Search This Blog

Saturday, April 25, 2009

நான் விரும்பும் பெரியார் - கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி... உங்களுக்காக தனிப்பதிவிடும் எண்ணம் எனக்கிருந்ததில்லை. அதற்கு உங்கள் மீது கொண்ட பற்றும், மரியாதையும் தான் காரணம் எனக் கருதுவீர்களாயின் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை. உங்களினால் தமிழ் வாழ்ந்தது என்பதை விட தமிழர் வீழ்ந்தனர் என்பதை வரலாறு கல்லில் செதுக்கிய பின்னர் உங்கள் கதை எங்களுக்கு எதற்கு...?

ஆனாலும், தவிர்க்க இயலாத காரணமாய் இன்று உங்கள் ஞாபகம் என் மனதில் வந்ததன் பிரதிபலிப்பாய் இதை எழுதுகின்றேன்.

நான் தரம் ஐந்து படித்துக் கொண்டிருந்த காலம்
அது... அது வரை சில தலைப்புக்களில் பத்து வசனங்கள் எழுதியது மெதுவாக கட்டுரை எழுதுதல் எனும் பரிணாமத்துக்குள் விழுந்தது. சுயசரிதைகள் அல்லது நான் விரும்பும் பெரியார் எனும் தலைப்புக்களில் கட்டுரை எழுதுவதென்றால் நீட்டி முழக்கிடுவேன். அன்று எங்கள் வகுப்பாசிரியர் வரவில்லை. எங்கள் குழப்படியும் சத்தமும் தாங்காது பக்கத்து வகுப்பில் கற்பித்துக் கொண்ட ஆசிரியர் கட்டுரை ஒன்று எழுதுமாறு பணித்தார். முதல் நாள் வாசித்த புத்தகம் ஞாபகத்துக்கு வர நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'நான் விரும்பும் கருணாநிதி'.

கேட்கப்பட்ட சொற்களுக்கு மேலதிகமாக பராசக்தி வசனங்கள் எல்லாம் கோர்வையாக்கப்பட்டு எழுதப்பட்ட அந்தக்கட்டுரைக்கு 90 புள்ளிகள் கிடைத்தன. ஆனால், அன்பாக அழைத்த அந்த ஆசிரியர் சில வரலாற்றுக் கதைகளும் சொல்லிவிட்டுப் போனார். முதல் நாள் உச்சத்தில் ஏறி நின்ற கலைஞரின் புகழ் மறு நாளே எனக்குள் மண் கவ்விக் கொண்டது. கட்டுரை, வசனம், கவிதை எனும் பரப்புக்களைத் தாண்டி வரலாறு, அரசியல் எனும் பரப்புக்களில் அப்பெயரை அலசிப் பார்த்தேன். முன்னையதில் கண்ணில் மட்டும் கறுத்தக்கண்ணாடி போட்டவர் பின்னையதில் முகம் முழுவதும் கறுப்பு பூசியிருந்தார்.

இன்று அந்த ஆசிரியரின் குடும்பமும் வந்ததாக சொல்கின்றார்கள். ஆனால், எனக்கு வரலாறு சொல்லித் தந்த ஆசிரியர் மட்டும் வரவில்லையாம்...!!!

கலைஞரே... மனம் விட்டுச் சொல்லுங்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகளின் தோற்றுவாய் உங்களுக்குத் தெரியாதா...? அல்லது, எரிவது எங்கள் ஊழ்வினை என்று விட்டு எட்டுச் செலவுக்கு பொருள் சேர்ப்பதுதான் உங்கள் கடமை என்றாகி விட்டதா...? எரிவது எங்கள் ஊழ்வினையாயின், நாங்கள் தலை நிமிர எண்ணியது தப்பா? நாம் தலை நிமிர்ந்தால் உங்கள் உச்சி குளிரும் என கவிதை வடிப்பீர்கள்...! ஆனால், எங்கள் தலை கொய்ய அத்தனையும் செய்து முடிப்பீர்கள்...!!!

கலைஞரே... நீங்கள் பேச்சாலும் மூச்சாலும் உச்சரித்த தமிழின் சொந்தங்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பணமும் பொருளும் தான் காக்கும் என்றால், பிச்சை போட பலர் அணிவகுத்துள்ளார்கள். அவர்களிடம் மண்டியிட்டு வாங்கிக் கொள்கின்றோம். பரவாயில்லை!!! ஆனால், கெஞ்சிக் கேட்கின்றோம்... எங்கள் அவலங்களின் மேல் ஏறி நின்று உங்கள் அரசியல் நாடகங்களை மேடையேற்றாதீர்கள்.

ஒன்றா.. இரண்டா... எத்தனை தடவைகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டீர்கள்? போதும் நிறுத்துங்கள்... பத்திரிகை விற்பவன் மணியோசை கேட்டு அகதி முகாமிலுள்ள இளங்குருத்து ஓடி வந்து வினவுகின்றது. "அண்ணே... கறுத்தக் கண்ணாடி ஐயா இன்று என்ன ஜோக் அடிச்சிருக்கிறார்..?" என்ன செய்ய... தன் அவலம் மறந்து சிரிப்பதற்கு உங்கள் செய்தியாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு...

என் பிள்ளைக்கும், மாணவனுக்கும் சொல்லிக் கொடுக்க அந்த ஆசிரியர் சொன்னவைகளுடன் இன்னும் பல என்னிடம் இருக்கின்றன. நாளை என் பிள்ளை எழுதக்கூடாது "நான் விரும்பும் பெரியார் கருணாநிதி" என...

10 comments:

  1. //நாளை என் பிள்ளை எழுதக்கூடாது "நான் விரும்பும் பெரியார் கருணாநிதி" என...//

    !!!

    ReplyDelete
  2. முண்டம் ஆதிரை,

    தாடிக்காரன் ஒரு கீழ்த்தரமான தீவிரவாதி.அவன் பெயரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்து பணம் பார்க்கும் மஞ துண்டு தாடிக்காரனை விட கீழ்த்தரமானவன் என்பதில் சந்தேகம் என்ன?

    ReplyDelete
  3. கவலை வேண்டாம் தோழர்....வரலாறு என்றுமே எட்டப்பர்களை நினவு கொள்வதில்லை...ஆகவே இந்த கிழவனும் நாளைய சந்ததியினர்க்கு சரித்திரம் ஆக மாட்டான்.

    ReplyDelete
  4. @நிமல்-NiMaL
    //நாளை என் பிள்ளை எழுதக்கூடாது "நான் விரும்பும் பெரியார் கருணாநிதி" என...//
    !!!


    கருணாநிதி எதுவும் சாதகமாக செய்யாததற்காக இங்கு குற்றம் சாட்டவரவில்லை. செய்கிறேன் செய்கிறேன்... என நம்பவைத்து ஈற்றில் எங்கள் முதுகில் குத்தியதற்காகவும், தெரிந்தோ தெரியாமலோ பாதகம் செய்து கொண்டிருப்பதற்காகவும் தான் அவர் மீது குற்றம் காண்கின்றோம்.

    ReplyDelete
  5. @அனானி
    //முண்டம் ஆதிரை,
    முகம் தெரியாத நண்பரே... :)

    //தாடிக்காரன் ஒரு கீழ்த்தரமான தீவிரவாதி //
    எந்த தேசத்து தாடிக்காரன்....?

    //அவன் பெயரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்து பணம் பார்க்கும் மஞ துண்டு தாடிக்காரனை விட கீழ்த்தரமானவன் என்பதில் சந்தேகம் என்ன?//
    கொஞ்சம் விளக்கமாக... விளங்கும் தமிழில்...?

    ReplyDelete
  6. @அனானி
    //கவலை வேண்டாம் தோழர்....வரலாறு என்றுமே எட்டப்பர்களை நினவு கொள்வதில்லை...ஆகவே இந்த கிழவனும் நாளைய சந்ததியினர்க்கு சரித்திரம் ஆக மாட்டான்.


    ஆனால், இன்றைய சந்ததிக்கு சமாதி கட்டியவர்களுக்கு முண்டு கொடுத்தவர் இவரென்று வரலாறு சொல்லட்டும்.

    ReplyDelete
  7. "கலைஞரே... மனம் விட்டுச் சொல்லுங்கள். எங்கள் வீட்டு முற்றத்தில் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகளின் தோற்றுவாய் உங்களுக்குத் தெரியாதா...? அல்லது, எரிவது எங்கள் ஊழ்வினை என்று விட்டு எட்டுச் செலவுக்கு பொருள் சேர்ப்பதுதான் உங்கள் கடமை என்றாகி விட்டதா...? எரிவது எங்கள் ஊழ்வினையாயின், நாங்கள் தலை நிமிர எண்ணியது தப்பா? நாம் தலை நிமிர்ந்தால் உங்கள் உச்சி குளிரும் என கவிதை வடிப்பீர்கள்...! ஆனால், எங்கள் தலை கொய்ய அத்தனையும் செய்து முடிப்பீர்கள்...!!!"

    ReplyDelete
  8. //எங்கள் அவலங்களின் மேல் ஏறி நின்று உங்கள் அரசியல் நாடகங்களை மேடையேற்றாதீர்கள்.
    ஒன்றா.. இரண்டா... எத்தனை தடவைகள் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டீர்கள்? போதும் நிறுத்துங்கள்

    நாடகமல்ல.. உண்ணாவிரதமிருப்பதாக கூறி படமே ஓட்டிக்காட்டிவிட்டார் மஞ்சள் துண்டுக்காரன்..
    இந்திய தேர்தல் முடியும் வரை கழுத்தறுப்புகள் தொடரும்...?

    ReplyDelete
  9. இந்த துரோகியைப் பற்றி கதைக்காமல்.... எங்கள் தலைவன் எம்ஜிஆர் வழி வந்த, சொன்னதை நிறைவேற்றும் கொள்கை உறுதி படைத்த அம்மாவுக்கு ஆதரவா ஒரு பதிவு போடலாமே.... தலைவி வாழ்க!!! அம்மாக்கே வெற்றி!!!

    ReplyDelete
  10. வரலாற்றில் இவர் பெயர் இருக்கவேண்டும் இன்னொரு எட்டப்பனாக.

    மதுவதனன் மௌ.

    ReplyDelete

You might also like