வவுனியாவில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெயர்ந்த முகாமிலுள்ள சிறுவனால் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம் இது. இன்னொரு ஓவியத்தில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதைந்து போன உயிருக்கும் சிதைந்து போன மக்களுக்கும் மத்தியில்
உடைந்து போன கட்டடங்கள் வடுக்களே அன்றி வலிகளல்ல...
★ ★ ★
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் இரு பிரதான வேட்பாளர்களும்.... (என்ன தான் பேசியிருப்பாங்களோ...? )
★ ★ ★
ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிக்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹைதராபாத் இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீது பொலிஸின் பாய்ச்சல்.
★ ★ ★
தாக்குதலினால் மூக்குடைந்த இத்தாலியப் பிரதமரை இத்தாலியின் தென் நகரொன்றில் இப்படிக் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
★ ★ ★
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதை ஆர்ஜன்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸி(22 வயது) வென்றுள்ளார். சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் கடந்த டிசம்பர் 21 அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்போது போர்த்துக்கல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவை பின் தள்ளி இந்த விருதை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வெல்லும் முதல் ஆர்ஜன்டீன வீரரானார். இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.
முதல்படம் மிகவும் பாதிக்கிறது!
ReplyDeleteமுதல்படம் மிகவும் பாதிக்கிறது!
ReplyDeleteஆம் ஆதிரை பாதிக்கிறது. எங்கே தான் இப்படியெல்லாம் படம் எடுக்கிறிங்களோ தெரியாது
ReplyDeleteமுதலாவது படத்திற்காக உமக்கு நன்றி ஆதிரை,,
ReplyDeleteஉள்ளத்தின் வலிகளை படம் எடுத்துக்காட்டுகிறது நண்பரே,,,
இரண்டே வரிகளில் நம் இதயங்களை தொட்டுவிட்டான்,,
கலங்காதே சிறுவனே,,
விலங்குகள் உடைபடும்,,
விடுதலை நாடி வரும்,,,
முதல் படத்தை வரைந்த சுகிந்தன் என்ற சிறுவன் எதிர்காலத்தில் ஈழத்திலிருந்து நல்ல ஓவியனாக வரலாம்.....
ReplyDeleteவித்தியாசமாக இருக்கிறது.....
பதிவுலகம் நன்றாகவே படம் காட்டுகிறது... ;)
"புதைந்து போன உயிருக்கும் சிதைந்து போன மக்களுக்கும் மத்தியில்
ReplyDeleteஉடைந்து போன கட்டடங்கள் வடுக்களே அன்றி வலிகளல்ல..."
Unmaiiiiiiii
முதல் படம் பார்த்த பிறகு மற்ற படங்களை மனம் ரசிக்கவில்லை.. :(
ReplyDelete