Search This Blog

Saturday, February 20, 2010

படம் காட்டும் பதிவுலகம் - தெய்வம் இன்று...


வன்கூவரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் முகமாக வன்கூவர் துறைமுகத்துக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் வளையம் இது.

இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

★ ★ ★


தென்னாபிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுதலையாகி இருபது ஆண்டுகள் நிறைவுற்றதை நினைவு கூர்ந்து அண்மையில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. 27 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அவர் கடைசிக்காலப்பகுதியை கழித்த சிறைச்சாலையில் வரையப்பட்டிருக்கும் மண்டேலாவின் உருவம்.

★ ★ ★


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியைக் குறிக்கும் முகமாக, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்பங்களை வழங்கிய ஆனையிறவில் சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டியெழுப்பப்படும் நினைவுச் சின்னம்.

★ ★ ★


அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.

★ ★ ★


அரசன் அன்று ...
தெய்வம் இ(நி)ன்று ...

9 comments:

  1. நல்லாப் படங்காட்டுறியள்...

    குளிர்கால ஒலிம்பிக் படம் வடிவாயிருக்கு...

    நெல்சன் மண்டேலாவின்ர உருவப்படம் அருமை. ஆனா அது ஓவியமா?
    செதுக்கல் மாதிரி வடிவாயிருக்குது.

    அந்த நினைவுச்சின்னம் கட்டுறத நான் கண்டி வீதியால போகேக்க பாத்த ஞாபகம்...


    //அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.//

    அதோ தெரிகிறது வளமான எதிர்காலம்...


    வீரகேசரிப் படத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    பொன்னர் ஏற்கனவே நல்லூரானிற்ற சரணடைஞ்சாப் பிறகு தான் உள்ளுக்க இருக்கிறார்...

    ReplyDelete
  2. கடைசி கமெண்ட் - நச்!!

    ReplyDelete
  3. @சந்தனமுல்லை

    //கடைசி கமெண்ட் - நச்!!

    எல்லோரும் தான் இப்போது நச் நச் என்று ஆணியடிக்கிறார்கள் சகோதரி...

    நன்றி

    ReplyDelete
  4. @கன்கொன் || Kangon

    //வீரகேசரிப் படத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    பொன்னர் ஏற்கனவே நல்லூரானிற்ற சரணடைஞ்சாப் பிறகு தான் உள்ளுக்க இருக்கிறார்..


    நல்லூர்க்கந்தன் கூட பக்தர்களில் பாரபட்சம் காட்டுறானே...

    அதோ தெரிகிறது வளமான எதிர்காலம்...

    நன்றி

    ReplyDelete
  5. எப்பிடித்தான் படங்கள் பொறுக்கிறியோ? நல்ல தொகுப்பு.. மகேஸவரன போட்ட கோயிலில கும்பிடேல்லயோ? ஆனோமா?

    ReplyDelete
  6. நினைவுத்தூபிஇற்கு இறங்கி அஞ்சலி செலுத்த சொன்னாலும் எம்மால் என்ன செய்ய முடியும்.
    //அரசன் அன்று ...
    தெய்வம் இ(நி)ன்று ... //
    நாங்கள் அனுபவித்ததை விடவா.... அவர்களுக்கு தெய்வம் கொடுக்கப்போகிறது

    ReplyDelete
  7. //வன்கூவரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 2010 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரதிபலிக்கும் முகமாக வன்கூவர் துறைமுகத்துக்கு மேலாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் வளையம் இது.//

    ஐயகோ.. ஒலிம்பிக் வளையத்துக்கும் குளிர் பிடிச்சிட்டோ..:p

    //வரையப்பட்டிருக்கும் மண்டேலாவின் உருவம்//

    WOW..;)

    //ஆனையிறவில் சிறிலங்கா இராணுவத்தினரால் கட்டியெழுப்பப்படும் நினைவுச் சின்னம்.//

    அட இப்பிடி வடிவான இடம் இருக்கா? பாதையால் யாழ் போகும் போது பார்க்க முடியுமா?

    //அதோ தெரிகிறது... காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை.//

    இப்ப இயங்குதா?

    //அரசன் அன்று ...
    தெய்வம் இ(நி)ன்று .//

    ஹாஹா... அடுத்து எங்க நல்லூருக்கா போவாங்கள்..:p

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு :)

    //சந்தனமுல்லை

    கடைசி கமெண்ட் - நச்!!//

    அதே! அதே!!

    ReplyDelete
  9. படங்கள் அருமை, ஆனையிறவு :(

    ReplyDelete

You might also like