Search This Blog

Sunday, January 25, 2009

காதல்... ஒரு சுயசோதனை

காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை.

நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள்... இவைகளும் உங்கள் மனவோட்டத்தில் திரையிடப்படும் எனும் நம்பிக்கையில் அம்மின்னஞ்சலை உங்களுடன் பகிர்கின்றேன்.

நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா? கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்
பன்னிரண்டாவது:
நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும், சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடனோ/அவனுடனோ நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். (இறைத்தல் - நண்பனிடமிருந்து சுட்ட சொல்) அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின்/ அவனின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.

பதினோராவது:
அவளுடன்/அவனுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளை சுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.

பத்தாவது:
அவள்/அவன் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.

ஒன்பதாவது:
அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல் என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின் குரல்தான்)

எட்டாவது:
அவளை/அவனை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வு எழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை/மன்மதன்.


ஆறாவது:
உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை/மன்மதனைப் பற்றியதாகவே இருக்கும்.

ஐந்தாவது:
அவளை/அவனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.


நான்காவது:
அவளை/அவனைப் பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.

மூன்றாவது:
இப்பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருக்கும்.


இரண்டாவது:
உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ள மறந்திருப்பீர்கள்.

முதலாவது:
அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா...!!!

நீங்கள் மனம் விரும்பும் - இப்போது மனதில் சுமந்துள்ள அந்த ஜீவன் உங்களையும் தன்மனதில் புன்னகை சிந்த சுமக்க வேண்டுமாயின், இப்பன்னிரண்டு வழிமுறைகளினூடும் அழைத்து வாருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே...!!!


பி.கு: இம்மின்னஞ்சலை எனக்கு அனுப்பிய நண்பர் செந்தில்(சினிமாவுக்கு தொடர்பில்லாதவர்) அவர்களுக்கு நன்றிகள். அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளின் பெறுபேறுதான் இது.:-)

10 comments:

  1. எட்டாவது:
    "காக்கை கூட உன்னைக் கவனியாது... ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்"

    ReplyDelete
  2. உண்மை தான் நண்பரே இப்டி தான் எனக்கும் ஒரு நாலைஞ்சு பொண்ணுங்க கிட்ட வந்திருக்கு

    ReplyDelete
  3. ம் நடக்கட்டும் நடக்கட்டும்.... :D

    ReplyDelete
  4. அண்ணோய் பாட்டு நல்லாருக்கு
    LoL

    ReplyDelete
  5. என்னமோ போங்க, இன்னைக்கு தூக்கத்த்தை கெடுத்த பெருமை உங்களையே சாரும்.

    ReplyDelete
  6. காதல் வந்தால் இது எல்லாம் நடப்பது ஒரு 4 / 5 வருசத்துக்கு முதல் என்டு எல்லே நினச்சனான். இப்பவும் இப்பிடியான ஆட்கள் இருக்கினமே... கடவுளே. 24 * 7 மணி நேரமும் கதைச்சால் தான் காதலா? அப்ப வேற வேலையே இல்லயா? எனக்கு தெரிஞ்ச 2 couples ஐ பார்க்கவே சந்தோசமாக இருக்கும். நல்லா படிக்கவும் தொடங்கிவிட்டினம். படிக்கிற நேரம் படிப்பு சுத்துற நேரம் சுத்துறது என்டு தெளிவா தான் இருக்கினம்.

    ஒன்று மட்டும் உண்மை. காதலனையோ காதலியையோ நினைக்கக்க புன்னகை தோன்றும். That is so fetch!!!!

    ReplyDelete
  7. தொட்டுணர்வதும் பட்டு நலிவதுமான இருவகைக்குள் காதலை அடக்கிவிட்டீர்கள். கவலையாயிருக்குது. தொடாமல் செய்யும் காதல் எவ்வளவு சுகமாயிருக்கும். ம்ஹீம்...

    மதுவதனன் மௌ.

    ReplyDelete
  8. சுயம் மாறாது தடம் மாறல் என்றால் இதுதானா?

    ReplyDelete
  9. @கெளசி
    //"காக்கை கூட உன்னைக் கவனியாது... ஆனால் இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்"

    அனுபவங்கள் பேசும்போது நாங்கள் மௌனியாகத்தான் இருக்க வேண்டும். :)


    @observer
    //இப்டி தான் எனக்கும் ஒரு நாலைஞ்சு பொண்ணுங்க கிட்ட வந்திருக்கு
    ஆக நாலைஞ்சு அவ்வளவுதான். நீங்க கொஞ்சம் விபரமான ஆள் போல... lol

    ReplyDelete
  10. @Senthil
    //Manathe vangittaye nanba....
    அப்படியெல்லாம் செய்வேனா நண்பா..?

    //ur test results + ve or -ve...?
    அதுதானே சொல்லி விட்டனே. இரகசியங்கள் என்னுடனே இருக்கட்டும்.

    ReplyDelete

You might also like