Search This Blog

Sunday, March 22, 2009

ஊடகப் போரில் வாக்குப்பதிவு - கள்ள வோட்டுக்கள் எச்சரிகை

இன அழிப்பு போருக்கு எதிரான உங்கள் வாக்கைச் செலுத்துங்கள் - இது புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த வேண்டுகை மின்னஞ்சல்....
எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தினருக்கு ஆதரவாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வாக்களியுங்கள் - இது என் பல்கலைக்கழக சகோதர மொழி நண்பனின் வேண்டுகை மின்னஞ்சல். அடிக்கடி என் மின்னஞ்சல் பெட்டிகள் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களால் நிறைந்து விடுகின்றன.

இலங்கையின் வடக்கில் யுத்தம் உக்கிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊடகங்களிலும் அதன் தாக்கம் உக்கிரமடைந்திருக்கின்றது. ஊடகப்போரில் ஒரு சாரார் இது இன அழிப்பு யுத்தமென்றும் மற்றைய சாரார் மக்களை மீட்டெடுக்கும் மனிதாபிமானப் போர் என்றும் வரையறைகளை செய்த வண்ணம் முட்டி மோதுகின்றனர். இன்று என்றுமில்லாதவாறு அனைத்துலக ஊடகங்களும் இலங்கை பக்கம் திரும்பிப் பார்க்கின்றன.

பொதுவாக அனைத்துலக ஊடகங்களின் இணையத்தளங்களில் ஒரு செய்திப் பதிவுக்கு பின்னூட்டமளிக்கும் வசதிகள் மட்டுமன்றி, அப்பின்னூட்டத்துடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா அல்லது எதிர்க்கின்றீர்களா என்பதை தெரிவு செய்யும் வழியும் உண்டு. அதாவது அந்தப் பின்னூட்டத்துக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். ஒரு முறை அளித்த வாக்கை அந்த வாக்கின் உரிமையாளர் மாற்றும் வசதி சில தளங்களில் இருப்பினும், ஒரு தடவைக்கு மேல் வாக்களிக்க முடியாது. இது தான் பொது நியதி...

அண்மையில் அவுஸ்திரேலியா ஊடகமொன்றினால் இலங்கை தொடர்பாக அறிக்கையிடப்பட்ட செய்தி அலசல் இன்று 1000 இற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களினால் நிரம்பி வழிகின்றது. ஒவ்வொரு பின்னூட்டங்களின் வாக்குகளின் எண்ணிக்கையும் நான்கு இலக்க எண்ணை அண்மிக்கின்றன.

ஆனால், ஒரு பின்னூட்டம் இடப்பட்டு ஒரு மணித்தியாலம் கழிவதற்குள் அப்பின்னூட்டத்திற்கு ஆதரவாக ஆயிரத்தை தாண்டிய வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் இடப்பட்டிருப்பின், அதன் அர்த்தம் என்ன...? அங்கு திருகுதாளமொன்று அரங்கேறி இருக்கலாம் என்பதை 'பவ்ரல்' அமைப்பு அறிக்கையிட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்றில்லை.

இந்த வாக்களிப்பு முறையில் ஏதாவது ஓட்டைகள், குளறுபடிகள் இருக்கின்றனவா என்பதை தேடிப்பார்த்ததில் சிக்கிய தகவல்கள் தான் இவை.

பொதுவாக இப்படிப்பட்ட வாக்களிப்பின் விபரங்கள் இணையத்தளங்களினால் உங்களின் இணைய உலவி(Browser)யின் Cookies இல் சேமித்து வைக்கப்படுகின்றன. அந்த
Cookies இனை ஒருத்தர் தன்னுடைய இணைய உலவியிலிருந்து அகற்றுவாராயின், அவர் புதிதாக வாக்களிக்கும் உரிமை பெற்றவராகிவிடுவார். அதாவது, அவர் ஏற்கனவே வாக்களித்தார் என்பதற்கான எந்தவொரு தடயங்களும் அங்கிருக்கப் போவதில்லை.

இங்கு Internet Explorer, Firefox, Google Chrome ஆகிய இணைய உலவிகளில் எப்படி Cookies இனை நீக்கி விடுகிறார்கள் என்பதை பின்வரும் படங்கள் காட்டுகின்றன. (படங்களினைப் பெரிதாக்க அவற்றின் மேல் சொடுக்குக.)


இணைய உலவி
Internet Explorer ஆயின்,

Internet Explorer படம் - 01



Internet Explorer படம் - 02



Internet Explorer படம் - 03



இணைய உலவி
Firefox ஆயின்,

Firefox படம் - 01



Firefox படம் - 02


இணைய உலவி
Google Chrome ஆயின்,

Google Chrome படம் - 01



Google Chrome படம் - 02

ஆக, ஒரு இணையத்தளத்தில் இப்படிப்பட்ட நம்பகத்தன்மையற்ற வாக்குகளுக்காக நீங்கள் செலவு செய்யும் நேரங்களை இதிலுள்ள ஓட்டைகளை எடுத்துச் சொல்ல பயன்படுத்துங்கள். முடியுமானால், வாக்களிக்கும் நேரத்தில் உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக இடுங்கள்.
நான் தப்புச் செய் என்று சொல்லவில்லை...
இப்படித்தான் தப்புக்கள் நடக்கின்றன என்கின்றேன்.

5 comments:

  1. தமிழ் மதுரம்March 23, 2009 at 2:28 AM

    ஆதிரை என்ற பேரிலை வந்த உங்கடை கதையைப் பதிவேற்ற முடியுமோ???

    ReplyDelete
  2. தமிழ் மதுரம்March 23, 2009 at 2:28 AM

    ஸப்பா...முடியல்லை?? அது பரவாயில்லை. இங்கை ஒஸ்ரேலியாவின் ஆங்கில ஊடகமொன்றில் அண்மையில் ஒளிபரப்பான பாதுகாப்பு வலயத்தில் உள்ள அகதிகள் பற்றிய, தமிழர்களின் போராட்டம் பற்றிய ஒரு ஒளிப்பதிவுக்கு எப்படி எல்லாம் கண்டனம் தெரிவித்தார்கள் தெரியுமா??


    தமிழ் மக்களும், அவர்களின் இயக்கத்தவர்களும் பணம் கொடுத்து ஒஸ்ரேலிய ஊடகத்தை விலைக்கு வாங்கி விட்டார்களாம்? தங்கள் பொய்ப் பரப்புரைகளை உலகறியச் செய்ய???

    வன்னியிலை சனம் சாகேல்லையாம்? சாகிறது முழுக்கப் பு...தானாம்?? உண்மையோ? இது அந்த ஊடக நிறுவனம் மீது பெரும்பான்மை இனத்தவர்கள் கூறிய பழி???

    ReplyDelete
  3. கள்ள வோட்டு போட்டு வெல்ல வேண்டிய நிலைமை அவனுக்கு. இதுதான் அவனின் அழிவின் ஆரம்பம். நம்ம வெற்றி கண்ணு எட்டிய தூரத்தில்தான்..... எனவே ஒவ்வொரு வரும் தமிழ் உணர்வோட முடிந்ததை செய்யுங்கள். இந்த இ-மெயில் யுத்தமும் பெரிய வெற்றியை நமக்கு குடுத்திருக்கு...........

    ReplyDelete
  4. @கமல்
    எல்லாம் எங்களுக்குப் பழகிப்போன குற்றச்சாட்டுக்கள் தானே.

    //ஆதிரை என்ற பேரிலை வந்த உங்கடை கதையைப் பதிவேற்ற முடியுமோ???//
    நிச்சயமாக இப்போது அது முடியாது.
    காரணம்...
    1)சுனாமி காரணமாக நான் பத்திரப்படுத்தி வைத்த ஆவணங்கள் சிலவற்றுடன் இதுவும் தவறிவிட்டது.
    2)அந்தக்கதையினை மீளவும் எழுத முடியாது. ஏனெனில், நாடு கெட்டுக் கிடக்கின்றது

    ReplyDelete
  5. @Rama
    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete

You might also like