"நீங்கள் தமிழா...?" கணீரென்ற பெண் குரல்... சகுனம் நல்லாயிருக்குதே என்று திரும்பிப் பார்த்தேன். கண்ட முகமாக ஞாபகம் இல்லை. ஒருத்தி நின்றாள்.
"ஓமோம்... நீங்களும் ரமிலோ..?" கொஞ்சம் நாகரிகம் சேர்த்து தமிழிலே கேட்டு வைத்தேன். தமிழ் பேசுபவளிடம் தமிழோ என்று கேட்பது முட்டாள்தனம் தான். ஆனால், நெற்றியிலே திருநீறு, சந்தனம், குங்குமம்... கையிலே மஞ்சள், கறுப்பு, சிவப்பு நிறங்களிலே கோயில் நூல்... என்னிலே இவ்வளவும் கண்ட பின்னும் அவள் கேட்ட கேள்வி...???
சரி... இதுவா முக்கியம்..? சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. அவளை முந்திக்கொண்டு நான் கடலை போட ஆரம்பித்தேன்.
அடுத்த தரிப்பிடத்தில் பஸ் குலுக்கலுடன் நின்றது. என் சேர்ட்டும் அவள் ரீ-சேர்ட்டும் உராய்தலில் கசங்கியிருக்கலாம்... நான் கவலைப்படவில்லை; அவளும் தான்... அவள் அணிந்திருந்தது ரீ-சேர்ட்டும் டெனிம் என்றாலும் அவள் "ரிச்சு கேளா" என வரைவிலக்கணப்படுத்த தேவையான தரவுகள் எதுவும் நின்று கொண்டு பயணிக்கும் பஸ் பயணத்தில் கிடைக்கவில்லை.
இன்ரர்வியூவுக்குப் போறாளாம். ஆனால், இடம் தெரியாதென்று கேட்டாள். யாரினுடைய அதிர்ஸ்டமோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகில் தான் அவள் கேட்ட அட்ரெஸும். "டோன்ற் வொறி... நான் இருக்கின்றேன்" என்றேன். மனது திறந்து சந்தோசப்பட்டாள்.
அடுத்த தரிப்பிடத்தில் நின்ற பஸ் பிச்சைக்காரன் ஒருத்தனையும் ஏற்றிக் கொண்டு பறந்தது.
கொழும்பு பஸ் பிரயாணத்தில் பிச்சைக்காரரின் தொல்லை தாங்க முடியாது. கைக்குழந்தைகள், அல்லது அவர்களின் போட்டோக்கள், எக்ஸ்-ரே படங்கள், வைத்திய அறிக்கை, அல்லாது போனால் உடலிலே எங்கேனும் ஓர் வெள்ளைத் துணிக்கட்டு. இவைகள் தான் இவர்களின் மூலதனம்... காட்டிக்காட்டி, கூவி விற்று பிச்சை எடுப்பார்கள். என்ன செய்ய..? பயணிகளுக்கு இடைஞ்சல், எரிச்சல். ஆனால், அவர்களுக்கோ எரியும் ஒரு சாண் வயிற்றுக்கான போராட்டம்.
பஸ்ஸில் ஏறிய பிச்சைக்காரன் சாரதிக்கு அருகில் வந்து சனங்களை நோக்கி தலை குனிந்து வணங்கினான். பின்னர், தன் கையிலிருந்த பொருளொன்றைத் தாளமாக்கி பாட்டுப் பாடினான்.
சிங்களப் பாட்டுத்தான். வரிகள் நன்றாகப் புரியவில்லை. ஆனால், இசைக்கேது மொழி...? அவனின் குரலசைவும், அந்தத்தாளமும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. என் பக்கத்தில் நின்ற 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் அவன் பாட்டுக்குத் தானும் வாயசைத்து தாளம் போட்டான். அட... என் கால்களும் தான் அவன் இசைக்கேற்ப அசைந்தன. அவள் கூட அப்பிச்சைக்காரனின் இசையை ரசித்தாள். நானும் ரசிப்பதை புரிந்து கொண்டு கண் சிமிட்டி கதை சொன்னாள்.
அடுத்த தரிப்பிடத்தில் சில இருக்கைகள் வெறுமையாகின... எனக்கு கால் கடுத்தாலும் ஒன்றாக அமர சோடி இருக்கைகள் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால், குறுக்கால போன கொண்டக்டர் விடவும் இல்லை. அவன் கத்தின கத்தலில், என்னை ஒரு இருக்கையிலும் அவளை எனக்குப் பின்னால் மூன்று வரி தள்ளி ஒரு இருக்கையிலும் இருத்திவிட்டான். பாவிப்பயல்...
இப்போது பிச்சைக்காரன் தன் பாட்டுக்குரிய சன்மானம் வாங்கும் நேரம். உண்மையில் அவன் இசையில் கிறங்கித்தான் போனேன். கட்டாயம் பத்து ரூபாயாவது கொடுக்கணும்...
அவன் வருகின்றான். அவன் பாட்டுக்குத் தாளம் போட்டு வாயசைத்த அந்த ஐம்பது வயது நபர் எங்கேயோ பார்வையைத் திருப்புகின்றார். அவன் கை அவரை நோக்கி நீளுகின்றது...
"எங்களிடம் பிச்சை எடுக்கிறது சாராயம் குடிக்கத்தானே..." சிங்களத்தில் திட்டிய அவர் தன் முகத்தை கர்ணகடூரமாக்குகின்றார். சீய்... இப்படியும் மனிதர்களா என என் மனது அவரைச் சபிக்கின்றது. இதெல்லாம் சகஜம் என்பது போல பிச்சைக்காரன் அங்கால் நகர்கின்றான்.
என் பேர்ஸைத் திறந்து பார்க்கின்றேன். அண்மையில் வெளியிடப்பட்ட புது ஆயிரம் ரூபாய்த்தாள் தான் என்னைப் பார்த்து பல்லிளிக்கின்றது. துலாவிப் பார்க்கின்றேன். ஒரு ரூபாய் சில்லறை கூட சிக்கவில்லை.
இப்போது என் முன்னால் அவன் கரம் இரந்து நிற்கின்றது. என் பார்வை பேருந்தின் யன்னல் வழியே எங்கோ பார்க்கின்றது. ஏமாற்றம் மேலிட அவன் என்னைக் கடந்து போகின்றான். சில்லறையானாலும் அவனுக்கு அவள் கொடுப்பதை என் கடைக்கண் பார்வை உறுதி செய்து கொள்கின்றது.
இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... அவள் புரிந்து கொள்வாள்.
இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
ReplyDeleteபிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... அவள் புரிந்து கொள்வாள்.//
ஹாஹாஹா.. எப்பிடிடா?
சூப்பர்..
ஆனாலும் பாவம்டா .. முந்தைய பதிவில் துவைத்ததே போதும் .. விட்டுடு ஹாஹாஹ
மிக அருமை...
ReplyDeleteநல்ல கதை வித்தியாசமான முடிவு.
ReplyDeleteசில பிச்சைக்காரர்கள் பாடல்களில் துவேசம் அப்பட்டமாக வெளிப்படும் சில நல்லவர்கள் அவர்களுக்கு காசு கொடுக்கமாட்டார்கள் ஆனால் சில அதே குட்டையில் ஊறியவர்கள் அவரைப் பாராட்டி காசு கொடுப்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிச்சைக்காரர் ஜனாதிபதி தேர்தலை வைத்து பிச்சை எடுத்ததாக அறிந்தேன்
ரிச்சு கேளா என்று உறுதிப்படுத்த முடியவில்லையோ... அதுக்கு நிறையப் பாக்கவேண்டி இருக்கும்..
ReplyDeleteசரி விடு... கதை நல்லாயிருக்கடா... சந்தர்ப்பங்கள் தீர்மானிக்கின்றன நிறைய இடங்களில்..
ஆகா. என்னடா இது மீண்டும் ஒரு பஸ் காதல் கதையா என்று பார்த்தால்..... இதுவும் அதுவா?(பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென)
ReplyDeleteநடத்துங்கோ..
அதுசரி அந்தப் பெண் தான் இப்பவெல்லாம் உங்கள் போன் பில்லை எகிறவைப்பவரோ? ;)
சும்மா ஒரு டவுட்டு தான்..
@அண்ணாமலையான்
ReplyDeleteமிக அருமை...
நன்றி
------------------------------------------
@புல்லட்
ஹாஹாஹா.. எப்பிடிடா?
சூப்பர்..
தங்களுக்கும் நன்றி. :-)
@வந்தியத்தேவன்
ReplyDelete//நல்ல கதை வித்தியாசமான முடிவு. //
நன்றி...
//சில பிச்சைக்காரர்கள் பாடல்களில் துவேசம் அப்பட்டமாக வெளிப்படும் சில நல்லவர்கள் அவர்களுக்கு காசு கொடுக்கமாட்டார்கள் ஆனால் சில அதே குட்டையில் ஊறியவர்கள் அவரைப் பாராட்டி காசு கொடுப்பார்கள். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிச்சைக்காரர் ஜனாதிபதி தேர்தலை வைத்து பிச்சை எடுத்ததாக அறிந்தேன்//
இந்த அனுபவம் எனக்கும் கிடைத்தது. எப்படியெல்லாம் தேர்தல் விளம்பரம் பண்ணுறாங்கள். நாடு முன்னேறி விட்டுது. :P
//அதுசரி அந்தப் பெண் தான் இப்பவெல்லாம் உங்கள் போன் பில்லை எகிறவைப்பவரோ? ;)
ReplyDeleteசும்மா ஒரு டவுட்டு தான்.. //
எனக்கும் அதே சந்தேகம்... ;)
//அடுத்த தரிப்பிடத்தில் பஸ் குலுக்கலுடன் நின்றது. என் சேர்ட்டும் அவள் ரீ-சேர்ட்டும் உராய்தலில் கசங்கியிருக்கலாம்... நான் கவலைப்படவில்லை; //
புல்லட் அண்ணா screen print எடுத்து வைக்கவும். :)
// இன்ரர்வியூவுக்குப் போறாளாம். ஆனால், இடம் தெரியாதென்று கேட்டாள். யாரினுடைய அதிர்ஸ்டமோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகில் தான் அவள் கேட்ட அட்ரெஸும். //
அதென்னண்டு நிறைய படங்களிலும் இப்பிடியே நடக்கிறது, இங்கயும் இப்பிடியே? 'வாங்கோ... அது எங்கட ஒபிசுக்கு பக்கத்தில தான்....'
//புது ஆயிரம் ரூபாய்த்தாள் தான் என்னைப் பார்த்து பல்லிளிக்கின்றது.//
இத்தால் ஆதிரை அண்ணா அறியத்தருவது யாதெனில் அவர் ஒரு ரிச்சு போய்....
மது அண்ணா கணக்குப்படி அவர் பிச்சை கேள் ஐத்தான் கரம்பற்றுவார்.
//இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... //
:) அழகு....
@மதுவதனன் மௌ. / cowboymathu
ReplyDelete//ரிச்சு கேளா என்று உறுதிப்படுத்த முடியவில்லையோ... அதுக்கு நிறையப் பாக்கவேண்டி இருக்கும்..//
உங்களுக்கு அது கை வந்த கலை...!!! நாங்கள் அப்பாவி மக்கள். :P
//சரி விடு... கதை நல்லாயிருக்கடா... சந்தர்ப்பங்கள் தீர்மானிக்கின்றன நிறைய இடங்களில்..//
நன்றி மது.
@LOSHAN
ReplyDelete//ஆகா. என்னடா இது மீண்டும் ஒரு பஸ் காதல் கதையா என்று பார்த்தால்..... இதுவும் அதுவா? //
பழைய பஸ் கதை என்றால் உங்களின் பஸ் பிரயாணம் பற்றியா? அதெல்லாம் இங்க எழுதமாட்டாம். கவலை வேண்டாம்.
//அதுசரி அந்தப் பெண் தான் இப்பவெல்லாம் உங்கள் போன் பில்லை எகிறவைப்பவரோ? ;)
சும்மா ஒரு டவுட்டு தான்..//
உந்த டவுட்டு உங்களுக்கு வந்திருக்கக் கூடாது.
556 தான் என் பில்லின் கணிசமான தொகையைத் தின்னுகிறது என்றால் பாருங்களேன் என் பில் தொகை எவ்வளவு என்று.
வருகைக்கு நன்றி அண்ணா.
//அவள் "ரிச்சு கேளா" என வரைவிலக்கணப்படுத்த தேவையான தரவுகள் எதுவும் நின்று கொண்டு பயணிக்கும் பஸ் பயணத்தில் கிடைக்கவில்லை//
ReplyDeleteஅட, அட, அட. சிரிச்சு சிரிச்சு வகிறு வலிக்குது
//இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
பிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... அவள் புரிந்து கொள்வாள்.
//
கலக்கல் முடிவு
அருமை!!
ReplyDeleteஅருமையான கதை...
ReplyDeleteஅப்புறம் எனக்கு ஒரு டவுட்டு பஸ் கண்டக்கடருக்கு எப்புடி சில்லறை கொடுத்தீரகள் இல்லாட்டி அந்த பொண்ணு கொடுத்ததோ...
அப்புறம் இராஜ் என்று சொல்லத்தான் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது இங்கு ரம்பரி என்ற ஒரு சிங்களப்பாடல் பொடியளட்ட மிகப்பிரபலம் பாருங்கோ...
இப்படியும் மெசேஜ் பாஸ் பண்ணலாமா?
ReplyDeleteஅருமையான கதை
ReplyDeleteஉண்மை தான் நாள் தோறும் பஸ் பிரயாணத்தில் நடப்பவை தானே
//என் பேர்ஸைத் திறந்து பார்க்கின்றேன் ஒரு ரூபாய் சில்லறை கூட சிக்கவில்லை.//
ம்ம் அடிக்கடி இப்படித் தானா இல்லை....?
//இறங்கும் போது என் விம்பம் உடைந்து சிதறு முன் அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்//
சொல்ல வேண்டும் என துடிப்பதன் அவசியம்....?
அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
ReplyDeleteபிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென... //
செல்லாது செல்லாது.. அவ என்ன பொறின் ரிட்டேனோ.. உதை நம்புறதுக்கு :)
அனைத்து நண்பர்களுக்கும்
ReplyDeleteபொங்கல் வாழ்த்த்துக்கள்
//அவளுக்கு கட்டாயம் இதைச் சொல்ல வேணும்.
ReplyDeleteபிச்சைக்காரன் பாடினது இராஜின் பாடலென.
enkeeyoo kuththurathu maathiri kidakkuthu...