Search This Blog

Monday, December 14, 2009

படம் காட்டும் பதிவுலகம் - மூக்குடைந்த பிரதமர்

73 வயதுடைய இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் மீது நேற்று நடாத்தப்பட்ட திடீர்த்தாகுதலில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவருடைய இரு பற்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

மக்களுடன் பிரதமர் அளவளாவிக் கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் ஒரு மனநோயாளி எனவும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்த பாதுகாப்பு கமரா ஒன்றில் பிரதமர் மீதான தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

★ ★ ★முகத்திலும் வாயிலும் தாக்குதலுக்கு இலக்காகிய இத்தாலியப் பிரதமர் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பாதுக்காப்புத் தரப்பினரால் அழைத்துச் செல்லப்படுகிறார்.

★ ★ ★நேற்று தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகிப் போட்டியில் கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த‌ கயானி அல்டோரினோ (23 வயது) வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

★ ★ ★சமாதானத்துக்கான நோபல் பரிசினைப் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்கள் நிகழ்வின் சிறப்பாக முன்னைய விருதாளர்களின் பெயர்ப் பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொள்கிறார்.

★ ★ ★இலங்கையுடனான இறுதி ருவென்ரி-20 போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்து தொடரை சமப்படுத்திய பெருமிதம்...

பந்து வீச்சில் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி, துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது அதிரடியாக 60 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறப்பம்சம் என்னவென்றால், தனது பிறந்தநாளன்று - சொந்த மைதானத்தில் - கட்டிப்பிடித்து முத்தங்கள் வாங்கிய மைதானத்தில் இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

7 comments:

 1. நல்லாத்தான் படம் காட்டுறிங்க... சும்மா லொள்ளு

  தகவல்களை படங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. என்னது பிரதமரின்ர மூக்கெல்லாம் தக்காளி சோஸா இருக்கு?
  ஒழுங்காச் சாப்பிடத் தெரியாதா? :P

  அழகியா? சரி சரி...

  ஒபாமா அண்ணே கலக்குறார்...

  யுவராஜ் அண்ணே போட்டு மொங்குகிறார்...
  முத்தங்களா? விளங்கேல?

  தனிப்பதிவில் விளக்கமாக சொல்ல முடியுமா? :P

  ReplyDelete
 3. ம்ம்ம் நல்லாத்தான் படம் காட்டுகின்றீர்கள்.

  கங்கோன் யூவி ப்ர்த்தீ ஷிந்தாவிடம் பஞ்சாப் அணிக்காக கட்டுப்பிடி வைத்தியம் பார்த்த மைதானம் இது ஹிஹிஹி

  ReplyDelete
 4. உங்களுடைய பக்கத்தை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன் - அறிவு பூர்வமான தகவல்களுடன் சம்பவங்களை படம் பிடித்துக் காட்டுகின்றீர்கள் - ஆனால், இன்றும் தகவல்களை அதிகப்படுத்தலாம் அல்லா??

  ReplyDelete
 5. //கங்கோன் யூவி ப்ர்த்தீ ஷிந்தாவிடம் பஞ்சாப் அணிக்காக கட்டுப்பிடி வைத்தியம் பார்த்த மைதானம் இது ஹிஹிஹி //

  கோபிக்கு கிறிக்கெற் கிசு கிசு சொல்லித் தருகிறீர்கள்? ம்.. ம்...

  நடக்கட்டும் நடக்கட்டும்...

  நான் ஆதிரை அண்ணாவிடம் விளக்கமளிக்கும்படி தான் கேட்டேன்....

  ReplyDelete
 6. நல்ல தொகுப்பு..

  பாவம் பெர்லுஸ்கோனி.. தள்ளாத வயதில் வாங்கி இருக்கிறார்.. நம் நாடுகளில் இப்படி ஒவ்வொருவரும் புறப்பட்டால், அரசியல்வாதிகளுக்குப் பற்கள் மிஞ்சாது..

  இம்முறை அழகி வாய்க்கவில்லை..

  ஒபாமா நோபெல்?? அச்சாரம்.. ;)

  யுவி-இந்தியா-கிரிக்கெட்... ஏனைய்யா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிரீர்கள்?
  யாரோ யுவியின் பஞ்சாப் தலைமைப் பதவியைப் பறித்ததாக சொன்னார்கள்.. இனியுமா?

  ReplyDelete
 7. Short and sweet
  என்பார்களே அது இதுதானோ
  சம்பவங்களோடு அது தொடர்பான உங்கள் கருத்துகளையோ அல்லது கமென்ட்டுக்களையோ சேர்த்துப் பதிந்தால் இன்னும் சிறக்கும்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete

You might also like