பல கட்ட சோதனை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வெளிவந்த இந்த பதிவுகளுக்குள் தேடும் வசதியானது பதிவுலகை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றது. இதுவரை காலமும் Google Custom Search வசதியினை தங்கள் தளங்களில் நிறுவியிருந்தவர்களும் அதனைத் தூக்கி எறிந்து விட்டு Blog Search வசதிக்கு மாறுகின்றார்கள்.
அப்படி என்னதான் புதிதாக இங்கு கிடைக்கின்றது?
நீங்கள் குறிப்பிட்ட ஒரு விடயத்தை இங்கு தேடல் மேற்கொள்ளும்போது உங்கள் வலைப்பதிவு, உங்கள் வலைப்பதிவில் இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு தளங்கள் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றில் தேடல் இடம்பெற்று கிடைக்கும் பெறுபேறுகளை தனித்தனியே வகைப்படுத்தி நேர்த்தியாக உங்களுக்குத் தருகின்றது.
தேடல் மேற்கொள்ள வேண்டிய இடங்களைக்கூட இதனை நிறுவும் போது கட்டுப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, உங்கள் வலைப்பதிவு தவிர்ந்த ஏனைய தளங்களில் தேடுதல் இடம்பெறுதலை நிறுத்திக் கொள்ள முடியும்.
வழமையாக ஒரு தேடலை நாம் Google Custom Search இனூடாக மேற்கொள்ளுமிடத்து அதற்கான பெறுபேறுகள் புதிதாக திறக்கப்பட்ட உலவிப்பக்கமொன்றில் தான் காட்டப்படும். ஆனால், இங்கு தேடலில் கிடைக்கும் பெறுபேறுகள் உங்கள் பக்கத்திலேயே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதாவது, வேறொரு தளத்துக்கோ அல்லது புதிதான பக்கத்துக்கோ உங்களை எடுத்துச் சென்று கவனக் கலைப்பானாக செயற்படாமல் நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த பக்கத்திலேயே தேடல் பெறுபேறுகள் காட்டப்படுகின்றன.
இதனை உங்கள் தளத்தில் நிறுவுவது எவ்வாறு?
மிக மிக இலகுவானது. எப்படி Blog இல் உங்களைப் பின்தொடர்பவரை இணைத்துள்ளீர்களோ அதே போன்று இரண்டொரு சொடுக்குகளின் மூலம் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
Google இன் உத்தியோகபூர்வத் தளத்தில் இப்படிச் சொல்லியுள்ளார்கள்.
The goal of this gadget is to expand the search capabilities of your blog and give your readers a better search experience.புதிய தேடும் பொறியுடன் பதிவுலகம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்.
கலக்குறீங்க கடலேறி. 22 ஓட்டு. நானும் ஒன்னு போட்டேன். தொடர்ந்து எழுதுங்க
ReplyDeletenow I see it!
ReplyDelete