இத்தகவல் அவசரமாக எனக்குத் தேவைப்படுகிறது. நேற்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும், இன்னும் பொருத்தமான ஆளைக் கண்டுபிடிக்காமல் தேடிக் கொண்டிருக்கின்றேன்.
ஆபத்து, அவசரத்துக்கு உதவுகின்ற நண்பர்கள் இருக்கும் போது ஏன் கவலையென எண்ணி என் Gmail Chat இல் இருந்த நண்பர்களிடம் வினவினேன்.
உங்களில் யாருக்காவது ரூபி தெரியுமா...?
இக்கேள்விக்குப் பதிலாய் மூவர் அனுப்பிய தகவலால் என் வேலைத் தளமே அதிர்ந்தது. சிரித்து சிரித்து, மத்தியானச் சாப்பாடு செமித்து - வயிறு நோவெடுத்து வலித்தது.
முதலாவதாக நான் வினவியதே இவரிடம் தான். கிடைத்ததோ வில்லங்கமான பதில். குறும்பு பண்ணுபவர்களுக்கு முதல் குழந்தை ஆணாகவே கிடைக்கும் என சாத்திரக்காரன் ஒருத்தன் சொல்ல, குறும்பு பண்ணினால் தான் குழந்தையே கிடைக்கும் என அருள்வாக்கு கூறியவனிடம் விடையை எதிர்பார்த்தது என் தப்புத்தான். அவன் எனக்குப் பதிலாய் ஒரு வினாவையே அனுப்பினான்.
"டேய்... என் வாழ்க்கையில் இன்னும் சந்திக்கவில்லை. ஆனால், மூஞ்சிப்புத்தகத்தில் (Facebook) ஒருத்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். அவளையா கேட்கிறாய்...?"
இன்னொரு நண்பன் ஒரு படி மேலே போய், "டேய்... சும்மா நக்கலடிக்காதே... என் பக்கத்து வீட்டுப் பிள்ளையின் பேர் எப்படிடா உனக்குத் தெரியும்..? அவளுக்குப் போனமாதம் தான் நிச்சயதார்த்தம் முடிந்தது... விட்டுடா..." வாழ்த்துக்கள் நண்பா. உன் பாதையில் நான் ஏன் குறுக்கிடுவேன்!!!
"ஓமடா... தெரியும். என்னோட ஆறாம் ஆண்டிலிருந்து ஒன்றாகப் படிச்சவள். O/L இல் நல்ல றிசல்ட்டுடன் வந்து A/L இல் கொடி கட்டிப் பறந்தவள். பின்னொரு நாள் கனடாவிலிருந்து வந்த ஒருத்தன் கொண்டு போய்விட்டான்..." மூன்றாமவனுக்கு அனுதாப ஸ்மைலியை பதிலாக அனுப்பிவிட்டு Chat யன்னலை மூடியே விட்டேன்.
உங்களில் யாராவது தெரிந்திருக்கிறீர்களா எனக் கேட்டு திரும்பவும் நான் நொந்து போவதை விட விளக்கமாகவே கேட்டுவிடுகின்றேன்.
அப்படித் தெரிந்து இலங்கையில் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி
நீங்கள் சற்றுவிளக்காமாகக் கேட்டிருக்கலாம் எனத் தோன்றுகின்றது... ரூபி என்றவுடனே அதுவும் நீங்கள் கேட்பதன்றால் அது ஒரு பொண்ணாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்துவிட்டார்களோ என்னமோ..
ReplyDelete:P
நான் நினைத்தேன் மாளிகாவத்தை ரூபி தியேட்டரைக் கேக்கிறீங்க எண்டு.. ;)
ReplyDeleteநீங்க என்னிடம் கேட்டிருக்கலாம்.. அட்லீஸ்ட் ரூபி கல்லையாவது சொல்லி இருப்பேன்..
அந்த முதலாமவர் வ வில் பெயர் ஆரம்பிப்பவர்..
மூன்றாமவர் நான்கேளுத்துப் பதிவர் அப்பிடித்தானே? ;)
சுபாங்கன் சொன்னதும் சரிதான்.. கேட்பவர் கேக்கணும். ;)
programme க்கெல்லாம் ரூபி என்று பேர்
ReplyDeleteவைப்பாங்களோ.ஒருவேளை டெவெலொப் பண்ணினவரோட girlfriend பெயரா இருக்குமோ
@Loshan
ReplyDeleteசுபாங்கன், சுபானு....அடிக்கடி பெயர் தடுமாற்றம் உங்களுக்கு... ம்ம்ம்... வயசு போகுதில்ல. அதுதான்.
மற்றது, சாத்திரக்காரன் தான் அந்த வ.
ஹா ஹா... விடு விடு... வழமையா எங்கட பொடியங்கள் பொம்புளைப் பேரில மூஞ்சிப் புத்தக புரபைல் உருவாக்கி எங்கள் எல்லாருக்கு அழைப்பனுப்பி அலுப்படிப்பாங்கள்..
ReplyDeleteஅப்படி ஏதோதான் உனக்கு வந்து நீ என்னைக் கேக்குறாய் எண்டு நினைச்சன்.. விடுப்பா.. இனியென்ன இதையும் பாக்கட்டும் மகாஜனங்கள்..
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
3:25 PM
srikaran: hi
busy?
me: Hi
it is oki
:D
srikaran: do u know anyone who is knowing Ruby
3:26 PM
me: Facebook? or in real life?
srikaran: podangooo
this is open source language
me: In Facebook I heard that name
:D
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
பிரியமுடன்,
மதுவதனன் மௌ.
ஓ... மது நேற்று கேட்டதுக்கு முதல் இதுவும் நடந்ததே...
ReplyDeleteநான் இருந்த அரைத் தூக்கத்தில (அலுவலகத்தில தான்) எனக்கு சரியா விளங்கேல்ல...
//எங்கட பொடியங்கள் பொம்புளைப் பேரில மூஞ்சிப் புத்தக புரபைல் உருவாக்கி //
முதலாவது comment போட்டவரையோ சொல்லுறீங்க...?
எனக்கு இன்னும் அந்த c language ஏ முழுசா விளங்கயில்லை, புதுசா ரூபியா? மீ த எஸ்கேப்பு :))
ReplyDeleteஆதிரை என்னைக் கேட்கும்போது உடனேயே நான் அவர் Programming Language ரூபியைத் தான் கேட்கின்றார் என்பது புரிந்துவிட்டது காரணம் எனக்கு ஓரளவு ரூபியுடன் தொடர்பிருந்ததுதான்.
ReplyDeleteஎனக்கு ரூபியைத் தெரியும் ஆனால் நீங்கள் கிடக்கும் ரூபியை தெரியாது.
ReplyDelete@சந்ரு
ReplyDelete//ஆனால் நீங்கள் கிடக்கும் ரூபியை தெரியாது.
அவ்வ்வ்வ்........
என் பின்னூட்டத்தில் சிறு திருத்தம்
ReplyDeleteஎனக்கு ரூபியைத் தெரியும் ஆனால் நீங்கள் கேட்கும் ரூபியை தெரியாது.
//எனக்கு ஓரளவு ரூபியுடன் தொடர்பிருந்ததுதான்.//
ReplyDeleteஎன்னது வந்தியண்ணாவுக்கு ரூபியோட தொடர்பா?????!!! ;) :D