Search This Blog

Sunday, March 22, 2009

எனக்குப் பிடித்த இளங்குயில்கள்

சக பதிவர் கமலிடமிருந்து ஒரு அழைப்பு. எனக்குப் பிடித்தவர்களைப் பற்றி பதிவிடுமாறு கேட்டிருந்தார். மறுப்பின்றி அதற்கு சம்மதமும் தெரிவித்திருந்தேன்.

ஆனால், வேலைத்தளத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புறொஜெக்ற்(Project) ஒன்று என்னையும் உள்வாங்கிவிட மூச்சு விடக் கூட அவகாசமின்றிய நிலை. என் கணனி 'கீபோர்ட்' இனை கேட்டால் என் வேதனையை அது சொல்லி அழும். ஏனெனில், என்
புறொஜெக்ற் மனேஜர் மீதான கோபங்களை தீர்ப்பதற்கு மிருதங்கம் அடிப்பதைப் போல அதை தட்டுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்...?

ஆனாலும், இவ்வார விடுமுறையில் எனக்குப் பிடித்தவர்களைப்பற்றி பதிவிட எண்ணியிருந்தேன். அவர்கள் ஒருத்தரும் உலகசாதனை விற்பன்னர்களல்ல... மாறாக, என்னுடன் ஒட்டி உறவாடிய அன்புள்ளங்கள்; என் மனதிலிருந்து எப்போதும் நீங்காதவர்கள்.

ஆனால், நேற்று மூஞ்சிப்புத்தகத்தின் (Facebook) ஊடாக நண்பன் அனுப்பிய இணைப்பு என் கவனத்தை ஈர்த்தது. Super Star Junior எனும் பாடல் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய சிறுமி ஒருத்தியின் பாடல் காட்சி அது.

இந்தச் சின்ன வயதில் இத்தனை திறமைகளா என எனக்குள் ஒரு வியப்பு. பதின்ம வயது, மேடைக்கூச்சம் இல்லை, சபை அச்சமின்றிய உரையாடல், அவர்களின் குரல் வளம்... இத்தனையும் சேர்ந்து என்னுடைய இரு இரவுகளைத் தின்று விட்டன.

நண்பன் அனுப்பிய இணைப்பு எனக்குப் பிடித்துப் போக Youtube இணையத்தில் சென்று மீதமுள்ள பாடல் காட்சிகளையும் கண்டு ரசித்தேன். சில பாடல்களை தரவிறக்கம் செய்தும் வைத்துள்ளேன். இந்தப் பாலகர்கள் சில இடங்களில் தமிழ்மொழி உச்சரிப்பில் தடுமாற்றம் கண்டாலும் இப்பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

இவ்வார விடுமுறையில் என்னை கணனியுடனே கட்டிப்போட்ட இந்த இளங்குயில்களின் சில பாடல் காட்சிகளை உங்கள் ரசனைக்காகவும் இங்கு தந்துள்ளேன்.

மிக விரைவில் எனக்குப் பிடித்தவர்களை சுமந்த வண்ணம் இன்னொரு பதிவினூடு சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.
















4 comments:

  1. பார்த்து அசந்திட்டேன்.

    ReplyDelete
  2. There are very good talents in Jaya TV Sunfeast Young Masters also. (Mahita so on). Please give link to their songs also.

    ReplyDelete
  3. //இந்தப் பாலகர்கள் சில இடங்களில் தமிழ்மொழி உச்சரிப்பில் தடுமாற்றம் கண்டாலும் இப்பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.

    அவர்களின் திறமையின் முன்னால் தவறுகள் தெரியவில்லை....

    ReplyDelete
  4. @வடுவூர் குமார்
    நன்றி

    @Shabeer
    முயற்சிக்கின்றேன்.

    @Triumph
    நிச்சயமாக சகோதரி. உங்கள் வீட்டு முற்றத்தில்தான் பாரிய யுத்தமே நடக்கின்றதே... :P

    ReplyDelete

You might also like