மீண்டுமொரு காதலின் சின்னத்துக்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன... இரவு பகல் பாராது கொட்டும் மழைக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் சோர்ந்து விடாது கட்டுமாணங்கள் எழும்ப ஆரம்பித்து விட்டன. இன்னொரு காதலின் உயிர்ப்பிற்காக இரவு நித்திரைகளை தொலைத்த வண்ணம் சிற்பி ஒருவன் உழைக்கின்றான்.
சாஜஹான் தாஜ்மஹாலின் தேவதை மும்தாஜ் போன்று இந்த தாஜ்மஹாலின் தேவதை யாரென்பது நாமறியோம். ஆனாலும், யாராயினும் ஒருத்தி இருக்கலாம் என்பதும் சந்தேகம்தான். ஆனாலும், காரணமின்றி இக்காதல் சின்னம் உயிர்ப்படையாது என்பதும் நியாயமான வாதம்தான்!
அன்புக்காதலியினை தாஜ்மஹாலாக உயிர்ப்பித்த சாஜஹான் இறுதிக்காலத்தில் சிறைக்கூடத்தின் கம்பிகள் வழியேதான் அதனைக் காணக்கிடைத்ததாக வரலாறு சொல்கின்றது. அதனால் தான் இந்த தாஜ்மஹாலின் எழுச்சி வெளியில் தெரிந்து விடாமல் பொத்தி வைக்கப்படுகின்றது போலும்.
வியாபார நோக்குடன் - இன்னொரு காதலுக்காக விற்றுக் காசு சேர்க்கும் எண்ணத்துடன் இதனைக் கட்டலாமென எண்ணியவை எல்லாம் இப்போது கேவலமான எண்ணங்களாகவே தோன்றுகின்றது. ஏனெனில், இதன் ஒவ்வொரு அடி உயர்விற்கும் சிற்பி உழைக்கின்ற உழைப்பு, அவன் தூக்கி வைக்கின்ற ஒவ்வொரு சலவைக்கல்லுக்கும் அவன் மனதுருகி செப்பும் காதல் வார்த்தைகள், பின்னணியில் தென்றல் சுமந்து வரும் காதல் சொல்லும் பாடல்கள் இவை ஒவ்வொன்றும் ஆத்மார்த்தமான காதலுக்கான கதைகளை பேசுகின்றன. ஆனாலும், காரணம் கேட்டால் அல்லது யாரந்த காதல் தேவதை என வினவினால், விடைகள் எதுவும் நம்பத்தகுந்தவையாக இல்லை. ஒன்றுக்கொன்று முட்டி மோதி முரண்பட்டு நிற்கின்றன.
சாஜஹானின் தாஜ்மஹாலின் பின்னாலும் சில சோகக்கதைகள் நிரம்பி இருக்கின்றன. சிற்பியின் தலை கூட உருண்டதாக வரலாறு ஆவணப்படுத்துகின்றது. இங்கேயும் இப்போதே சில கொடூரங்கள் மெல்ல மெல்ல முளைவிடுகின்றன. ஒடுங்கிய - ஆனால் சன அடர்த்தி மிக்க நிலப்பரப்பொன்றில் எழும்புகின்ற இந்த தாஜ்மஹாலின் பாதுகாப்புக்கென சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாகிவிட்டன. அத்துமீறி நுழைவோர் சுட்டுப் பொசுக்கப்படுவார் என்ற அறிவித்தல் வேறு. அம்மையாரின் காணிக்கெதிராக வழக்குப் போட்டவர்களை அழைத்துத் தான் தீர்வுகாண வேண்டிய நிலை. ஒரு சிறு துரும்பு கூட தாஜ்மஹாலினை தொட முடியாதாம்... தொட்டால் சிரச்சேதமின்றி வேறெதுவுமில்லையாம். நள்ளிரவு தாண்டி விடிகாலை வரை தொடரும் கட்டுமாணப்பணிகளினால் நித்திரையின்றி பலர் தவிக்கின்றனர். அத்துடன் அப்பகுதியில் அர்த்தசாமம் ஐந்து மணிக்கு (அதுதான்... விடிகாலை ஐந்து) நித்திரைத்தூக்கத்தில் எழுந்து நடமாடும் சீவன்களின் கால்மிதி ஓசை கூட பயம் தருகின்றது.
இதை பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் கூட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றேன். தோளில் சிறியதொரு மூட்டையை காவிய வண்ணம் சிற்பி என் அறைக்குள் நுழைகின்றான். அதற்குள் இருப்பவை தாஜ்மஹாலிற்கான கட்டுமாணப் பொருட்கள் என்பது அவன் அப்பொதியைப் பத்திரப்படுத்தும் விதத்திலிருந்து புரிகின்றது. அத்திவாரம் இடப்பட்டு, தூண்கள் எழுப்பப்பட்டு, அலங்கார முடிகள் செதுக்கப்பட்ட நிலையிலே தாஜ்மஹால் மெல்ல மெல்ல பூரணம் பெறுகின்றது. நாளை அது எழுதப் போகும் காதலின் வலிமை வரிகளுக்காக காத்திருக்கின்றேன்...!
(நண்பன் றஜீத் அவர்களினால் 'ரெஜிபோம்' இன் உதவியுடன் கட்டி எழுப்பப்படும் தாஜ்மஹாலைப் பற்றி சொல்ல வேண்டுமென மனம் விரும்பியது. அதன் விளைவு தான் இப்பதிவு. கிகிகி....(இச்சிரிப்புக்கான காப்புரிமையைப் பெற்று விட்ட தூயா மன்னிக்கவும் ))
Search This Blog
Saturday, April 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
ங்...கொய்யாலா...இப்படியும் பதிவு போடலாமோ????
ReplyDeleteஒரு வசனத்தில் சொல்லதானால்
ReplyDeleteநல்லாயிருக்கு...
//காரணமின்றி இக்காதல் சின்னம் உயிர்ப்படையாது என்பதும் நியாயமான வாதம்தான்!//
ReplyDeleteகாதலுக்கு ஜே.....
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில ஆளையும் கடித்துவிட்டீரே...
ReplyDeleteஅட சீ... இப்படி முடித்து விட்டீர்களே! நானும் எங்கேயடப்பா இன்னுமொரு தாஜ்மகால் என்று ரெம்ப ஆவலாகப் படித்தேன். ஆனாலும் உங்களது பதிவு ரெம்பவும் நல்லாக இருக்கிறது. உங்களது நண்பனின் தாஜ்மகாலுக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDelete@கமல்
ReplyDelete//ங்...கொய்யாலா...இப்படியும் பதிவு போடலாமோ????
கொய்யாவில் போடலாமோ தெரியவில்லை. ஆனால், இங்கு போட்டுள்ளேன். :D
எங்கே அப்பன் ஆள் ரொம்ப பிஸி போல இருக்கு.
@சுபானு
// நல்லாயிருக்கு...
நன்றி சுபானு.
@SUREஷ்
//காதலுக்கு ஜே.....
சத்தம் வெளியில் கேட்காமல் ஜே...போடுங்கோ. இது தேர்தல் காலம். பிரச்சாரம் என்று கூட்டம் கூடிடும்... :)
@kirukkan
ReplyDelete//ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில ஆளையும் கடித்துவிட்டீரே...
நான் மனுசனய்யா... :)
வருகைக்கு நன்றி.
@யாழினி
//அட சீ... இப்படி முடித்து விட்டீர்களே!
திட்டாதீங்க... :)
//நானும் எங்கேயடப்பா இன்னுமொரு தாஜ்மகால் என்று ரெம்ப ஆவலாகப் படித்தேன்.
முயற்சித்தால் உங்களாலும் முடியும்.....
//ஆனாலும் உங்களது பதிவு ரெம்பவும் நல்லாக இருக்கிறது.
நன்றி...