ஐ.தே.க
நீண்ட காலத்தின் பின்னர்
நினைவூட்டப்படுகிறது இப்பெயர்...
வரத் தொடங்கியிருக்கும்
தேர்தல் முடிவு குறுஞ்செய்திகளில்
ஆச்சரியமாய்த் தொங்குகின்றது
எதிர்க்கட்சி ஜனநாயகம்...
விஜயம்
முப்பத்திரண்டு பற்களையும்
காட்டியவாறு வந்திறங்குவீர்கள்.
உங்களுடன் குலுக்குவதற்கு
கைகளில்லாதவனின் மனம்
இப்படியும் உங்களை சபிக்கலாம்...
"என்னையும் சேர்த்து கொல்வதற்கு
ஏன் மறந்தீர்கள்...?"
சமாதானம்
உன்னைத் தேடிக் களைத்துப் போனார்கள்.
அதனால் தான்,
நீ வருவாயென்ற நம்பிக்கையை விட
கையூட்டுக் கொடுத்தாவது வர வைக்கின்றார்கள்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு...!!!
Couple Package
இன்னமும் என் தொலைபேசியில்
இரு வருடங்களுக்கு முன்னைய உன் SMS.
பார்த்தாயா...?
இரு வருடமாய் எனக்கு நீ SMS அனுப்பவில்லை.
எங்கள் Couple Package இற்கு இன்றுடன் இரு வருடங்கள்....!!!
நல்ல கவிதைகள் ஓபாமாவும் ஐதேகவும் கலக்கல். ஆளை கட் பண்ணும்போது மொபைல் கப்பிள் கனெக்சனையும் கட் பண்ணவேண்டும். கட் பண்ணி புதிய இணைப்பை இன்னொருவரிடம் கொடுக்கவேண்டும். இதெல்லாம் தெரியாமல் சின்னப் பிள்ளையாக இருக்கிறாய்
ReplyDeleteஉண்மை தான்
ReplyDelete//தேர்தல் முடிவு குறுஞ்செய்திகளில்
ReplyDeleteஆச்சரியமாய்த் தொங்குகின்றது
எதிர்க்கட்சி ஜனநாயகம்...
//
வருகிற முடிவுகளைப்பார்த்தால் எதிர்க்கட்சிக்கு வருவதுபோலத் தெரியவில்லை. சுயேட்சைக்குழு போலத்தான் இருக்கிறது. ஒபாமா விசயத்தில் அதை அவரே ஏற்றுக்கொண்டுவிட்டாரே.
//இரு வருடமாய் எனக்கு நீ SMS அனுப்பவில்லை.
எங்கள் Couple Package இற்கு இன்றுடன் இரு வருடங்கள்....!!!
//
இப்பெல்லாம் யாரும் SMS அனுப்புவதில்லை. Blaster இல் Call தான். அதுதானே?
எவ்வளவு விடயங்களை இணைக்க முடியுமோ அவ்வளவுக்கு இணைத்திருக்கிரீன்களே... இதில ஏதாவது இல நோக்கம் இருக்கா?
ReplyDeleteஆஹா... கவிதைகள் அனைத்தும் நன்று ஆதிரை!
ReplyDeleteநாலுமே கலக்கல்..
ReplyDeleteவிஜயம் - அருமை..
ஐ.தே.க - உண்மை..
சமாதானம் - அப்பிடின்னா ஏன்னா?
ஆனால் ஒபாமா கையூட்டு நல்ல பார்வை..
கப்பிள் பக்கேஜ் அனுபவமா அல்லது அனுதாபமா? ;)
வந்தியின் அனுபவக் குறிப்புக்களில் அடுத்த கட்டத்தை வெற்றியாக மாற்றவும். காதல் 'சிலுவைகள்' நீலமாக. சாரி.. நீளமாக இருந்தாலும் பாரமாக இருக்காது தம்பி.. :)