Search This Blog
Sunday, March 15, 2009
அழாதே நண்பா...
செய்தி அறிந்தேன்...
அழாதே தோழனே
நாளை நான் அழும்போது
ஆறுதல் சொல்ல நீ வேண்டும்.
ஏனெனில்,
பாதுகாப்பு வளையத்துக்குள்
எனக்கும் சொந்தங்கள் உண்டு.
Labels:
ஈழம்,
கவிதை,
நடப்பு,
நினைவலைகள்,
யுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்களொன்றும் மனிதர்களல்லவே... என்றோ மரத்துப்போய் மரக்கட்டைகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்...
ReplyDeleteநன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறைய வலிகளுடன் காணப்படுகின்றது...
ReplyDelete//ஏனெனில்,
ReplyDeleteபாதுகாப்பு வளையத்துக்குள்
எனக்கும் சொந்தங்கள் உண்டு.//
ஆம் நாளை அவர்களுக்காக அழும்போது ஆறுதலுக்கு நண்பர் வேண்டும் ஆதிரை. இதுவிதியென்று இருப்பதைவிட வேறெதைச் செய்வோம்.
பாராட்டுக்கள்.
(ஆதிரை எனக்குப் பிடித்த பெயர்களில் ஒன்று)
சாந்தி
தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் என் அன்புத் தோழர்களாக
ReplyDelete1)மலையகம் பற்றி மகத்தான பதிவிடும் நண்பன் ‘கலை இராகலை’
2)பழைய பாடல்களினூடே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரி ‘’சாந்தி’’
3)கடலேறிப் பல்கலை போகும் நண்பன் ‘’ஆதிரை’’!
இவர்கள் யாவரும் என்னைப் போல் அல்லாது மிக மிக வேகமாக ஆடுகளத்தில் அடித்தாடுவார்கள் என்ற நம்பிக்கையில் களம் இறக்குகின்றேன்
@மதுவதனன் மௌ.
ReplyDelete//தொடர்ந்து அழுதுகொண்டிருக்க நாங்களொன்றும் மனிதர்களல்லவே... என்றோ மரத்துப்போய் மரக்கட்டைகளாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்...
அரியணையில் வீற்றிருந்த போது நலம் விசாரித்து சென்றவர்கள் எல்லாம் இன்று எங்கள் பிணங்களில் அட்சர கணிதம் படிக்கின்றார்கள்.
@யாழினி
ReplyDelete//நன்றாக உள்ளது ஆதிரை தங்கள் கவிதை; நிறைய வலிகளுடன் காணப்படுகின்றது...
இதுவும் கடந்து போகும். அப்படித்தான் நம்பியிருந்தோம். ஆனால், தொடர்கதையாக தொடர்கிறதல்லவா இந்த அவலங்களும், மரணங்களும்...
@சாந்தி
ReplyDelete//இதுவிதியென்று இருப்பதைவிட வேறெதைச் செய்வோம்.
கூடவே சில சதிகளும் தான். :(
//ஆதிரை எனக்குப் பிடித்த பெயர்களில் ஒன்று
அப்படியா...? ஆச்சரியமளிக்கின்றது!
அடுத்த பதிவில் யாரிந்த ஆதிரை என்றுதான் எழுதப்போகின்றேன். இப்பெயர் எனக்கு நான் சூட்டியது என்றதன் பின்னால் ஒளிந்திருக்கும் சில விடயங்களை இப்போது சொல்ல மாட்டேன்.
இப்பதிவுக்கு பின்னர்தான் கமலின் சங்கிலித் தொடரில் இணைவது உசிதமென எண்ணுகின்றேன்.
கமல்,
ReplyDeleteஆடுகளத்தில் இறக்கிவிட்டு பெவிலியனில் காத்திருக்கின்றீர்கள்.
இப்போதெல்லாம் எகிறி வரும் பந்துகளை விட சீறி வரும் ரொக்கட் குண்டுகளைப் பற்றித்தான் அதிக கவனம் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றேன்.
ஆனாலும், மட்டை எடுத்தவன் பந்தை அடிக்கத்தானே வேண்டும். அடுத்து வரும் பதிவுக்கு அடுத்ததாக சங்கிலித் தொடரை பற்றுகின்றேன்.
நன்றி நண்பரே....
நாளை நான் அழும்போது
ReplyDeleteஆறுதல் சொல்ல நீ வேண்டும்//
கனத்த வரிகள் நண்பா...காலம் தான் பதில் சொல்ல வேண்டும்?? கவிதை சோகம் கலந்த புயல்
அழுவதற்கு ஒரு தமிழன்
ReplyDeleteபிறந்திருக்கிறான்.!
ஆறுதல் சொல்ல இன்னொருதமிழன்
பிறந்திருக்கிறான்
இது தமிழன் சங்கிலி..!
(இது எனது முதல் தருகை)
@கமல்
ReplyDelete// காலம் தான் பதில் சொல்ல வேண்டும்??
பாரம் கொடுத்து விட்டோம். ஆனால், எங்கள் அவலத்தின் சுமைகள் இறங்கியதாக தெரியவில்லையே...
@SASee
ReplyDeleteமுதல் த(வ)ருகைக்கு நன்றி நண்பரே.
//இது தமிழன் சங்கிலி..!
புரியவில்லை.
சொல்ல வார்த்தைகள் இல்லை எதுவும் சொல்லாமல் செல்ல மனமும் வரவில்லை எம் சொந்தங்களின் கவலை கண்ணீர் என்று தான் தீருமோ?
ReplyDeleteசிந்தும் கண்ணீரில் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள் நாளை எனக்காக கூட நீ அழ வேண்டி வரலாம்
வலிகளை சொல்லிய் விதம் அழகு