Search This Blog

Tuesday, January 19, 2010

படம் காட்டும் பதிவுலகம் - சோரு சாப்புங்க



கடந்த 18ம் திகதி ஆப்கான் தலைநகர் காபூலின் மையப்பகுதிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் திடீர்த்தாக்குதலில் ஈடுபட்டனர்.

அரச அலுவலக கட்டடங்களை முற்றுகையிட்டு தீவிர தாக்குதலை மேற்கொண்ட ஆப்கான் தீவிரவாதிகளை முறியடிக்க இராணுவத்தினர் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பதிவியேற்பு வைபவத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இத்தாக்குதல் கருதப்படுகின்றது.

★ ★ ★



அரசியல் நெருக்கடி, வெள்ளம், புயல் என பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஹெய்ட்டி நட்டின் மீது இடியாய் விழுந்திருக்கின்றது பூகம்பம்... இந்த அனர்த்தத்தில் இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

★ ★ ★



அதே ஹெய்ட்டி நாட்டில் தான் இந்தக்காட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நட்ட நடுவீதியில் வைத்து வழங்கப்படும் தீர்ப்பு இது.

பரவாயில்லை... இலங்கைக்குச் சொந்தக்காரராக இன்னும் சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

★ ★ ★



செம்புழுதி வாரி இறைக்கும் எம் வீதியின் ஓரத்தில் இப்படியொரு அறிவித்தல்... நிகழ்கால வசந்தம் அப்படியே பளிச்சிடுகின்றது.

★ ★ ★



2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற உள்ள உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிகளின் தகுதிகாண் ஆட்டப்போட்டி ஒன்றில் பிரான்ஸ் அணியுடன் மோதிய அயர்லாந்து எதிர்பாராத விதமாக அத்தகுதியை இழந்தது.

எந்த அணி முதலில் கோலைப் போடுகின்றதோ அந்த அணி உலக கிண்ணப் போட்டிகளில் விளையாட தகுதி பெறும் சூழ்நிலையில்... பிரான்ஸ் அணித்தலைவர் தியரி ஹென்றி பந்தை கையால் தடுத்தாட அதனைப் பயன்படுத்தி கோல் ஒன்றினைப் பெற்றார் இன்னொரு வீரர் வில்லியம்ஸ்.

இந்த விடயம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருந்தது. விதி முறைகளுக்கு முரணாக பந்தை கையால் தடுத்தாடிய பிரான்ஸ் வீரர் தியரி ஹென்றி தண்டனைக்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக ஆராய கூடிய உலகக் கால்பந்து சம்மேளனம் ஆச்சரியமளிக்கும் வகையில் ஹென்றி மீது எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.

தியரி ஹென்றி பந்தை கையினால் தடுத்தாடும் காட்சி.




6 comments:

  1. படம் நல்லா தான் காட்டுறீங்க....

    குண்டுவெடிப்பு - வேண்டாம்...

    ஹெய்ட்டி - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

    தண்டனை - இவர்கள் இத்தகைய தண்டனைகளுக்கு பொருத்தமானவர்கள்... எரிகிற வீட்டில் பிடுங்கும் சந்தர்ப்பவாதிகள்...


    சோரு சாப்புவமா?

    உதைபந்து - கேள்விப்பட்டேன்... என்னத்தச் சொல்லி என்னத்தச் செய்ய...

    ReplyDelete
  2. ஹெயிட்டி - ச்சே..இவர்களெல்லாம் மனிதர்கள்தானா...!

    சோரு சாப்புங்கன்னா- சுவர் சூப்-ன்னு ஒருத்தர் எழுதுவாரே..அதுவா அல்லது சோறு சாப்பிடுங்க-வா!!

    நல்லா படம் காட்டறீங்க! :-)

    ReplyDelete
  3. ஹெயிட்டியில் என்னைப் பாதித்த இன்னுமொரு படம், இறந்துபோன ஒரு சிறுவனை பிணக்குவியலுக்குள் செத்த எலியைத் தூக்கிப்போடுவதைப்போலப் போடும் காட்சி.

    சோறு சாப்புங்க - இனிமே எங்களுக்கும் பத் கமு தானோ?

    ReplyDelete
  4. //நிகழ்கால வசந்தம் அப்படியே பளிச்சிடுகின்றது//
    ஆம் உண்மை தான் இருந்தும் இன்றும் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொள்ள முடியாமலும் நம் சமூகம்

    சோறு சாப்புங்க என ஒருவர் தமிழை கொலை செய்து பேசும் போதும், எழுதும் போதும் தமிழ் பேச முயற்சி செய்கின்றார் என பாராட்டிக் கொண்டு தான் இருக்கின்றது நம் சமூகம் இந்த நிலை மாறும் வரை சேறு தான் நமக்கு மிச்சம்

    ReplyDelete
  5. சோரு சாப்புங்க....அண்ணா இது என்னுடைய சொந்த கையடக்கபேசியில் சுட்ட படம். தங்களுக்கு மிக்க நன்றி. ஆனால் நிறைய பேர் மனம் வெதும்ப, தாங்க முடியாமல் facebook இல் இருந்து அகற்றி விட்டேன்.எனது நண்பர் ஒருவர் சொன்னதுபோல "not at all guys,there are some tamil letters. so don't worry be happy...."

    ReplyDelete
  6. நல்லாய் படம் காட்டுறீங்க தல

    ReplyDelete

You might also like