Search This Blog

Sunday, April 25, 2010

அங்காடித்தெரு


வசந்தபாலன், பிளீஸ்... இனியும் இப்படியொரு படம் வேண்டாமே...!!!

வயிற்றுப் பிழைப்புக்காக கால்களில் சில்லுப் பூட்டிய மாந்தர்கள், முதலாளித்துவத்தின் கொடுமை, வறுமையின் பிரதிபலிப்பு, அதனூடு சேர்ந்து உண்மையான - போலியான காதல்கள் என அங்காடித்தெரு சொல்ல வந்த யதார்த்தங்கள் அத்தனையும் உண்மைதான்... பேசப்படவேண்டியவைதான்.

அதற்காக படம் முழுவதும் செத்தவீடா...? சாவு... சாவு... ஓடிக்கொண்டிருக்கும் படத்தில் அரை மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஓருயிர் கொடூரமாக விழுகின்றது. வேண்டாம் சார்... தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வு எழுகின்றது. பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தான் சேகரிக்க முடிகின்றது.

ஆனாலும், கனாக்காணும் காலங்கள் புகழ் பாண்டியின் அந்தக் குசும்பு பிடித்திருக்கின்றது. காதல்க்கவிதை எழுதத் தெரியாமல் ஒருத்தன் படும்பாட்டை நான் பட்டபாடாய் ரசிக்க முடிகின்றது. ஒன்பதாம் வகுப்புத் தேவாரத்தின் அடிவரியில் தன் காதலியின் பெயரை எழுதி காதல் கவிதையாய் ஒப்புவிக்கும் வல்லமையை எனக்கும் தருவாயாக...!!!

7 comments:

  1. சந்தோசமான படம் பார்க்கும் மனநிலையில் பார்த்திருக்கிறீர்கள் என்று புரிகிறது...
    பார்க்கும் மனநிலையை பொறுத்து நமது பபார்வையும் பார்க்கப்படும் பொருளும் இயற்கைதானே...

    அப்பட்டமாய் அழுத்தமாய் யதார்த்தங்களை காட்டடியது எனக்கு பிடித்திருந்தது....

    ReplyDelete
  2. சாரு நிவேதிதா இந்தப் படம் தொடர்பான விமர்சனத்தில் நீங்கள் குறிப்பிட்ட இதே விஷயத்தை அவர் பாணியில் சொல்லியிருப்பார். அதில் தனிப்பட்ட எதிர்ப்பும், காழ்ப்புணர்வும் தேவையில்லாத விஷயங்கள் நிறையவும் கலந்து வந்திருந்தது - அவற்றை தவிர்த்து அந்த விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது. நீங்கள் சொல்வதை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.... யதார்த்தங்களே இலக்கியங்களாகியிருந்தால் மனிதவாழ்வு சூனியமாகிவிடும்....

    ReplyDelete
  3. தியேட்டரில் இருக்கின்றோமா காசு கொடுத்து செத்த வீட்டுக்கு வந்தோமா என்ற உணர்வு எழுகின்றது. பரிதாபங்களையும், அனுதாபங்களையும் தான் சேகரிக்க முடிகின்றது.///

    நானும் இதே போலத்தான் உணர்ந்தேன் மனம் பொறுக்க முடியாமல் இடையில் எழுந்து வர கூட யோசித்தேன் ...

    ReplyDelete
  4. :)))

    படம் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

    ஐந்தாண்டுகாலத் திட்டத்துக்குள் இந்தப் படமும் இருக்கிறது.

    ReplyDelete
  5. முடிவு மாற்றப்பட்டிருக்கலாம்தான். ஆனால் ஏனய அனைத்தையும், அதைத் தினம்தினம் அனுபவித்ததுவருபவர்களின் நிலையிலிருந்து பாருங்கள் - ஒருவேளை பிடிக்கலாம். எனக்குப் பிடித்திருந்தது

    ReplyDelete
  6. its a nice story and true thing which happens in most parts of country...a flim like this is must to realize where we are n how we are...

    ReplyDelete
  7. அடிமட்ட வாழ்க்கையில் நிகழும் சாவு அந்த வீட்டு உறுப்பினர்களை எவ்வாறு பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள்.. என்னைப்பொறுத்தவரை நல்ல படம்..

    //கனாக்காணும் காலங்கள் புகழ் பாண்டியின் அந்தக் குசும்பு பிடித்திருக்கின்றது. காதல்க்கவிதை எழுதத் தெரியாமல் ஒருத்தன் படும்பாட்டை நான் பட்டபாடாய் ரசிக்க முடிகின்றது. ஒன்பதாம் வகுப்புத் தேவாரத்தின் அடிவரியில் தன் காதலியின் பெயரை எழுதி காதல் கவிதையாய் ஒப்புவிக்கும் வல்லமையை எனக்கும் தருவாயாக.//

    ஹாஹா... BLACK பாண்டி ROCKS..:)

    ReplyDelete

You might also like