராத நாட்களை சமாளிக்க...

'குப்பி'க்கு அர்த்தம் தெரியுமா உனக்கு...?
கண்டு பிடிக்க முயற்சி செய்...
அப்போது சில தேவதைகள் கை கோர்க்கலாம்.
வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?
சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...
என்னால் முடியாது.
'வெடி'யின் அர்த்தம் புரிய
அதிக நாட்கள் தேவையில்லை...
இரண்டாவது நாளிலேயே உன் செவிப்பறை வெடித்து விடும்.
இறுதிப் பரீட்சை நெருங்கும்போது
UK எம்பஸிக்கும் ஒரு நாள் ஒதுக்கிடு.

ஆனாலும்...
நீ அழும்போது கண்ணீர் துடைக்க
சொந்தங்கள் பலர் உள்ளனர்...
நீ சுமக்கும் சிலுவை காவ
தோழர்கள் காத்திருக்கின்றனர்.
இன்று பிடிபட்டவனை மீட்பதற்காய் நீயும்
நாளை பிடிபடும் உனக்காக கையெழுத்திட
நண்பர்களும் நிறையவே உள்ளனர்.
துவண்டு விழும் போது
தூக்கி விடுவதற்கும்...
அமிழ்ந்து போகும் போது
வாரி அணைக்கவும்...
கரங்கள் பல உன்னுடன் இருக்கும்.
பல்கலை வந்து பார்...

24 comments:

  1. வசனங்கள் மிக அருமையாக இருக்கின்றன :) :)))

    ReplyDelete
  2. கெளத்திJanuary 9, 2009 at 2:17 PM

    ரொம்ப நல்லாயிருந்திச்சு!!!

    ReplyDelete
  3. //ஒருவருடம் கழிந்து உனக்கு
    'சீனியர்' பட்டம் கிடைக்கும் போது
    'ஜூனியர்' பிள்ளைகளுக்கு
    தேவதை நாமமும் கூடியே வரும்...
    நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே
    அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்//
    மன்மத வாசனை வீசியதா சீனியர் ???

    ReplyDelete
  4. சுதந்திரிJanuary 10, 2009 at 12:54 AM

    நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே
    அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.

    ReplyDelete
  5. அனுபவ பதிவு... ;)

    //
    இறுதிப் பரீட்சை நெருங்கும்போது
    UK எம்பஸிக்கும் ஒரு நாள் ஒதுக்கிடு.//

    ஓ... அப்ப நாங்களும் ஒரு நாள் ஒதுக்குவம்...!

    ReplyDelete
  6. மாயா, கெளத்தி, செந்தில்,
    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    @பிறைதீசன் :: Praitheeshan,
    மன்மத வாசனை வீசியதா சீனியர் ???
    முகர்ந்தவர்களைத்தான் கேட்கவேண்டும். ஆனால், உங்களுக்கு அந்த யோக்கியம் கிடைத்ததாகத்தான் ஊரில் கதை.

    ReplyDelete
  7. நந்தரூபன்,
    வருகைக்கு நன்றி.

    @நிமல்-NiMaL
    அனுபவ பதிவு... ;)
    ம்... கொஞ்சம் சொந்தம். மிச்சம் கடன்...

    ஓ... அப்ப நாங்களும் ஒரு நாள் ஒதுக்குவம்...!
    போகும் போது பட்டமளிப்புக்கான கட்டணங்களை தோழர்களிடம் கொடுக்க மறக்காதீர்கள். சத்தியமாக இது என் அனுபவமல்ல....:)

    ReplyDelete
  8. தமிழ் மதுரம்January 10, 2009 at 3:22 PM

    கவிதை அருமை...அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொருள் விளக்கம் தாங்களேன்??

    ''தொலைபேசிக்கு 'சார்ஜ்' ஏற்றியே
    உனக்கு 'கரண்ட் பில்' எகிறும்.'
    இது ரொம்ப ஓவர்???

    ReplyDelete
  9. @மெல்போர்ன் கமல்
    அதென்னங்க குப்பி??? கொஞ்சம் பொருள் விளக்கம் தாங்களேன்??
    பாடம் ஒன்றைக் கரைத்து குடித்தவன் சொல்லிக்கொடுத்தல் எனும் பெயரில் மற்றவர்களின் மேல் வாந்தி எடுப்பது. சகோதரமொழியிலிருந்து உள்வாங்கப்பட்ட ஒன்று.

    இது ரொம்ப ஓவர்???
    :))))

    ReplyDelete
  10. //'ஜூனியர்' பிள்ளைகளுக்கு
    தேவதை நாமமும் கூடியே வரும்...
    சும்மா போங்கண்ணை, நீங்க ஓவரா ஜோக்கடிக்கிறீங்க‌

    ReplyDelete
  11. அருமை...

    //"இஞ்சினியர் மாப்பிள்ளை - அல்லது
    பொம்பிள்ளை"
    வாழ்த்தி அனுப்பிய ஊர்
    பப்பா மரத்தில் ஏற்றியதை
    முதல் நாளிலேயே உணர்வாய்.

    உண்மையிலேயே பப்பா மரம்தான்...

    ReplyDelete
  12. //கூடிப்பேசுவோமென்று
    கூட்டிச் செல்வதுதான்
    உனக்குப் பகிடிவதை...
    தொடமாட்டார்கள்; - ஆனால்,
    கதைத்தே உன்கதை முடிக்கும்.

    அன்பான கலந்துரையாடலின் தத்துவமே இதுதானே... தப்பிக்கப் பார் - முடியாது போனால்
    கற்றுக்கொள் தப்பில்லை.
    அந்தப் பரம்பரை எப்போதும் அழியக்கூடாது.

    ReplyDelete
  13. //3A எடுத்தாலும் பல்கலையில் முதல் நிறுவல்
    "பூச்சியத்தையும் பூச்சியத்தையும் கூட்டினால் பூச்சியம்"
    பாடமாக்கிய ஸ்ரெப்(step) மறந்திடின்,
    பூச்சியமும் பூச்சியமும் சேர்ந்து
    ஒன்றாக வந்து நின்று பல்லிளிக்கும்.

    0 + 0 = ?.... மறந்து போச்சே... :(

    ReplyDelete
  14. எனக்கு ஒரு ஞாபகம்....
    அதிகமாய் படிக்காத தம்பி
    கஸ்ரப்படவேண்டி வரும் எண்டு...
    அப்ப புரியேல.......
    இப்ப நல்லாவே புரியுது.....

    ReplyDelete
  15. நேற்று இன்று என்றில்லை. நம்ம தமிழ் ஆக்களுக்கு தமிழ்ப் பற்று எவ்வளவு எண்டு வெள்ளவத்தைக்குப் போனாலே தெரியும். சும்மா தமிழ் தமிழ் எண்டு கட்டிப்பிடிச்சு அழாம, இருக்கிற வரைக்குமாவது(வெளிநாட்டுக்கோ அல்லது பொலிஸ் நிலையத்துக்கோ போகுமட்டாவது) சந்தோஷமா இருப்பம், வெள்ளவத்தை சனம் மாதிரி

    ReplyDelete
  16. // வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?
    சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...
    என்னால் முடியாது.//

    அப்பிடியா அண்ணா? நீங்க ஏன் அதை படிக்காமல் விட்டுட்டீங்க?

    ReplyDelete
  17. அருமை ஆதிரை.. வாழ்க்கையில் நான் தவறவிட்ட விடயங்களை மிக அருமையான வார்த்தைகளில் அறிந்துகொண்டேன்..

    எப்படியோ தவறவிட்ட உங்கள் அருமையான கவிதையை அறிமுகப்படுத்திய சுபாங்கனுக்கு நன்றிகள்..

    கலக்கல். வார்த்தைகள் வந்து விளையாடி இருக்கின்றன..

    இடையிடையே கொஞ்சம் கவிதையும் எழுதவும்.. அன்புக் கட்டளை.. :)

    ReplyDelete
  18. //Ctrl+C உம் Ctrl+V உம் உனக்கு
    சொல்லித்தெரிவதில்லை//

    சேச்சே, பிரின்ட் பண்ணினா ஒரே மாதிரி இருக்கக் கூடாதாம். புது ரூல்ஸ். இப்பெல்லாம் நாங்கள் பாத்துத்தான் எழுதுறனாங்கள். அதில எண்பது என்ன, எண்ணூறும் ஒரேமாதிரி இருக்கலாமாம்.

    ReplyDelete
  19. //நீ பெண்ணாயின், உன் முதல் நாளிலேயே
    அண்ணாக்கள் பலருக்கு மன்மத வாசனை வீசிடும்.//

    சேச்சே, சீனியருக்கு போடியள் கட்டும்தான். பெண்கள் எல்லாம் சுப்பர், பைனல் இயருக்குத்தான்.

    ReplyDelete
  20. //பரீட்சை.....
    ஒரு முறை அனுபவித்துப் பார்...
    உனக்கு நரகத்தின் அர்த்தம் புரியும்.//

    மறக்க முடியுமா அந்த முதலாவது Thermo dynamicsஐ? பாதிகூட முடியாது.

    ReplyDelete
  21. //கண்ணன் - Kannan
    // வாளியின் பொருள் விளங்குமா உனக்கு...?
    சொல்லித்தருவதற்கு நிறையவே சீனியர்கள்...
    என்னால் முடியாது.//

    அப்பிடியா அண்ணா? நீங்க ஏன் அதை படிக்காமல் விட்டுட்டீங்க?
    //

    கண்ணன், முன்னேற இடமுண்டு.

    ReplyDelete
  22. ஆஹா ....அருமை
    Prof . Siva (UoP) நாபகம் வாறாரு...
    குப்பி, வாளி ....
    ம்ம்ம்ம் ... ரொம்பதான் தொட்டு இருக்கயல் ...

    ReplyDelete
  23. அருமையான பதிவு...இதை தனது பதிவிம் குறிப்பிட்ட சுபானுவுக்கு நன்றிகள்...

    //நீ அழும்போது கண்ணீர் துடைக்க
    சொந்தங்கள் பலர் உள்ளனர்...
    நீ சுமக்கும் சிலுவை காவ
    தோழர்கள் காத்திருக்கின்றனர் //

    உண்மை தான். நானும் கண்ட அனுபவம்

    வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete

You might also like