Search This Blog

Friday, April 17, 2009

தேர்தல்...!!! தனி ஈழ மாநிலம்...?

இலங்கையிலும், இந்தியாவிலும் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. வாக்குறுதிகள், கூட்டணிகள், கட்சித்தாவல்கள், பிரச்சார வெடிகள் பஞ்சமின்றி தாராளமாகின்றன. நம்பியிருந்த பாமர மக்கள் வாய் பிளந்து நிற்க, கூடாத கரங்கள் கூடுகின்றன; ஏணிகள் சரிய ஏறியவன் உச்சத்தில் நின்று துள்ளுகின்றான்.

இலங்கை மாகாணசபைத் தேர்தல்... என்னைப் பொறுத்தவரையில் முடிவு தீர்மானிக்கப்பட்ட ஒன்று. யானை தலையால் நடந்தால் கூட தீர்ப்பு மாறிடுமா? அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஏனெனில், யார் ஆண்டாலும் நாம் 'அப்படியே' தான் வாழச் சபிக்கப்பட்டுள்ளோம். கடந்த கால வரலாறு கற்றுத் தருகின்ற இந்தப் பாடம் கசக்கின்றது. இனி என்ன செய்ய முடியும்...?


இந்தியத் தேர்தல்... அதிலும் குறிப்பாக ஆட்சியைத் தீர்மானிக்கும் எனப்படுகின்ற தமிழகத் தேர்தல் முன்னெப்போதுமின்றி 20 சதுர கிலோமீற்றர்(?) நிலப்பரப்பையே சுற்றி வருகின்றது. எங்களின் தலைவிதிகள் தான் சில ஆட்சிக் கதிரைகளின் மந்திரப் பெட்டிகள் போன்றதொரு உணர்வு. இது நிஜமா...? அல்லது மாயமான் தோற்றம் தானா...? அல்லது திரும்பவும் ஏறிய பின் எட்டி உதைக்கப்படும் ஏணிகளாகப் போகின்றோமா...? கடந்த கால நிகழ்வுகள் இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ள வைக்கின்றன.

எல்லாம் எப்போதே முடிந்து விடும் என்று எண்ணியவர்கள் இப்படிப் பொறுத்த நேரத்தில் வந்து காலை வாருவதைக் கண்டு அதிசயிக்கின்றார்கள். முடிந்திருந்தால் எஞ்சியுள்ளவர்களுக்கு எட்டுச்செலவுக்குப் பொருள் கொடுத்து எட்டுக் கோடி உறவுகளுக்கு காதில் பூச்சூட்டியிருப்பார்கள். அதுதான் முடியவில்லை. இப்போது என்ன செய்வது...? நாராயண சிதம்பர சகுனி மூளைகள் இல்லாத ஒன்றுக்காக
அதிகமாக கசக்கப்படுகின்றன.

அன்று இங்கு வந்தார்கள். போகும் போது 'போரை நிறுத்தச் சொன்னோம்' என்று சொல்லி்விட்டுத்தான் டட்டா காட்டினார்கள். கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் போர் நிற்கவில்லை...!

இன்று போரை நிறுத்தச் சொல்லி கேட்ட போது அங்கு கூப்பிட்டு ஆறுதல் சொல்கின்றார்கள்...!

அன்று வந்தது...??? இன்று கூப்பிடுவது...???
இன்னுமா நம்புகின்றீர்கள் நாங்கள் முட்டாள்களென...

தமிழக மேடையில் முகம் அறிமுகமான கதாபாத்திரங்கள்
பல ...!!! சிலருக்கு உண்மையில் எங்கள் மீது அக்கறை... சிலருக்கு கதிரைக்கு அக்கறை... இது தெளிவாகப் புரிகின்றது.

அறிக்கைகள் எங்களுக்குப் பால் வார்க்கின்றன.
ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... வரிக்கு வரி மறக்காமல் எழுதுகின்றார்கள்; ஒரு முறைக்குப் பல முறை உச்சரிக்கின்றார்கள். ஆனாலும், கேட்க முடியவில்லையே...! கேட்பதற்காக பதுங்கு குழியிலிருந்து தலை நிமிர்த்தினால் தலையின்றி முண்டம் மட்டும் கிடந்து துடிக்கின்றதே....

மனம் விட்டுச் சொல்வதானால் நம்ப முடியவில்லை. பல்லக்கில் சவாரி செய்வதற்காக பள்ளத்தில் விழுந்துள்ள எங்களுக்காக அழுகின்றீர்களா...? அல்லது தொப்புள் கொடி உறவென்று அணைக்கத் துடிக்கின்றீர்களா...? ஆனாலும், தமிழக உறவுகளே கோடி நன்றிகள் உங்களுக்கு...!!! எங்களைப் பற்றி பேசினால் தான் உங்கள் வாக்குக் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியமைக்காக... நாளையாயினும் வந்து எம்மைத் தாங்குவீர்கள் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காக...

அம்மா..., தாத்தாவை உசுப்பேற்றுவதில் உனக்குத்தான் எவ்வளவு அக்கறை...! ஈழத்தமிழரென நீ உச்சரித்த ஒரு சொல்லுக்காக சர்வகட்சி மாநாடு, நாடாளுமன்ற இராஜினாமா, மனித சங்கிலி... பின்னர், நீ உண்ணாது இருந்த ஒரு நாட் பொழுதுக்காக தன்னையும் தனயனையும் தாங்கிய கொடி ஊர்வலம்... இன்று தனி ஈழ மாநிலம் என்று அறிக்கை விட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன. நாளை ஏதாவது வார்த்தை ஜாலம் காட்டியவாறு தாத்தா நிச்சயம் வருவார்.

தனி ஈழ மாநிலம்... அதுவும் அவர்களுடன் இணைந்து ஒன்றாக இருக்க முடியாது போனால் தான் நீ ஆதரிப்பாயாம். ஊடகங்கள் இப்படிச் சொல்வது உண்மையெனில், ஒரே ஒரு கேள்வி...!!!

தமிழ் நாட்டு மாநில அரசு இந்திய மத்திய அரசை மீறி தன் விருப்புக்கு என்ன செய்தது...? எங்களுக்காக வேண்டாம்.... ஆகக் குறைந்தது மீனவ உறவுகளுக்காக...???


12 comments:

  1. உலகமே நம்மை திரும்பி பார்க்கிரது!
    நாம் வெல்வோம்!

    ReplyDelete
  2. //யார் ஆண்டாலும் நாம் 'அப்படியே' தான் வாழச் சபிக்கப்பட்டுள்ளோம்..

    உண்மைதான்.. யார் இங்கு ஆண்டாலும் அடிப்படைச் சிங்களவாதம் மாறவா போகிறது. தமிழனை அடக்கியொடுக்கி அவன் தலைமேல் ஏறி உக்கார நினைக்கும் சிங்கள இனவாத அரசியல் மாறவாபோகிறது... ! :(

    ReplyDelete
  3. //தமிழக உறவுகளே கோடி நன்றிகள் உங்களுக்கு...!!! எங்களைப் பற்றி பேசினால் தான் உங்கள் வாக்குக் கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்தியமைக்காக... நாளையாயினும் வந்து எம்மைத் தாங்குவீர்கள் என்ற நம்பிக்கையைத் தந்ததற்காக...:)

    ReplyDelete
  4. //தமிழக மேடையில் முகம் அறிமுகமான கதாபாத்திரங்கள் பல ...!!! சிலருக்கு உண்மையில் எங்கள் மீது அக்கறை... சிலருக்கு கதிரைக்கு அக்கறை...உண்மையான தலைவனை தமிழக மக்கள் கண்டு கொள்ள வேண்டிய காலம் இது...

    ReplyDelete
  5. அறிக்கைகள் எங்களுக்குப் பால் வார்க்கின்றன. ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... ஈழத் தமிழர்... வரிக்கு வரி மறக்காமல் எழுதுகின்றார்கள்; ஒரு முறைக்குப் பல முறை உச்சரிக்கின்றார்கள். ஆனாலும், கேட்க முடியவில்லையே...! கேட்பதற்காக பதுங்கு குழியிலிருந்து தலை நிமிர்த்தினால் தலையின்றி முண்டம் மட்டும் கிடந்து துடிக்கின்றதே....//


    இத்த‌கைய‌ எங்க‌ள‌து நிலையை அவர்க‌ள் எப்போது தான் முழுமையாக‌ப் புரிந்து கொள்ள‌ப் போகிறார்க‌ளோ?

    ReplyDelete
  6. //தமிழகத் தேர்தல் முன்னெப்போதுமின்றி 20 சதுர கிலோமீற்றர்(?) நிலப்பரப்பையே சுற்றி வருகின்றது

    அண்ணோய் வர வர இது இன்னும் குறையுதாம்....
    ;(

    நல்லாருக்கு புதிய Template...

    ReplyDelete
  7. //ஈழத்தமிழரென நீ உச்சரித்த ஒரு சொல்லுக்காக சர்வகட்சி மாநாடு, நாடாளுமன்ற இராஜினாமா, மனித சங்கிலி... பின்னர், நீ உண்ணாது இருந்த ஒரு நாட் பொழுதுக்காக தன்னையும் தனயனையும் தாங்கிய கொடி ஊர்வலம்... இன்று தனி ஈழ மாநிலம் என்று அறிக்கை விட்டதாக ஊடகங்கள் சொல்கின்றன. நாளை ஏதாவது வார்த்தை ஜாலம் காட்டியவாறு தாத்தா நிச்சயம் வருவார்.


    உலகத்தமிழர் தலைவன்(சந்தேகமாக இருக்கின்றது?, நிச்சயமாக இல்லை) என்று தனக்குத்தானே பெயர் சூடி சுய தம்பட்டமடித்துக்கொள்ளும் முதுகெலும்பில்லாத கிழடு, (சுயநல)அரசியல்வாதியின் வரைவிலக்கணம், முதல்வன் என்ற போர்வையில் "சிங்" இற்கு வால் பிடிக்கும் தாத்தாவின் வழமையான போலி தேர்தல் வாக்குறுதிகள்தான் இவை...............

    ReplyDelete
  8. @ttpian
    //உலகமே நம்மை திரும்பி பார்க்கிரது!
    நாம் வெல்வோம்!


    திரும்பி பார்த்தால் மட்டும் போதுமா? ஏதாவது செய்ய வேண்டுமே....
    வருகைக்கு நன்றி சகோதரா.

    ReplyDelete
  9. @சுபானு
    //உண்மைதான்.. யார் இங்கு ஆண்டாலும் அடிப்படைச் சிங்களவாதம் மாறவா போகிறது. தமிழனை அடக்கியொடுக்கி அவன் தலைமேல் ஏறி உக்கார நினைக்கும் சிங்கள இனவாத அரசியல் மாறவாபோகிறது... ! :(

    மாறப்போவதில்லைத்தான். :(

    ReplyDelete
  10. @யாழினி
    //இத்த‌கைய‌ எங்க‌ள‌து நிலையை அவர்க‌ள் எப்போது தான் முழுமையாக‌ப் புரிந்து கொள்ள‌ப் போகிறார்க‌ளோ?

    புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ... ஆனால், வாக்குக்களுக்காக எங்களை வேட்டையாடுகின்றார்கள்.

    ReplyDelete
  11. @கார்த்தி
    //அண்ணோய் வர வர இது இன்னும் குறையுதாம்....
    ;(


    என்றுதான் சொல்லப்படுகின்றது. :(


    //நல்லாருக்கு புதிய Template...

    நன்றி சகோதரா... :)

    ReplyDelete
  12. எங்கள் தலைவன் எம்ஜிஆர் வழி வந்த, சொன்னதை நிறைவேற்றும் கொள்கை உறுதி படைத்த அம்மாவுக்கு ஆதரவா ஒரு பதிவு போடலாமே.... தலைவி வாழ்க!!! அம்மாக்கே வெற்றி!!!
    இந்திர காந்தியால் பங்களாதேசம் பிரிச்சு குடுக்க முடியும் என்றால், அம்மாவால் ஈழம் தரவும் முடியும்....

    ReplyDelete

You might also like