2003 ஆம் ஆண்டு... இலங்கையில் சமாதானம் வேடம் தரித்த காலநிலை கருக்கட்டியிருந்த காலம். இப்போது சொல்வதென்றால் அது ஒரு கனாக்காலம். உயர்தரப்பரீட்சை எடுத்து விட்டு பருத்தித்துறை வீதி முழுவதும் எங்கள் இரு சில்லு வண்டிகள் புழுதி கிளப்பிக் கொண்டிருந்தன.
அடிக்கடி முகமாலை தாண்டி நான் பிறந்த மண்ணையும், அங்குள்ள என் உறவுகளையும் காணச் செல்வதுண்டு. 1991 ஆம் ஆண்டு ஆகாயமும் கடலும் வானமும் ஒருங்கு சேர பெயர் சூட்டி பின்னர் இழந்திருந்த மண்ணை அந்தச் சமாதான காலத்தில் காண முடிந்தது.
ஆழியவளை... என்னை ஈன்றெடுத்த மண். வடமராட்சி கிழக்கு கிராமங்களில் ஒன்று... யுத்தம் எப்படி எங்களைப் பிய்த்து உதறியது என்பதன் எச்சங்கள் இங்கும் தாராளமாக கிடைக்கும். (இப்போது இன்னும் தாராளம்...)
அங்கு சென்றிருந்த ஒரு நாளில் பத்திரமாக பொத்தி வைத்திருந்த கொழும்பு நாளிதழொன்றை அத்தை நீட்டினாள். அதிலிருந்த சிறுகதையொன்றை சுட்டிக்காட்டி, "கரன்... இந்தக் கதையைப் படிச்சுப்பார்... நல்லாயிருக்கு... யாரோ எங்களின் ஊர்ப்பிள்ளைதான் எழுதியிருக்கவேணும்... " அவளின் சந்தேகத்துக்கும் காரணமிருந்தது. ஏனெனில், எங்கள் ஊர் தொட்டு நாங்கள் இடம்பெயர்ந்து வசித்திருந்த ஊர்கள் ஊடாக, எங்கள் வலிகளினை தாங்கியவாறு அந்தக் கதை நகர்ந்திருந்தது. புன்னகை மேலிட "நிச்சயமாக..." என்று தலையாட்டினேன்.
என் அத்தை கெட்டிக்காரி... சில விடயங்களில் அவளிடம் நான் 'செக்மேட்' ஆகியிருக்கின்றேன். அன்றும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அந்த சிறுகதையை எழுதின ஆதிரையை எனக்குத் தெரியாது என அவள் மீது சத்தியம் செய்யச்சொன்னாள். நான் எழுதின சிறுகதையை நானே மீள வாசிக்கும் போது முகபாவனை அவளுக்கு என்னைக் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். பிறகென்ன...? அதுவரை பொத்திவைத்த சங்கதிகள் வெளியில் வர அன்றிலிருந்து நான் ஆதிரையானேன்.
அப்பாவும் அம்மாவும் சிறிகரன் எனப்பெயர் சூட்ட நான் ஏன் ஆதிரை எனும் பெயரை தெரிவு செய்தேன்? காரணம் இருந்தது. இவ்வுலகில் புதுப்பிறப்பெடுத்த ஒவ்வொருத்தருக்கும் பெயர் சூட்டுதல் கட்டாயமாகிப் போனது. என் உறவொன்றுக்கும் சூட்டுவதற்காக நாள் நட்சத்திரம் பார்த்து மூன்று பெயர்கள் தெரிவாகிவிட்டன. அதற்குள் ஆதிரை எனும் பெயரும் அடக்கம். ஆனால், அவர்கள் வேறொரு பெயர் சூட்டிவிட - அப்பெயரை நான் உச்சரிக்க முடியாமல் போக எனக்குப் பிடித்த ஆதிரை எனும் பெயரை சூட்டிக்கொண்டேன். இப்போது அந்த உறவின் நினைவுகள் ஆதிரை எனும் பெயரினூடே என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
என்னுடைய பதிவுல பிரவேசமும் 'ஆதிரை' எனும் பெயரினூடே அமைய, பலர் ஆதிரை தான் சிறிகரன் என அறிந்திருந்தார்கள். சிலர் சந்தேகம் மேலிட கேட்ட போது ஏனோ தெரியவில்லை நழுவல் பதில்களே அவர்களுக்கு கிடைத்தன. இன்னும் சிலர் எச்சரித்து வசை பாடிச் சென்றார்கள்.
கருத்துக்களை நேரே சொல்லத் திராணியற்று - அச்சம் கொண்டு புனை பெயரில் முகம் புதைத்துள்ளேன் என குற்றம் சுமத்தி விரல் நீட்டினார்கள். இல்லையென்றும் இல்லை. ஆனாலும், தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சிக்கு முன்னால் முகத்துக்கு திரை போட்ட வண்ணம் இணையத்தில் உலாவரமுடியாது என்பதை நான் நன்குணர்ந்துள்ளேன். சிலரின் பட்டுத் தெளிந்த பட்டறிவு சொல்லும் கதைகள் ஒரு விதத்தில் சுவாரசியமானவை. :-)
யாழ். மாவட்டத்தின் ஆழியவளை மண் பெற்றெடுக்க இன்று இலங்கையின் மாநகரில் என் வாழ்க்கை ஓடவேண்டிய கட்டாயம். உண்மையில், இந்நகர வாழ்க்கை எனக்கொரு நரக வாழ்க்கை. எனக்கு நினைவு தெரியத்தொடங்கிய 80 களின் பிற்பகுதி தொட்டு இன்றுவரை என் வாழ்க்கை ஒரு ஈழத்தமிழனின் வாழ்க்கையாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது.
போர்... போர்... போர்...
நான் நடந்து வந்த பாதை நெடுகிலும் - கடந்து வந்த தடைகள் மீதிலும் இது தாராள மனத்துடன் கூடியே வந்திருக்கின்றது. சுருங்கக்கூறின், அன்றைய கோள்மூட்டி 'சீப்பிளேன்' தொட்டு இன்றைய 'கிபிர்' வரையிலான பரிணாம வளர்ச்சி அட்சரம் பிசகாது எனக்கு அத்துப்படி.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
அடிக்கடி முகமாலை தாண்டி நான் பிறந்த மண்ணையும், அங்குள்ள என் உறவுகளையும் காணச் செல்வதுண்டு. 1991 ஆம் ஆண்டு ஆகாயமும் கடலும் வானமும் ஒருங்கு சேர பெயர் சூட்டி பின்னர் இழந்திருந்த மண்ணை அந்தச் சமாதான காலத்தில் காண முடிந்தது//
ReplyDeleteஅடங் கொய்யாலா?? இதைச் சொல்லுறதுக்குக் கூடக் கொழும்பில அருகதையில்லையோ?? பாவம் எங்கள் தமிழர்கள்??
ஒரு பேருக்குள்ளே இத்தனை ரகசியங்களா?....தொடருங்கோ..
ReplyDelete//இவ்வுலகில் புதுப்பிறப்பெடுத்த ஒவ்வொருத்தருக்கும் பெயர் சூட்டுதல் கட்டாயமாகிப் போனது. //
ReplyDeleteஉண்மைதான் ஆதிரை.
அழகான நடை. தெளிவான பதிவு. உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.
- பொன்.வாசுதேவன்
அழகான தமிழ்ப் பெயர் ஆதிரை..
ReplyDelete// கருத்துக்களை நேரே சொல்லத் திராணியற்று - அச்சம் கொண்டு புனை பெயரில் முகம் புதைத்துள்ளேன் என குற்றம் சுமத்தி விரல் நீட்டினார்கள்.
ReplyDeleteவீண் புலம்பல்களை கணக்கில் எடுக்காமல் தொடருங்கள் உங்கள் பணியை.. வாழ்த்துக்கள் :)
//அன்றைய கோள்மூட்டி 'சீப்பிளேன்' தொட்டு இன்றைய 'கிபிர்' வரையிலான பரிணாம வளர்ச்சி அட்சரம் பிசகாது எனக்கு அத்துப்படி//
ReplyDeletev knw tht u r a "kadal" in tht area
@கமல்
ReplyDelete//அடங் கொய்யாலா?? இதைச் சொல்லுறதுக்குக் கூடக் கொழும்பில அருகதையில்லையோ?? பாவம் எங்கள் தமிழர்கள்??
இதைப் புரிவதற்கு அவ்வளவு கடினமா? பாவம் நீங்கள்...
// ஒரு பேருக்குள்ளே இத்தனை ரகசியங்களா?....தொடருங்கோ..
இன்னும் இருக்கு... சொல்லமாட்டேன்.
நன்றி கமல்
@அகநாழிகை
ReplyDelete//அழகான நடை. தெளிவான பதிவு. உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
@சுபானு
ReplyDelete// அழகான தமிழ்ப் பெயர் ஆதிரை...
பெயர் மட்டும் தானா?
//வீண் புலம்பல்களை கணக்கில் எடுக்காமல் தொடருங்கள் உங்கள் பணியை.. வாழ்த்துக்கள் :)
நிச்சயமாக... நன்றி சுபானு.
@Tharsan
ReplyDelete//v knw tht u r a "kadal" in tht area
தம்பி ராசா... நாளைக்கு கொண்டுபோய் கடலை அளந்து காட்டு என்று கேட்டால் உதவிக்கு நீங்களா வரப் போறீங்கள்...?
நன்றி தர்சன்.
//யாழ். மாவட்டத்தின் ஆழியவளை மண் பெற்றெடுக்க இன்று இலங்கையின் மாநகரில் என் வாழ்க்கை ஓடவேண்டிய கட்டாயம். உண்மையில், இந்நகர வாழ்க்கை எனக்கொரு நரக வாழ்க்கை. எனக்கு நினைவு தெரியத்தொடங்கிய 80 களின் பிற்பகுதி//
ReplyDeleteபிறந்த மண்ணில் குறைந்த வசதிகளோடு நிறைவாய் வாழும் வாழ்க்கை பிறிதொரு இடத்தில் கிஞ்சித்தும் கிடைக்காது!
எல்லாமே தற்காலிகமானவைதான்!
இனிய வாழ்க்கை எதிர் பார்த்து பயணத்தினை தொடருங்கள்...!
வாழ்த்துக்களுடன்
"அன்றைய கோள்மூட்டி 'சீப்பிளேன்' தொட்டு இன்றைய 'கிபிர்' வரையிலான பரிணாம வளர்ச்சி அட்சரம் பிசகாது எனக்கு அத்துப்படி"
ReplyDelete- அடுத்த T.R. ?
ஆதிரை - ஆகாயமும் வானும் ஒருங்கு சேர பெயர்சூட்டச்சென்று திரும்பிவராத என் முன்வீட்டு அக்காவின் 'இரண்டாவது' பெயர், எனக்கும் பிடிக்கும்!
ReplyDelete