Search This Blog

Wednesday, May 6, 2009

ஒ(ஓ)ட்டுக் கேட்ட போது...


ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள்... இரு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.

"மச்சான் எப்படியடா வாழ்க்கை போகுது..." புலத்திலிருந்து குசலம் விசாரித்தான்.

"ஏதோ... இருக்கிறோம்." பதிலின் தொனி இவன் இலங்கையில் இருப்பதைக் காட்டியது.

"என்னடா இப்படி நெருக்கிறாங்கள்... இன்னும் ஒன்றையும் காணவில்லை..."

"ம்...ம்..."

"என்னடா ம்...ம்... உங்க உண்மையில் நிலைமை எப்படி...?"

"என்னைக் கேட்டுத்தான் நீ தெரியவேணுமாக்கும். ஏதும் பிரயோசனமாகக் கதைப்போமா..."

பல்கலைக்கழகம், படிப்பு, மகளிர், நண்பர்கள் எனப் பிரயோசனமாக(?) நடந்த உரையாடல் மீண்டும் ஓரிடத்த்ல் வந்து சிக்கெடுத்துக் கொண்டது.

"Facebook இல் நான் அனுப்பிய Groupஇல் நீ இன்னும் சேரவில்லையா...?"

"ஓ அதுவா...! நான் இப்பவும் இறைமையுள்ள இலங்கையில் தான் இருக்கிறேன்..."

"அந்த Groupஇல் இணைவதில் என்னடா தப்பு..? எங்களுக்காக அவர் அங்கேயிருந்து உண்ணாவிரதமிருக்கிறார். அவருக்கு ஒரு சப்போட் கொடுக்கிற மாதிரியாவது நாங்கள் இருக்க வேண்டாமா...? Facebook இல் சும்மா இருந்து கடலை போடுற நேரம் இப்படி ஏதாவது பண்ணடா... "

"அதில் இணைவதனால் ஏதாவது நல்லது நடக்குமா...?"

"எங்களுக்கு நல்லது நடக்க வேணுமென்று அவர் செய்கிறதை கொச்சைப்படுத்தாதே..."

சொல்ல முடியாத - எழுத முடியாத
இருவருக்குமிடையேயான சூடு பறந்த விவாதப் பெறுபேறு அவனும் அந்தக் குழுவில் இணைந்து கொண்டான்.

* * *

நேற்றும் அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டேன்.

"மச்சான் எப்படி இருக்கிறாய்..." புலத்திலிருந்து வந்த குரல் உடைந்திருந்தது.

"என்னத்தைச் சொல்ல...? ஏதோ இருக்கிறம்..." குரலில் விரக்தி கூடியிருந்தது.

"என்னடா என்ன நடக்குது...? எங்கட சனத்தை ஒருத்தரும் காப்பாற்ற இயலாதா..??????"

"யார் சொன்னது இல்லையென்று... காப்பாற்ற என்று தானே பலர் படையெடுக்கினம்...:-("
சோகத்திலும் ஏளனம் எட்டிப் பார்த்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
"மச்சான் மன்னிச்சுக் கொள்ளடா... அன்றைக்கு அந்த Groupஇல் இணையச் சொல்லி உன்னை வற்புறுத்தி இருக்கக் கூடாது..."

"ஏன்....?"

"இல்லையடா... நேற்று அவர் சொன்னது கேட்டாயா...? அம்மா எங்களுக்காகத்தான் உழைக்கிறாவாம்."

"எந்த அம்மா...?"

"இத்தாலி அம்மணி..."

தொலைபேசி வைக்கப்படும் சத்தம் தெளிவாக கேட்டது.
"We Wish You Thiruma..." எனும் குழுவிலிருந்தும் விலகிக் கொள்கின்றான் அவன்.

* * *

Facebook இல் எனக்கு "AIADMK Supporters Group" எனும் குழுவில் இணைவதற்கான அழைப்பு வந்திருந்தது.

அவள் எதிரியாகவே இருக்கட்டும். காலம் மாறினால் கடவுளாகுவாள். ஆனால், அவளைத் துரோகியாக்க நான் விரும்பவில்லை.

6 comments:

 1. i feel it is better to support JJ. because we must remove karunanithi. because he is a fox. avar panniyathu mika periya thuurookam. aakave athukkava sahtanin kaalil vilunthu avari neekinal ippadi yaarum ine em thopul kodi uravukalai kondu olikka mudiyathu. other than taht everyone must is doing politics so we cant expet tehm much. but wht i feel is removing Karunanithi no no showing that if anyone think bad about tamils we must teach a good lesson. I dotn say JJ is good. she is worse. but No one comes near to karunanithi. last week in TN posters are all over telling poor nirutham ilangail. sila maalai pathirikailal sollukindrana poor nirutham illai enna. avarkalin meel nadavadikai edukka padum endru. notice otiyathu karunanithi uvuaakiya tmaillar pathukappu amaipu.

  ReplyDelete
 2. u have mistaken which amma is that, its JJ not the pitch Sonija.

  ReplyDelete
 3. நீங்க தப்பு.அம்மா ஜெயா வுக்கு தான் நிச்சயம் வெற்றி கிடைக்கும். சொன்னதை செய்ய அம்மாவால தான் முடியும்.

  ReplyDelete
 4. நண்பர்களே...
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
  கருணாநிதியும் காங்கிரஸும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் என்னிடமும் எதிர்க்கருத்து இல்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் இந்த மாற்றம் உண்மையானது என்பதை நம்ப நான் இப்போது தயாரில்லை. அவர் சொன்னது போன்று எம்மக்களின் துயரங்களுக்கு முடிவு காணப்படுமாயின், தமிழர் சரித்திரத்தின் பக்கங்களில் நிச்சயம் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். காலம் பதில் சொல்லட்டும். அதற்காக அதுவரை எதையும் பிற்போட்டுவிட்டு காத்திருந்தால், அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.

  //சொன்னதை செய்ய அம்மாவால தான் முடியும்.
  அதுவே அனைவரினதும் விருப்பம்.

  ReplyDelete
 5. சொன்னதை செய்யும் துணிச்சல் ....
  சொல்லாததை எதிர் கொள்ளும் தைரியம்.....அதுதான் ஜெயலலிதா...
  எடுத்துக்காட்டுகள் :

  தமிழக அரசு ஊழியர்களின் கொட்டத்தை அடக்கிய திறமையை யாரும் மறக்க இயலாது
  .
  கருணாநிதி தொடுத்த பல நூறு வழக்குகளை தனி ஒருத்தியாய் சமாளித்த /சமாளிக்கும் ஒரு பெண்மணி.

  மணல் மற்றும் சாராய கடை வருமானத்தை அரசாங்க நலனுக்காக அரசுடமை செய்த ஒரு மாவீரம்.

  கருணாநிதி இலவசங்களை அளித்து எம் தமிழனை சோம்பேறி அல்லது பிச்சை எடுக்க பழக்குகிறார்.

  கருணாநிதியை விட ஜெயலலிதா பன்மடங்கு நம்ப தகுந்தவர்.

  ReplyDelete
 6. பாஸ்கரன் சுப்ரமணியன் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  நீங்கள் இங்கு குறிப்பிட்டவற்றை விட ஈழப்போர் சார்பாக ஜெயலலிதா கடந்த காலத்தில் சாதித்தவற்றை நான் பட்டியலிட்டு உங்களின் வாதத்துக்கு எதிர்க்கருத்து இடுவேனாயின் அதை விட கோமாளித்தனம் எதுவுமில்லை. ஆனாலும், அப்படியும் சில நடந்திருக்கின்றன என்பது உங்களுக்கும் தெரியும்; எல்லோருக்கும் தெரியும்.

  நீங்கள் கூறுவது போன்று ஜெயலலிதா சாதிக்க வேண்டுமென்றே விரும்புகின்றோம். அது நடக்குமென உறுதியாக நம்புகின்ற உங்கள் நம்பிக்கை ஆறுதலை அளிக்கின்றது.

  ReplyDelete

You might also like