Search This Blog

Monday, January 18, 2010

அட... அந்தக் கண்கள் கொல்லுதே...!!!



மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் வருகின்ற கதைகளையும் கறைகளையும் கடந்து மனதுக்கு இதமாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது இப்பாடல். "களவாணியே... களவாணியே..." நாதஸ்வரக் குரல் - இன்னிசைப் பாடகி ஸ்ரீமதுமிதாவினால் பாடப்பட்ட இப்பாடலின் ரசனையில் மயங்கி... பாடலுக்காக படம் பார்த்து... காதல் மயக்கத்தில் உயிரை வாட்டியெடுக்கும் அந்த ஒரு சோடிக்கண்களின் பார்வையில் சிக்குண்டு போனது உணர்வுகள்.

படம் முழுவதும் கிராமப் பெண்ணாக வந்து படத்துக்கு உயிர் கொடுக்கும் கதாநாயகியின் கண்ணசைவும், அவள் கூந்தல் சூடியுள்ள மல்லிகை மாலையும் இளமைப்பராய நினைவுகளை மீட்டிவிட்டுச் செல்வதில் ஆச்சரியமில்லை.

அவள் திரும்பிப் பார்ப்பாள்... அதுவே காதலுக்கான சமிக்ஞை என இப்போது தமிழ்ச் சினிமா கண்டுபிடித்த கண்டுபிடிப்பெல்லாம் எங்களுக்கு அப்போதே அத்துப்படி. கிராமத்து வீதிச் சந்திகளும், அவள் வீட்டு ஒழுங்கையும் பேசக் கற்றுக் கொண்டால் அந்தக் கடைக்கண் பார்வையினையும், காத்திருப்புக்களையும் காவியங்களாக வடிக்கும்.



விஞ்ஞானம் கலக்காத - இரசாயனம் தடவாத - பார்த்ததும் நிலைகுலைத்து காதல் விஷம் பருக்கும் கண்களின் வார்த்தைகள் நகர வாழ்வினில் குதிரைக் கொம்பாகத் தான் கிட்டுகின்றன. தென்றல் சுமந்து வரும் கிராமத்து மண் வாசமும் சேரும் போது அந்தப் பார்வைக்கு உயிரையே எழுதிக் கொடுக்கலாம்.

காவியம் பகிரத் துடிக்கின்ற உதடு... இருவிழிப் பார்வையில் தெறிக்கும் மையல்... பத்தாம் ஆண்டு பாடப்புத்தகத்துக்குள் முகம் மறைத்து ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம்... பரந்து விரிந்த நீலக்கடலினை தாங்கி நிற்கும் வெண்மணற்பரப்புக்கள்... அவள் கறுத்தப் பொட்டுப் பறித்து, பாடக்கொப்பிக்கு திலகமிட்டு அழகு பார்த்த குறும்புத்தனம்... நினைவலைகளில் தவழ விடுகின்றது இப்பாடல்.


13 comments:

  1. என்னாங்கடா எல்லாரும் காதலைப்பற்றி எழுதிறிங்க? என்னர்ச்சு எல்லாருக்கும்? என்னதான் சொன்னாலும் நல்லாருக்கு வசன அமைப்புகள்..

    ReplyDelete
  2. அடடா.. கதாநாயகியின் கண்ணைத் தான் சொன்னீங்களா? ;)
    நானும் பார்த்தேன் பாடகி மேடையில் பாடியதை சொன்னீங்களோ எண்டு..

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவோ?

    பாடல் உங்களை 'மது' போல மயக்கியிருக்கு போல..;)
    இன்று காலை விடியலில் உங்களுக்காக ஸ்பெஷல் பரிசாக உங்கள் 'களவாணி' பாடல் தருகிறேன்..

    ReplyDelete
  3. லோசனை வழி மொழிகிறேன் பிறந்த நாள் பதிவோ?????

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. லோஷன் அண்ணா...

    என்னது மதுபோல மயக்கியிருக்கா.. மது மயங்குவதில்லையாக்கும்.. ஆமா..

    யோ...

    லோஷன் அண்ணாவை யாரும் முன்மொழியவில்லை.. எப்படி நீங்கள் வழிமொழிவீர்கள்.. :)

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. அனுபவம்...:-))

    மீதியையும் சீக்கிரம் சொல்லுங்க!

    ReplyDelete
  7. :)
    :))
    :)))
    :))))
    :)))))

    நல்லாருக்கு

    ReplyDelete
  8. களவாணிப்பயலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

    நிறைய வர்ணிச்சு எழுதியிருக்கிறதப் பாத்தா எனக்கொண்டும் அந்தளவுக்குச் சந்தேகம் வரேல... ;)

    எனக்கு முன் பின்னூட்டிய அனைவரையும் வழிமொழிகிறேன்.... :)

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. 2010 ல் இலங்கை பதிவர்களின், காதல் பதிவுகளில் 25 வது காதல் பதிவு இது..

    கிரகமாற்றம் பலரில் மாதற்றங்களை கொண்டுவந்துள்ளமை கண்கூடு.

    ReplyDelete
  11. நல்லாயிருக்கு....;)

    பிறந்தநாள் ஸ்பெசலா இதெல்லாம் போதாது ரீட் எப்ப என்று சொல்லவும்..சீக்கிரம்..:p

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தைமாதம் எத்தனை பேர் அவதரித்திருக்கிறார்கள் அப்பப்பா ...

    அருமையாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்..சூப்பர்

    ReplyDelete

You might also like