இலங்கைத் தமிழ்ப் பதிவர்களாகிய நாம் இரண்டாவது தடவையாக மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம். கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 13, 2009) கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது.
நிகழ்வு தொடர்பான முழுமையான விபரங்கள்:
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு
இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி
காலம் : டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணி
நிகழ்ச்சி நிரல்
- அறிமுகவுரை
- புதிய பதிவர்கள் அறிமுகம்
- கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
- பதிவுகளின் தன்மை, எவ்வாறு அது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறு அதனை மேம்படுத்துவது போன்றன.
- கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
- சிற்றுண்டியும் சில பாடல்களும்
- கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
- கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
- பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்.
- உங்களுக்குள் உரையாடுங்கள்
கடந்த தடவை போன்று இச்சந்திப்பும் http://livestream.com/srilankatamilbloggers எனும் சுட்டியில் நிகழ்வு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்.
இலங்கைத் தமிழ்ப் பதிவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இச்சந்திப்பில் கலந்து பயன்பெற்று மகிழ்வுறுவோம்.
//கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு.மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில்//
ReplyDeleteஅண்ணா.... இதை மாற்றுங்களேன்?
இது வேறுமாதிரியான கருத்தைத் தரலாம்...
நாம் பதிவர்கள் சார்பாக செயற்படுகிறோமே தவிர நாம் ஏற்பாடு செய்யவில்லை....
அனைவரும் கலந்துகொண்டு மகிழ்வோம்....
இதுவரை தங்கள் வரவை உறுதிப்படுத்தாதவர்கள் தயவுசெய்து http://srilankantamilbloggers.blogspot.com/2009/12/blog-post.html என்ற முகவரிக்கு்ச சென்று தங்கள் வரவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்....
ReplyDelete(முடியுமானால் ஆதிரை அண்ணா இந்தச் சுட்டியையும் பதிவில் சேர்க்கவும்.)
@கனககோபி
ReplyDelete//அண்ணா.... இதை மாற்றுங்களேன்?
இது வேறுமாதிரியான கருத்தைத் தரலாம்...
நாம் பதிவர்கள் சார்பாக செயற்படுகிறோமே தவிர நாம் ஏற்பாடு செய்யவில்லை....
இவர்கள் தானே ஏற்பாட்டுக்குழுவினர்... அதனைக்குறிக்கும் முகமாகவே இப்படிக் குறிப்பிட்டேன்.
நிச்சயமாக அனைவரும் இணைந்து நிகழ்வைச் சிறப்பிப்போம்.
நிகழ்ச்சி நிரல் என்னை கவர்ந்திருக்கு...
ReplyDelete//காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன//
அப்ப பின்னூட்டத்தில் ஒரு PhD முடிக்கப்போறிங்க. :)
சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துககள்.
//சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துககள்.//
ReplyDeleteவேந்தன் நன்றி