Search This Blog
Saturday, June 13, 2009
எழுதாத உன் கவிதை
கவிக்குத் தலைப்பு தந்த நீ
முடியாத ஒன்றில் தான்
முடிந்து போனதாக
முதல் அத்தியாயம் எழுதி
"தொடரும்" இட்டார்கள்.
பின் வந்த நாளொன்றில்
உன் தோழர்கள்
முடியாததை 'முடி'யாக்கி
கிரீடம் சூட்டினர்.
"தொடரும்... தொடரும்..." எனத் தொடர்ந்த
உன் கவிதை அத்தியாயங்கள்
அன்றுடன் "முற்றும்" என இறுமாந்திருந்தோம்.
ஏமாற்றம் பரிசாக இம்முறை
மாற்றானே "தொடரும்..." இட்டான்.
இப்போது...
அந்தரத்தில் உன் எழுதி முடிக்காத கவிதை.
கூடவே நிரம்பி வழியும்
'சிவப்பு' மையுடன் ஒரு பேனா.
எழுதப்பட்ட வரலாறுகளின் மேல்
சாயம் பூசி அழிக்கப்படுமா...?
அல்லது
முடிவுரை எழுதி 'முற்றும்' இடப்படுமா...?
Subscribe to:
Post Comments (Atom)
enna solluvathu...
ReplyDelete// கூடவே நிரம்பி வழியும்
ReplyDelete'சிவப்பு' மையுடன் ஒரு பேனா.
எழுதப்பட்ட வரலாறுகளின் மேல்
சாயம் பூசி அழிக்கப்படுமா...?
காலம்தான் பதில் சொல்ல வேண்டும்
//உன் கவிதைக்கு மாற்றான் "தொடரும்" இட்டான்//
ReplyDeleteநிகழ்கால ஆராய்ச்சியா? அனுபவமா?
//'சிவப்பு' மையுடன் ஒரு பேனா.
எழுதப்பட்ட வரலாறுகளின் மேல்
சாயம் பூசி அழிக்கப்படுமா...? முடிவுரை எழுதி 'முற்றும்' இடப்படுமா...? //
சிந்திக்க வைக்கும் கேள்வி தான்
அருமை
வாழ்த்துக்கள் தொடர்ந்தது எழுதுங்கள்