Search This Blog

Tuesday, December 22, 2009

மொக்கை...! மொக்கை...!! மொக்கை...!!!

எச்சரிக்கை: இது முற்று முழுதான மொக்கைப் பதிவு (அப்படியென்றால்...?); பல தலைகள் உருளும் பரிகாச விளையாட்டு. சீரியஸ் பாட்டிகள், பாட்டன்கள், பூட்டன்கள் மேற்கொண்டு நுழைய வேண்டாம்.

எந்தப் புண்ணியவானில் இருந்து ஆரம்பிப்பது...? இவர் இருக்கப் பஞ்சமேன்...? இங்கேயும் சொந்தச் செலவில் சூனியம் வைக்கத் தயாரானார் வந்தியத்தேவர்.

"மொக்கை எனப்படுவது யாதெனில்...."

சிறிது பொறுங்கள் வந்தி. எந்தக் காரியத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆகவே,

"வணக்கம் லோஷன்..."

இனித் தொடரலாம் வந்தியத்தேவா.

"அழகை அழகு சொன்னால் தான் அழகாகும் என நான் உளறினால் அது அழகு ஆகாது..."

வந்தி சுத்தமாக விளங்கவில்லை... மொக்கை பின்னவீனத்துவம் ஆனதோ? விளக்கம் வேண்டி அண்ணாந்து பார்த்தேன். அந்த நிலாவைக் கூட காணவில்லை. ஆதித்தன் சுட்டெரிக்கும் வேளையில் அம்புலி தேடிய என் அறிவை என்னவென்பது...? என்ன கொடுமை... ருவீட்டரில் சலசலப்பு!!!

வந்தி தொடர்ந்தார்...

"என் நீலச் சட்டைக்கு வந்த மவுசு... அது அம்மா தந்த பரிசு.."



அவர் கவி(?) முற்றுப் பெற முன்னரே அவள் புரக்கடித்துச் சிரித்தாள். சிந்தனைச் சிறகினை விரித்த போதும், காரணம் புரியவில்லை.

"மொ+க்+கை+ப்+ப+தி+வு= மொக்கைப்பதிவு" பவன் மொக்கைக்கு வரவிலக்கணம் கொடுத்த வேளையில் தான், அங்கே குறிஞ்சிக்குமரன் திருப்பதிகம் ஒலிக்கக் கேட்டேன். திருப்பதிகம் என்றதும் சந்த்ரு ஞாபகத்துக்கு வந்தான். கூடவே, இர்சாத், வரோ... இவர்களையும் இவன் கூட்டி வர மறக்கவில்லை.

எப்படி இருக்கிறீங்கள் என யாரும் கேட்டால் இருக்கிறம் என்ற பதிலில் வரோவும் யோகாவும் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றார்கள். இன்னொருத்தரும் தான்... அவருக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கு.

ஆனால், அந்த குறிஞ்சிக்குமரன் புகழ்பாடி வந்தவரோ ப்ரியானந்த சுவாமிகள். நெதர்லாந்துக் குளிருக்கு 42 ஆம் ஒழுங்கையில் சூடாற வந்திருக்கிறார்.

அப்போதுதான் அந்த ரணகளம் நடந்தது. "புலி உறுமுது... புலி உறுமுது..." எல்லோரும் விக்கித்துப் போனார்கள். வேறு யார்...? அட நம்மட சதீஸன் தான். "வாறான் வாறான் ஓடு ஓடு..." ஓடிப் போன எல்லோருக்கும் பெடியன் இனிப்பு வழங்கிச் சந்தோசித்தான். காரணம் கேட்டேன்... கடந்த 18 ஆம் திகதியுடன் வில்லு வெற்றிப் படம் ஆயிடுச்சாம். சுறா வருகையுடன் குருவியும் வெற்றிப்படமாகிடும் என்ற நம்பிக்கையும் இருக்குதாம். உச்சந்தலையில் சுர் என்றது.

"அதை அவ்ருக்குப் பக்கத்தில் வையுங்கோ... இதை எனக்குப் பக்கத்தில் வையுங்கோ..." கரத்தில் சிவப்பு நிற மாம்பழ ஜூசுடன் இருந்த விமல் சூளுரைத்தது எவர் காதிலும் சரியாக விழவில்லை.

பட்டத்தில் மின் பெற்ற சுபாங்கனின் மூளை துரிதமாக வேலை செய்திருக்க வேண்டும். நொந்து நூடில்ஸாகி ஒடிந்து போயிருந்த புல்லட்டை வம்புக்கு இழுத்தான்...

"புல்லட்... உமக்குத்தானே சுளகுக்காது. விமல்வன்ச என்ன சொன்னார் என்று சொல்லு பார்க்கலாம்."

"விமல் கூட ஒருத்தர் இருக்கிறாரே... அந்த வெற்றியாளன் சொன்னாராம். அவர் அவரை அவரிடத்தில் வைத்திருக்கணுமாம்..." வேண்டுமென்றே புல்லட்டினால் பிளேட் மாற்றப்பட்டது.

"ஐயோ... அரசியல்... நீல அரசியல்..." கூவிக்கூவி... கேவிக்கேவி அழுதவண்ணம் காவமுடியாத நமீதாவையும் காவிக்கொண்டு கங்கோன் ஓடிவிட்டான். யுவராஜ் இற்கு எங்கே பந்து பட்டது என்ற ஆராய்ச்சி அவனுக்காக காத்திருந்தது.

அப்போது தான் பார்த்தேன்... 22 பேர் கொண்ட அணி சிதறிக் கிடந்தது... தெரிந்த பல முகங்கள் தெரியாத முகமூடிகளுடன். :(


தூரத்தே ஓர் உருவம் தெரிந்தது... அசோக்பரன் வந்து கொண்டிருந்தான்.

விமல் கூட இருந்தாரே ஒருத்தர்... வேறு யாருமல்ல. மூன்றாவது தடவையாகவும் ஓர்டர் செய்யப்பட்ட Hot Butter Cuttlefish இனைத் தீர்த்து முடித்த திருப்தி லோஷன் அண்ணாவின் முகத்தில் தெரிந்தது.



இதை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..?

இல்லையில்லை... உங்களைச் சொல்லவில்லை. அண்ணருக்கு இன்னொரு மரக்கறிச் சூப் ஓர்டர் கொடுங்கோ... தனக்குச் சொன்னதென்று லோஷன் அண்ணா குழம்பிவிட்டார்.

இந்தப் பதிவை எப்படி நிறைவுக்கு கொண்டு வாறது..? மொக்கைக்கு ஏது முடிவு..? ஆனாலும், வாழ்க தமிழ்மொழி... வளர்க செந்தமிழ்... என சுபானு தமிழிசை இசைக்க... பால்குடி புதிர் போட... புகைப்படக்கலைஞர் - முன்னாள் பதிவர் - நித்திரை தொலைத்த செம்மல் - மட்டைக்கும் குட்டைக்கும் விளக்கம் சொன்ன நிமல் புகைப்படம் சுட மொக்கை நிறைவுக்கு வருகிறது.

மது... அடே... உன்னை எனக்குத் தெரியாதடா. தெரியும் என்றால் கடலேறி இழுத்துப் பூட்டப்படும்.

16 comments:

  1. எச்சரிக்கை - அவ்வ்வ்வ்! :-)))

    அப்புறம் சூரமொக்கையா இருந்தது...LOL!

    ReplyDelete
  2. வந்தியில் ஆரம்பிச்சு எனக்கு ஆப்பா?
    ஓ இது அந்த எலிக்குஞ்சுக்கு ரிவெஞ்சா?


    நல்லா இருந்தது.. இது ஒரு பின் நவீனத்துவ மொக்கை.. ;)

    அவசர அறிவித்தல் - இலங்கையில் சீரியஸ் பதிவர்களுக்கு திடீர் தட்டுப்பாடு.. புதிதாக இணைய விரும்புவோர் விண்ணப்பிக்க தொடர்பு கொள்ளுங்கள் புலம்பெயர் தமிழரிடம் அடி வாங்கிய ஆதிரையை.. ;)

    ReplyDelete
  3. அடடா! நிலாவுக்கு போட்டியா எல்லாரும் பின்னநீனத்துவம் பிரக்கடித்துவம்என்று கிளம்பிட்டாங்களா? தம்பி.. இப்பிடி விளங்காத மாதிரி சமூக விரோத பதிவுகளைபோட்டு தப்பிக்கமுடியாது..


    அது சரி வந்தியின் இளிப்பிற்கும் அவருக்கு பின்னால் நவீனத்தவமாக இரக்கும் பெண்ணுக்கும் ஏதாவது தொடர்புண்டா?

    உண்மையா எனக்கு பாதி விளங்கேல்ல..
    ஆனா விளங்கின பாதி சூப்பர்..

    ReplyDelete
  4. ///"மொ+க்+கை+ப்+ப+தி+வு= மொக்கைப்பதிவு" பவன் மொக்கைக்கு வரவிலக்கணம் கொடுத்த வேளையில் தான்///

    யாரந்த தமிழறிஞர்?..ஹிஹி

    மொங்கு மொங்குன்னு மொங்கிட்டீங்கய்யா.... மொங்கிட்டீங்கய்யா....

    ///புல்லட் said...
    அது சரி வந்தியின் இளிப்பிற்கும் அவருக்கு பின்னால் நவீனத்தவமாக இரக்கும் பெண்ணுக்கும் ஏதாவது தொடர்புண்டா?///

    யோவ்... அது பின்னவீனத்துவமான ஆணய்யா...:p

    ReplyDelete
  5. //திருப்தி லோஷன் அண்ணாவின் முகத்தில் தெரிந்தது.//

    எத்தனை பிளேட் காலி ஆனது என்பது அவரது வயிரை பார்த்தாலும் தெரிகிறது:))

    ReplyDelete
  6. மொக்கை எண்டாலும் எழுத்துநடை தூக்கலாக இருக்குடா... என்னைத் தெரியாதா உனக்கு...

    சரி.. தெரியுமோ தெரியாதோ.. வடிவா இழுத்துப் பூட்டிக்கொண்டு திரி..

    ReplyDelete
  7. //கூடவே, இர்சாத், வரோ... இவர்களையும் இவன் கூட்டி வர மறக்கவில்லை.

    எப்படி இருக்கிறீங்கள் என யாரும் கேட்டால் இருக்கிறம் என்ற பதிலில் வரோவும் யோகாவும் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றார்கள். //

    post super....
    eppidi thaan yosikkiraankalo theriyala??????????

    ellorum 'IRUKKIRAM'...

    ReplyDelete
  8. Son of கொழுவிDecember 22, 2009 at 11:46 PM

    வந்திக்குப் பின்னால திறந்த மேனியா இருக்கிறது யாரப்பா...

    ReplyDelete
  9. தலைப்பைப்பார்த்துவிட்டு சந்தோசமாப் படிக்க வந்தால் இது என்னமோ மாதிரியில்ல இருக்கு? விளங்குற மாதிரி இருக்கு அனா விளங்கேல்ல..

    ஆ.. சொல்ல மறந்திட்டன். வந்தி அண்ணான்ட ரீசேட் சூப்பர். சிரிப்பு அதைவிட.......

    ReplyDelete
  10. எச்சரிக்கையோடு நிறுத்திக்கொண்டேன்! - :-p :-D!!!

    ReplyDelete
  11. இது சரியான மோசடி விஷயம்....! யார்யாரையோ மாட்டி விட நடக்குற சதி ...!எண்டாலும், மற்ராக்களைப் பற்றி எழுதினதெல்லாம் நல்லா விளங்கீட்டுது ....!!!
    நல்ல காலம் என்னைப் பற்றி எதுவும் எழுதேல்ல ஹி ஹி .......அப்பாடா :))

    ReplyDelete
  12. // Son of கொழுவி said...
    வந்திக்குப் பின்னால திறந்த மேனியா இருக்கிறது யாரப்பா..//

    கொழுவியின்டனே மகன் அண்ணே அது ஒரு ஹோட்டலில் சாப்பிடும்போது எடுத்தது. பின்னால் இருக்கும் வெள்ளைக்கார ஆண்டி சூரியக்குளியல் எடுத்துவிட்டு காலை உணவு சாப்பிடுகின்றார்.

    ReplyDelete
  13. என்னை இதில் இழுக்காததற்கு மிக்க நன்றி..

    பதிவு விஜய் படம் மாதிரி இருக்கு. ஒன்றுமே புரியல. இருந்தாலும் என்னயோ இருக்கு..

    ReplyDelete
  14. என்னமா ஒரு பதிவு நல்ல பதிவு இல்ல எப்படி தான் யோசிக்கிறாங்களோ இருக்கிறம் ஆனா இல்லங்கோ தெளிவு ஆனா தெளிவில்லங்கோ அப்படியே எனக்கு physics படிப்பித்த சேர் ஞாபகம் வந்துட்டு போங்க என்னை பற்றி எதுவுமே எழுதலனு நான் அழுதேன் தெரியுமா நீங்க ரொம்ப மோசம் நானும் எப்படியாவது பேமஸ் ஆயிடனுனு நெனச்சு நெனச்சு சாப்பிடாம தவிக்கின்றேன் இங்கென்னடானா எத்தன பிளேட் தீர்ந்ததுனு தெரியாமல் மரக்கறி சூப் ஓடர் நடக்குது ஏலவே ஓவர் பிட்டிங்ஸ் போதாதா.....? மந்தி அண்ணாவின் பின்னாலுள்ள ஆண்டி சூப்பர். சிரித்தேன் பதில் பதிவெழுத பலரது களிமண்கள் தட்டப்பட்டு கொண்டிருக்கின்றன கடலேறியாரே கவனம்

    ReplyDelete
  15. kalakkalai irukkiradhu pathivu, enakkum ethir pathivu poda viruppam, but no time

    ReplyDelete
  16. //சிறிது பொறுங்கள் வந்தி. எந்தக் காரியத்துக்கும் முதலில் பிள்ளையார் சுழி போட வேண்டும். ஆகவே,

    "வணக்கம் லோஷன்..." //

    ஹா ஹா..... நல்ல காலம் என்னை விட்டுவிட்டீர்கள்....


    //இன்னொருத்தரும் தான்... அவருக்கு தனிப்பட்ட கவனிப்பு இருக்கு.//

    அவன் நல்லவன்.... அப்பாவி....


    //கூவிக்கூவி... கேவிக்கேவி அழுதவண்ணம் காவமுடியாத நமீதாவையும் காவிக்கொண்டு கங்கோன் ஓடிவிட்டான். யுவராஜ் இற்கு எங்கே பந்து பட்டது என்ற ஆராய்ச்சி அவனுக்காக காத்திருந்தது. //

    :)


    பதிவு அசத்தல்..... அருமையான பதிவு....

    ஆனா ஒரு சந்தேகம்....

    //இது முற்று முழுதான மொக்கைப் பதிவு//

    மொக்கைப் பதிவெண்டு சொன்னீங்கள்? அது எங்க? ;)

    ReplyDelete

You might also like