Search This Blog

Sunday, August 16, 2009

வேற்று மொழி வலைத்தளங்களைப் பார்வையிட Google Reader

பதிவுலகத்திலுள்ள அநேகர் இப்போது Google Reader இன் பயனராகவும் இருக்கின்றனர். அண்மையில் Google Reader தனது பயனர்களுக்கு சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அது தொடர்பான தகவல்களை நண்பரொருத்தர் கூகிள் ரீடர் - புது விஷயம்ஸ் எனும் தலைப்பிலான இடுகையில் தெளிவாக விளக்கியிருந்தார்.

இன்னும் சில தகவல்களாக, Google Reader புதிதாக அறிமுகம் செய்த Send to எனும் வசதியினூடாக வேற்று மொழித் தளங்களை ஆங்கில மொழிக்கு மொழிமாற்றம் செய்து பார்வையிடலாம்.

முதலில், Send to வசதியினை Google Reader இன் Settings பக்கத்திற்கு செல்வதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்

மொழிமாற்றத்தினை செயற்படுத்த
Name: Autotranslate
URL: http://translate.google.com/translate?u=${url}
Icon URL: http://translate.google.com/favicon.ico

பின்னர், குறிப்பிட்ட பக்கத்தை வாசிக்கும் போது பின்வருமாறு கிளிக் செய்க: Send To -> Autotranslate:

இதனூடாக, Google translate இனால் மொழிமாற்றம் செய்யக்கூடிய அனைத்து மொழியிலான இணையப்பக்கங்களையும் இலகுவாக ஆங்கில மொழியில் பார்வையிட முடியும்.


அத்துடன் Google Reader இன் துணையுடன் இணையப்பக்கங்களை PDF கோப்பாக சேமிக்கவும் முடியும். அதனைச் செயற்படுத்த பின்வருமாறு மாற்றங்களை மேற்கொள்ளவும்.
Name: Save as PDF
URL: http://savepageaspdf.pdfonline.com/pdfonline/pdfonline.asp?cURL=${url}
Icon URL: http://www.adobe.com/lib/com.adobe/template/icon/pdf.gif

பின்னர், குறிப்பிட்ட பக்கத்தை PDF கோப்பாக மாற்ற பின்வருமாறு கிளிக் செய்க: Send To -> Save as PDF:

2 comments:

  1. நல்ல விஷயம் சொன்னீங்க.. நாங்க எப்பவோ கூகிள் ரீடர்ல இருக்கிறோமே.. எங்க வாசக நண்பர்கள் பலபேரும் தேடி வருவதும் இதன் மூலமாக.. :)

    அது சரி பொக்கிஷம் ரொம்பப் பிடிச்சிருக்காமே.. ;)

    ReplyDelete
  2. அது சரி கடைசியா தமிழில் நீங்கள் படமாகப் போட்டுள்ள பதிவு நம்ம 'லோஷனின்' பதிவு தானே? ;)

    ReplyDelete

You might also like