என் மனதை விட்டு அகலாத - நான் ரசிக்கின்ற - சில வேளைகளில் விமர்சிக்கின்ற பாடல்களை முத்துக்கள் மூன்றாக இங்கு தருகின்றேன்; இனியும் தருவேன்.
இப்பாடல் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் இடம்பெற்ற பாடலாயினும், இன்னும் இனிமை கெட்டு விடாமல் ரசித்துக் கேட்கக் கூடிய பாடல்.
என்னைச் சுற்றியிருக்கின்ற சமூகத்தின் வேதனைகளையும், அவர்களின் ஜீவனோபாய போராட்டத்தின் கவலை தோய்ந்த பக்கங்களையும் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் கோடிட்டுக் காட்டுகின்றன. எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் இதுவாகுமா?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
மீனள்ள கடலேறிச் சென்றவன் திரும்பிக் கரை தொடும் வரை துணையவள் தவிக்கும் தவிப்பினை சொற்கள் கொண்டு வடித்து விட முடியாது.
சில சமயங்களில் அவன் வெறும் கையுடன் கசிந்த கண்களுடன் கரை திரும்பி இருக்கின்றான்... சில சமயங்களில் ஆயிரங்கள் தாண்டி இலட்சங்களும் அள்ளி வந்திருக்கின்றான்... கடவுளும் கைவிட்ட சமயங்களில் சூறாவளியும் புயலும் அவனை அள்ளிச் சென்றிருக்கின்றன... அரக்கர்கள் இரத்தம் குடிக்க, மீன்கள் உடல் தின்ன மூன்று நாள் கழித்து கரையேறும் அவன் சன்னம் துளைத்த சடலத்தின் ஊர்வலம் பலவற்றில் என் கால்கள் நடந்திருக்கின்றன...
கேட்டுப் பாருங்கள்... எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டித் திரைப்படத்தில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் டி.எம். செளந்தர்ராஜன் பாடிய பாடல் இது. பாடல் வரிகள் கவிஞர் வாலி.
★ ★ ★
எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யாரென்றால் அது என்றைக்கும் இளையராஜாதான். பாடகர்களைப் பட்டியலிட்டால், மற்ற எல்லோரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்குப் பின்னால் தான். இளையராஜா, எஸ்.பி.பி. கூட்டணி தந்த பாடல்களில் எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது.
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
இப்பாடலின் ஒவ்வொரு கருத்தாழமிக்க வரிகளையும் எஸ்.பி.பி.இன் தேன் குரலசைவில் இளையராஜாவின் இன்னிசையில் கேட்கும் போது உலகை மறந்து கண்மூடி இரசிக்கின்றேன்.
புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலியின் ஆழமிக்க வரிகள் இவை. கேட்டுப் பாருங்கள்....
★ ★ ★
வான வெளி நிலா கண் சிமிட்டும் நேரம்
மனம் ஆசைகள் ஆயிரம் கொள்ளும்...
அவள் தோள் தழுவி மடி தவழ
இவன் எழுதிய அஞ்சலும் பதில் பெற்றதே...
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் ஜெயச்சந்திரனுடன் இணைந்து வாணி ஜெயராம் பாடிய பாடல் இது.
இரண்டாவது , மூன்றாவது பாடல்கள் எனது top list இல் உள்ள பாடல்கள் ..என்றுமே எப்போதும் எந்த மன நிலையிலும் கேட்டு ரசிக்க கூடியவை ..
ReplyDelete"அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே"
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே"
(I LIKE IT SO MUCH)
முதலாவது பாடலை இதுவரை ஒலியாகக் கேட்டதில்லை... ஆனால் புதுப்பேட்டை படத்தின் பாடலின் இடைச்செருகலாகக் கேட்டேன்....
ReplyDeleteஇரண்டாவது பாடல் எனதும் விருப்பம் தான்....
மூன்றாவது பாடல் பெரிதாக கேட்ட ஞாபகம் இல்லை....
நீங்கள் சொன்னதற்காக கேட்கிறேன்... :)
நல்ல இரசனையும், நல்ல பாடல் தேர்வுகளும்..
ReplyDeleteஇரண்டாவது பாடல் எனக்கும் மிகப் பிடித்தது..
யின் குரல் அத்தனை உணர்வுகளையும் கொட்டி விடும்..
//கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா..."
நாள்தோறும் ரசிகர் பாராட்டும் கலைஞன், காவல்கள் எனக்கில்லையே.. "
அருமை..
தொடர்ந்து பகிருங்கள்..
Those 3 were amma's fav songs... Ungalukkum ammavinda vayasa uncle..?
ReplyDelete@கனககோபி
ReplyDelete//
முதலாவது பாடலை இதுவரை ஒலியாகக் கேட்டதில்லை... ஆனால் புதுப்பேட்டை படத்தின் பாடலின் இடைச்செருகலாகக் கேட்டேன்....
இரண்டாவது பாடல் எனதும் விருப்பம் தான்....
மூன்றாவது பாடல் பெரிதாக கேட்ட ஞாபகம் இல்லை....
நீங்கள் சொன்னதற்காக கேட்கிறேன்... :)
//
நன்றி தம்பி...
@ப்ரியானந்த சுவாமிகள்
ReplyDelete//
"சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே"
(I LIKE IT SO MUCH)
//
நானும் தான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே...
@LOSHAN
ReplyDelete//
நல்ல இரசனையும், நல்ல பாடல் தேர்வுகளும்..
//
நன்றி அண்ணா.
//
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா..."
நாள்தோறும் ரசிகர் பாராட்டும் கலைஞன், காவல்கள் எனக்கில்லையே.. "
அருமை..
தொடர்ந்து பகிருங்கள்..
//
நிச்சயமாக தொடர்ந்தும் வரும்... :)
@முகிலினி
ReplyDelete//
Those 3 were amma's fav songs... Ungalukkum ammavinda vayasa uncle..?
//
அதுதானே சொல்லி இருக்கிறேன்... எப்போது கேட்டாலும் தெவிட்டாத பாடல்கள் இவையென...
எனக்கு தொண்ணூறு வயது... :)
நன்றி
ReplyDeleteமுதலாவது பாடல் அருமை! இதுவரை ஒலிவடிவில் தான் கேட்டிருந்தேன்.... ஒளிக்காட்சியாக தரவேற்றியமைக்கு நன்றிகள் :)
ReplyDeleteஅருமை!
ஏனைய பதிவர்களும் தங்களுக்கு பிடித்த முத்தான மூன்று பாடல்்களை பதிந்தால் என்ன ?
//எனக்கு தொண்ணூறு வயது... :)//
ReplyDeleteReally so u wont mind me calling u thatha.. hak hak....