நண்பா,
பல வேளைகளில் சொல்ல வேண்டுமென்று நினைத்து தயங்கி நின்றேன். இப்போது சொல்கின்றேன்...
"வேட்டைக்காரன் பகிஷ்கரிப்பை வலிதாக முன்னெடுக்கவும்" எனத் தலைப்பிட்டு - தமிழகப் பிரச்சாரப் பீரங்கிகள் றேஞ்சிலே என்னை நினைத்து நீ அனுப்பிய மின்னஞ்சல் எரிச்சலைத்தான் எனக்கு ஊட்டியது.
நடிகர் விஜயின் வேட்டைக்காரன் திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் புறக்கணிக்க அளிக்கப்பட்ட உமக்கு வலிதான காரணங்கள் இரண்டு... முதலாவது, விஜய் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ்காரர்களை சந்தித்து அவர் அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியது. இரண்டாவது, இலங்கை இராணுவத்துக்கு இசையமைத்த இராஜ் வேட்டைக்காரன் படத்தில் விஜய் அன்ரனி உடன் இணைந்து இசையமைப்பது.
நண்பா, விஜய் மட்டுமல்ல... இந்தியாவின் எல்லா அரசியல்வாதிகளும் அவர்களின் அரசியல் வாழ்வு கருதி அடிக்கின்ற பல்டிகளுக்காக இனியும் நாங்கள் வாய் பார்த்துக் காத்திருக்கப் போகின்றோமா...? நேற்று காங்கிரஸ்காரர்களை சந்தித்த விஜய் நாளை சீமானைக் கட்டிப்பிடித்து "போஸ்" கொடுப்பதால் மட்டும் - அன்று அஜித், அர்ஜூன் அடித்த கரணம் போல - வேட்டைக்காரன் ஈழத்தமிழர்களுக்கான படமாகிவிடுமா..?
பருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...?
இலங்கையின் ஒவ்வொரு சிங்களக் குடிமகனும் தன் நாட்டுப்படைகளுக்கு தலை வணங்குவதை மட்டும் காரணம் காட்டி கொழும்பிலுள்ள என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. இதற்கு அவர்களின் கால் நக்கியாய் என்னைக் காரணப்படுத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. இராஜ் இனைப் புறக்கணிக்க முடிவு செய்தால் வேட்டைக்காரனை மட்டுமல்ல - கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...
எங்கள் உறவுகளிடம் வேட்டைக்காரனைப் பற்றிக் கேட்டுப்பார்த்தால் "தெரியாது" என்றுதான் பதில் தருவார்கள். தன் மகன் எங்கே..? அவன் எப்போது வருவான்..? என்பதை விட உன்னையும் என்னையும் போல வேட்டைக்காரனுக்காக அலட்டிக் கொள்ள அவர்களுக்கு நேரம் இருக்காது. அப்படித்தான், அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் சொல்ல மாட்டார்கள்... ஏனெனில், எங்கள் பார்வையில் அது கலாச்சார சீரழிவாகிவிடுமே...
நீ குறிப்பிட்ட ஈழத்தமிழர் புறக்கணிப்பு தலையங்கத்துடன் மட்டும் தங்கி விட, படத்துக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றித்தானே அறிக்கையின் உள்ளடக்கம் அதிகமாக பேசுகின்றது. என் நண்பன் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது... இது இதேதான்...
"நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் - புலம்பெயர் தமிழர்"
நான் விஜய் என்னும் நடிகனின் தீவிர ரசிகனும் அல்ல... அவன் படங்களை முந்திக் கொண்டு பார்க்கத் துடிப்பவனும் அல்ல. ஆனால், முதல் நாள் காட்சியில் களேபரம் நடக்குமே... எப்படியென்றால், கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.
ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.
சந்திப்போம்.
அருமை!
ReplyDeleteபுறக்கணிக்கப்படவேண்டிய எத்தனையோ விசயங்களுக்குத் தோரணம் கட்டி ஆட்டம் போடும் ஆட்கள் வேட்டைக்காரனைப் புறக்கணிக்கச்சொல்லும் மடத்தனமாக அரசியல் எரிச்சலூட்டுவது.
:)
ReplyDeleteநம் எல்லோருக்கும் இது போல திறந்த மனத்துடன் ஒரு பிரச்சனையை ஆராயும் மனப்பாங்கு இன்றைய சூழ்லில் எமக்கு இன்றியமையாதது.
///பருத்தித்துறை வீதியில் பயணிக்கும் போது கொடிகாமம் சந்தியைக் கடந்த பின் மனதிலே ஒரு வித அமைதி குடி கொள்ள - ஒரு முறை அவர்களுக்காக நான் என்றைக்கும் வணங்கிச் செல்கின்றேன். அந்த உணர்வில் - தனது இராணுவத்துக்காக தலை வணங்குகின்ற இராஜின் உணர்வில் எப்படி எங்களால் குற்றம் காண முடியும்...?///
ReplyDeleteஅய்யா நீர் கிட்ட இல்லை. இல்லாட்ட அதுக்காகவே கட்டி அணைத்துப் பாராட்டியிருப்பேன்.
///கடந்த நவம்பர் 27 - புனிதமான நன்னாளில் சுவீஸில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் செய்த கோஷ்டி மோதல் போல... சில காட்சிகளை வேண்டுமானால் உனக்கும் அனுப்பி விடுகிறேன்.///
எனக்கு அது கட்டாயம் வேணும். அனுப்புங்கோ
//மேலும் சிங்கள இராணுவத்தைப் புகழ்ந்து பாடியதில்
ReplyDeleteஎந்தத் தவறையும் காணவில்லை என்று எழுதி இருப்பது அதிர்ச்சி அழிக்கிறது.சிறிலங்கா இராணுவம் நாட்டைக் காக்க பல் ஆயிரம் தமிழர்களை அழிததை இந்தப் பதிவரும் நியாயமானதாக்ப்பார்க்கிராரா?
சிங்கள இராணுவத்தை ஒரு சிங்களவரான இராஜ் புகழ்ந்து பாடியதை என்னால் குறை கூற முடியாது.
இராஜ் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடுவது என்பதற்குப் பின்னால் தமிழ் மக்களின் கொலையை எப்படி நியாயப்படுத்த முடியும்..?
அற்புதன் என்பவர் சன் குழுமத்தின் படம் வேட்டைக்காரன் அதனால் புறக்கணிக்கவேண்டும் என்கின்றார். வேட்டைக்காரனுக்கு முன்னர் வெளியான சன் குழுமத்தின் எத்தனையோ மொக்கைப் படங்களை ஓடவைத்த பெருமை புலம் பெயர் தமிழர்களுக்கு உண்டு.
ReplyDeleteஅற்புதன்,
ReplyDeleteஇந்தியராணுவத்தையும் இந்தியத்தேசியத்தையும் புகழ்ந்து பாடிய படங்களையே வரவேற்று ஓடவைத்த எங்களுக்கு சிங்கள ராணுவம் என்ன சிங்கள ராணுவம்?
பி. கு : கடலேறியின்ன் "எங்கள் ராணுவம்-அவர்கள் ராணுவம் வாதத்தோடு எனக்கு பெரிய உடன்பாடுகள் இல்லை
:))
ReplyDeleteஆமோதிக்கிறேன்.
எதை புறக்கணிக்கிறதாயிருந்தாலும் எங்களுக்கு இம்மியளவும் சேதாரம் வராத விசயங்களைத் தான் புறக்கணிப்பம். வேட்டைகாரன் படத்தை நெட்டில இறக்கிட்டு போகலாம். ஆனால் சிலோன் மீன் சுவையை நெட்டில இருந்து இறக்கேலுமோ?
ReplyDeleteகடலேறி, இந்து சரியாவும், நல்லாவும் இருக்கு. எங்களை மாதிரி ஆட்கள் கொழும்பிலை படம் பாத்து அவைக்கு வசூல் ஆகப் போவதுமில்லை. யாழ்ப்பாணத்திலை இந்த படம் பாக்க போறவை புலத்திலை இருந்து விடுமுறைக்கு வந்து, ஊரையே தியட்டருக்கு கூட்டிப் போறவையும், மாறுதலுக்கு நீலப் படம் பாக்காம சினிமா க்கு வாற இலையான்களும் ( anna புலத்திலை இருந்து anuppina kaasilai படம் paakkiravai...) தான்.
ReplyDeleteThis is my 1st comment to you..... :)
- கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாதே...
ReplyDeletesuper
//புறக்கணிக்கப்படவேண்டிய எத்தனையோ விசயங்களுக்குத் தோரணம் கட்டி ஆட்டம் போடும் ஆட்கள் வேட்டைக்காரனைப் புறக்கணிக்கச்சொல்லும் மடத்தனமாக அரசியல் எரிச்சலூட்டுவது.//
ReplyDeleteஉம்மோடு கூடப் பிறந்தக் குணம் தான் இந்து எரிச்சல் ஊட்டல். எரிச்சல் ஊட்டல் என்பது அடுத்தவன் உயர்வையும், நலனையும் காணும் பலரிடம் காணப்படுவது. இங்கே உமது எரிச்சலுக்கான காரணம் நீர் சொல்வதே சரியெனும் போக்கும், அதற்கு எதிரானதோ, வலுவானதோ கருத்துக்கள் தோன்றும் போதும் உமக்கு வருகின்றது. இது நீர் உம்மையே அதிமேதாவியாக கற்பிதம் செய்வதால் வருவது. முதலில் அதற்கான மருத்துவம் கிருத்துவம் ஏதாவது செய்துக்கொள்ளவும்.
//இந்தியராணுவத்தையும் இந்தியத்தேசியத்தையும் புகழ்ந்து பாடிய படங்களையே வரவேற்று ஓடவைத்த எங்களுக்கு சிங்கள ராணுவம் என்ன சிங்கள ராணுவம்?
பி. கு : கடலேறியின்ன் "எங்கள் ராணுவம்-அவர்கள் ராணுவம் வாதத்தோடு எனக்கு பெரிய உடன்பாடுகள் இல்லை//
அது அப்போதைய மனநிலை. யாழ்ப்பாணத்தில் காந்தி சிலையும் உண்டு, அறிஞர் அண்ணா சிலையும் உண்டு. அந்த நாட்டவரையும் இராணுவத்தையும் மதித்தக் காலமும் உண்டு. அது வேறு விசயம். ஆனால் தற்போதைய நிலை வேறு…. இங்கே மனநிலை என்பது வன்னி போர் முனையில் சிக்கி அல்லலுற்ற மனிதர்களின் மனநிலையையே குறிக்கும். அதே மனநிலை புலம்பெயர் தேசங்களில் இருப்போர் உள்வாங்கிக்கொண்டு அவர்களிடமும் இருந்தும் வெளிவரும் மனநிலையையும் குறிக்கும்.
இங்கே மனநிலையை இவ்வாறும் கூறலாம். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்து மாணவர்களின் மனநிலைக்கும், கொழும்பு பலகலைக் கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் மனநிலைக்கும் அதிகம் வெறுப்பாடு உண்டு. யாழ்ப்பாண மாணவர்கள் பட்ட அவலங்களை; கொழும்பு மாணவர்களது மனநிலை பிரதிபலிக்காது.
கொழும்பில் யாழ் மக்களிடமும் கூட வன்னி அவலங்கள் பெரிதாக எதிரொலிப்பதில்லை. வழி என்னவோ வன்னி மக்களுக்குத் தான் தெரியும்.
//இராஜ் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடுவது என்பதற்குப் பின்னால் தமிழ் மக்களின் கொலையை எப்படி நியாயப்படுத்த முடியும்..?//
ஒவ்வொரு தமிழனின் அழிவும் ஒவ்வொரு சிங்களவனின் உள்ளூர்ந்த மகிழ்வைத் தான் வெளிக்காட்டுகின்றன. எனவே அது சிங்களவனது புகழ் பாடலாகுவதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. ஆனால் எம்மினத்தின் அழிவில், அழித்தவனின் புகழ்பாட்டை கேட்பதில் பாதிப்புக்குள்ளானோரின் மனநிலை கவலைக்கொள்வதையும் தவிர்க்க முடியாது.
இதை மாற்று கருத்தாளர் எனும் மாட்டு கருத்தாளர்களினால் உணரவும் முடியாது. பட்டவனுக்கே வலி தெரியும்.
//பி. கு : கடலேறியின்ன் "எங்கள் ராணுவம்-அவர்கள் ராணுவம் வாதத்தோடு எனக்கு பெரிய உடன்பாடுகள் இல்லை//
இவ்வாறு விசயங்களில் உமக்கு எந்த உடன்பாடும் இல்லை எனும் உமது அதிமேதாவித்தனம் தெரிந்ததுதான். சிலருக்கு பேச்சாற்றல் உண்டு. சிலருக்கு எழுத்தாற்றல் உண்டு. சிலருக்கு செயலாற்றல் உண்டு. ஆனால் எவ்வித செயலாற்றலும் இல்லாமல் வெறுமனே பேசியும், எழுதியும் வரும் மாட்டுகருத்தாளர்கள் தமது வாழ் நாளில் செய்தது தான் என்ன?
//நான் கூடத்தான் இராஜின் பாடல்களைக் கேட்கின்றனான்... கொழும்பிலுள்ள பெரும்பாலான தமிழர்களும் என்னைப்போலத்தான்.//
செவி கேட்கும் புலன்கொண்டது என்பதால் கேட்பதில் தவறில்லை. மற்றது வாழும் சூழ்நிலை.
//ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.//
இதுதான் நிதர்சனம்.//
ஆம் அது நிதர்சனம் தான். ஒட்டுமொத்த் இனம் அழிக்கப்பட்ட போது, கொழும்பு பின்னனியில் பலர் தன் உளக்குமுறல்களை வெளிக்காட்ட முடியாது மௌனித்திருந்தப் போதும், கும்மாளப் பதிவுகள் இட்டு, மந்திகையில் குந்திய மந்தி போல், மனவாழ்க்கையை மட்டுமே நினைத்து வருந்திக்கொண்டு, இன்னும் இளைஞர் என்று பிதற்றிக்கொண்டு இருப்போரின் மனநிலை எயர்லைன்ஸ் ரிக்கட்டுகள் கிடைத்தால் தான் நிறைவு பெறும். வாழ்த்துக்கள்.
பஸ்பன்
பஸ்பன் என்ற அனானிக்கு
ReplyDeleteமே மாதம் எப்படியான பதிவுகள் வந்தன என்பதை ஒருக்கால் சென்று பாருங்கள். மற்றும் படி புலத்தில் இருக்கும் பலரும் ஸ்ரீலங்கனில் பயணிக்கத் தான் விரும்புகின்றார்கள் காரணம் மலிவு விலை தான் வேறு ஒன்றும் இல்லை.
நல்ல பதிவு... எனக்கும் கனபேர் இதப் புறக்கணியும் அதப் புறக்கணியும் எண்டு கணக்கா குறுந்தகவல்கள், முகநூல் மடல்கள், மினன்சல்கள் எல்லாம் வரும். உதுகளை எல்லாம் நான் மதிகிறேல்ல. எமது புறக்கணிப்ப தீர்மானிக்க இவையள் யார்? நேற்றும் ஒருத்தர் மெல்பேர்னில் இருந்து கதைச்சார். வன்னியில இருக்கிற சனம் குசு விட்டாலும் தங்களிட்ட கேட்டுப் போட்டுதான் விடணுமாம். இது எந்தவகயில நியாயம்? இவளத்துக்கும் அவருக்கு தமிழீழத்திண்ட எந்தப் பகுதியிலையும் ஒரு இரத்த உறவுகளும் இல்லை....
ReplyDeleteசினிமா தான் வாழ்க்கை என்று தமிழர் நாம் மூழ்கியபின்னர் எனக்கு இந்த எதிர்ப்பு கோஷம் பெரிதாக வியப்பைத் தரவில்லை..
ReplyDeleteஆனால் ஆதிரை சொன்ன பல விஷயங்கள் எங்களை நாமே சுய பரிசோதனை செய்வதற்கான கேள்விகள்.
இங்கே நாம் யாரும் புனிதர் இல்லை.. எத்தனை பேர் எம் உறவுகளுக்கு எத்தனை விதத்தில் பங்களிப்பு செய்தோம் என்று கேட்டால் அனைவருமே எல்லாவற்றையும் மூடிக் கொண்டு தான் இருப்போம்.
யார் எங்களுக்காக குரல் கொடுத்தாலும் நெகிழ்வதும், குரல் கொடுக்காவிட்டால் கொதிப்பதும் என்று உணர்ச்சி மடையராகி விட்டோம்..
கலைஞர் எதிர்ப்பும்,ஜெயலலிதா எதிர்ப்பும், காங்கிரஸ் எதிர்ப்பும் என்று இருக்கும் நாங்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்று பார்ப்பது நல்லது.
விஜயும் வேட்டைக்காரனும் வென்றாலும் தோற்றாலும் முகாமில் இருக்கும் எம்மவர்க்கு எல்லாம் கிடைக்குமா?
தமிழ் ஈழம் தான் கிடைக்குமா?
வேலையைப் பாருங்கப்பா..
சயந்தன் அன்று ட்விட்டரில் சொன்னது மாதிரி வேட்டைக்கறனைப் போர்க்கநியுங்கள் என்று சொல்கிற புலம்பெயர் ஈழத் தமிழர் கைகளிலே தியட்டரில் முதல் நாளில் போப்கொர்ன் இருக்குமாம்..
மானுடன் உங்கள் பின்னூட்டம் கருத்தாழமிக்க ஒரு சின்னப் பதிவு..
ஆதிரை மனம் திறந்த துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்..
பி.கு - விஜயை கிண்டல் செய்து பதிவு போடுவதால் எனக்கும் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதை உங்கள் பாணியில் நக்கலடித்து பிரசுரியுங்கள். இலங்கையிலும் வேட்டைக்காரனை துரத்துவோம் என்று..
திருந்தமாட்டார்கள் எம்மவர்கள்.
காத்திரமான பதிவு.. எங்களுக்கு இருப்பது போன்ற சுதந்திர தாயக உணர்வுதான் சிங்கள நண்பர்களுக்கும் இருக்கும் என்ற நியாமான யதார்த்தமான உண்மைமை நாசூக்காகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இன்னும் ஓர் தளத்தில் நின்று கூறியுள்ளீர்கள். பதிவின் ஆழம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது.
ReplyDeleteஎனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை. ஏன் எல்லோரும் பதிவுகளை அரசியலாக்குகிறீர்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்களை ஏதோ கூத்தும் கும்மாளமும் அடிப்பவர்கள் என்றும் அவர்களுக்கும் வன்னி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற மாதிரியும் கதைப்பது அபத்தமானது. எனக்குத் தெரிந்த எத்தனையோ போராளி - மாவீரர் குடும்பங்கள் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் உழைப்பதே வன்னியில் இருக்கும் தங்களது உறவுகளுக்காகவே தவிர உல்லாசத்துக்காக அல்ல. எனக்கு மது சகோதரர்களைத் தெரியும். ஏன், புல்லடி, கேதா, வந்தியத்தேவன் போன்றவர்களையும் தெரியும். அவர்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையும் தெரியும். இப்போது வாழும் வாழ்க்கையும் தெரியும். எல்லோரும் ஒரு நிலைக்கு வரும் வரை தான் அவர்களுக்கு தங்கள் பூர்வீகம் மறக்காது. ஒரு நிலைக்கு வந்தவுடன் அப்புகாமியின் பேரன் கூட போடாத ஆட்டத்தை போடுகிறார்கள். தமிழன் எல்லாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்லவே. அவர்கள் அழிந்த போது தரித்திரம் விட்டது என்டு கும்மாளம் இட்ட பதிவர்களையும் எனக்குத் தெரியும். இக்கருத்துரை எந்த தனி நபர்களையும் தாக்கும் பொருட்டு எழுதப்படவில்லை. நான் கூறியவர்கள் எப்படி மாறிவிட்டார்கள் என்று நினைக்கும் போது வரும் வேதனையை ஆற்றமுடியாமல் புழுங்கி எழுதுகிறேன். தமிழனாக இருந்து கொண்டு தமிழனை அழிப்பது அவர்களது கடமை என்று கூறுவது இடிக்கிறது. நீங்கள் பெரிய புத்திசாலி என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு எழுதிய லாஜிக் சகிக்கவில்லை. ஒரு டிகிரியும் நல்ல வேலையும் கையில் இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்துவிட்டது என்று நம்பும் உங்களைப்போன்றவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. வன்னியில் நடந்தவற்றைப் பார்த்த பிறகு நீயூட்டனின் மூன்றாம் விதியில் கூட எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும், நீங்கள் உணரும் நாள் கண்டிப்பாக வரும். அப்போது என் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சலும் தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியுமாமே. உங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் நீங்கள் அடிக்கும் கும்மாளங்களுக்கு அளவேயில்லை. அது நல்லதற்கில்லை. வெட்கப்படுகிறேன். உங்களைப் போன்றவர்களின் பதிவுகளை இவ்வளவு நாட்களாக வாசித்தேனே என்பதை நினைத்து தலை குனிகிறேன்.
ReplyDeleteபாரதி வவுனியா முகாம்களில் இருப்பவர்களைக் கேளுங்கள் அவர்கள் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். இன்னும் தேசியம் எனப் புலம்பிக்கொண்டு திரியாதீர்கள், உங்களைப் போன்ற புலம் பெய்ர்ந்து கும்மாளவிடும் சிலரால் தான் போராட்டம் மாறியது என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை.
ReplyDeleteஇப்பிடியான பதிவுகள் மூலமாத் தான் ஈழத் தமிழன் தனக்குள்ளேயே அடிபடுற ஈனச் சாதி என்பது தெரிய வருது..
ReplyDeleteநாசமாப் போங்கடா..
இதுக்குள்ளே கேவலம் கெட்ட எங்கட இளசுகள் சிலது அந்தப் பொறுக்கிப் பன்னாடை விஜய்க்கு கொழும்பில் ரசிகர் மன்றம்,கோவில் கட்டுதாம்.
முடிஞ்சா நீங்கள் எல்லாரும் சேர்ந்து அதை எதிர்ந்கோ பார்ப்பம்.
//பாரதி வவுனியா முகாம்களில் இருப்பவர்களைக் கேளுங்கள் அவர்கள் பற்றிக் கதை கதையாகச் சொல்வார்கள். இன்னும் தேசியம் எனப் புலம்பிக்கொண்டு திரியாதீர்கள், உங்களைப் போன்ற புலம் பெய்ர்ந்து கும்மாளவிடும் சிலரால் தான் போராட்டம் மாறியது என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை.//
ReplyDeleteஉனக்கென்ன விசரா. நான் வெளிநாட்டில் என்று எந்த முட்டாள் சொன்னான். உங்கள் எல்லோரையும் விட வன்னி நிலைமை எனக்கு அதிகமாகத் தெரியும். பொத்திக்கொண்டு போங்கள்.
புலம்பெயர்ந்த நீங்கள் எல்லாம் மாவீரர் தினம் எண்டாலும், கண்டனப் போராட்டம் எண்டாலும் கலியாட்டமாத் தானே குடிச்சு வெறிச்சு நடத்திரனியல்?
ReplyDeleteநடிக,நடிகையர் வந்தால் படம் பிடிச்சு டின்னர் குடுத்து உருகுறநீங்கள்?
வன்னியைப் பற்றி மட்டும் நாங்கள் கொழும்பில அழ வேணுமோ?
வாயைக் கிளறாதேங்கோ..
ஏனையா பாரதி எனும் பெயரையே கேவலப்படுத்துகிறிர்கள்.
ReplyDeleteபாரதி,
ReplyDeleteதனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளையும் உங்கள் உள்ளக்குமுறல்களையும் கொட்டுவதற்கு வேறு ஏதாவது இடம் பார்த்தால் நல்லது... (அதனால், தான் பதிவுக்கு சம்பந்தமில்லா உங்களின் ஏனைய பின்னூட்டங்கள் பிரசுரிக்கவில்லை.)
நான் - நாம் எப்படி வாழ்ந்தோம்/வாழ்கின்றோம் என்று அக்கறைப்படுகிறீரே... இங்கு நான் சொல்ல வந்ததை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்...
எந்த வித அடிப்படைக் காரணங்களுமற்று - ஒரு சிலரின் விருப்பு வெறுப்புக்களை ஈழத்தமிழர்களின் மீது சுமத்தி அவர்கள் மீது சவாரி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
வேட்டைக்காரன் ஓடினா என்ன ஓடாட்டா என்ன..?? அவதிப்படுற சனத்துக்கு அஞ்சு சதம் கிடைக்கப் போகுதெ...
ReplyDeleteஇது இப்ப முதுகு சொரியிற விசயமாப் போச்சு....
சரியான சவுக்கடி பதிவு ஆதிரை. மிகவும் சிறப்பான பதில்...
ReplyDeleteநம் கையே நமக்கு உதவி
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும், அதில் உண்மையிருப்பின் திருத்திக்கொள்ள தெரியாவிடின் மீண்டும் ஓர் அழிவு நிச்சயம் எமக்கு!
ReplyDeleteநல்ல பதிவு!
இது இலவச விளம்பரம் போல் தான் எனக்கு தோன்றுகிறது
ReplyDeleteஇருந்தாலும் உங்கள் கருத்துக்கள் அருமை
ஆதிரை அவர்களே
ReplyDeleteஇன்னொரு கோணத்தில் ஜோசித்தீர்களா? எத்தனையோ தமிழ் சினிமா பாடகர்கள் எழுச்சிப் பாடல்கள் பாடியிருக்கின்றார்கள். அண்மையில் ரஜனிக்காந்து உட்பட அனைத்து நடிகர்களும் உண்ணாவிரதம் போராட்டம் மனிதச் சங்கிலி போன்றவற்றில் கலந்துகொண்டார்கள், இதற்காக கொழும்புவில் இருக்கும் சிங்கள முதலாளிகள் தங்கள் தியேட்டர்களில் திரைப்படங்களை வெளியிடாமல் புறக்கணிக்கவேண்டுமல்லவா? ஆனால் ஏன் அவர்கள் இதனைச் செய்யவில்லை காரணம் கலை வேறை இனப்பற்று வேறை?
அவர்கள் தமிழ்சினிமாவைப் புறக்கணித்தால் என்னவாகும்? பாரதி போன்றவர்கள் சிந்திப்பார்களா?
//ஆதிரை
ReplyDelete//மேலும் சிங்கள இராணுவத்தைப் புகழ்ந்து பாடியதில்
எந்தத் தவறையும் காணவில்லை என்று எழுதி இருப்பது அதிர்ச்சி அழிக்கிறது.சிறிலங்கா இராணுவம் நாட்டைக் காக்க பல் ஆயிரம் தமிழர்களை அழிததை இந்தப் பதிவரும் நியாயமானதாக்ப்பார்க்கிராரா?
சிங்கள இராணுவத்தை ஒரு சிங்களவரான இராஜ் புகழ்ந்து பாடியதை என்னால் குறை கூற முடியாது.
இராஜ் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடுவது என்பதற்குப் பின்னால் தமிழ் மக்களின் கொலையை எப்படி நியாயப்படுத்த முடியும்..?//
சிஙள இராணுவம் நிகழ்த்திய படுகொலையைக் கண்டித்த சிங்களவர்கள் உண்டு.ஒருவர் சிங்களவராக இருப்பதால் அவர் மனிதராக இருக்க வேண்டியது இல்லை என்பது எத்தகைய நியாயாம்?சிங்கள இராணுவம் வேற்று நாட்டுப் படிகலுடன் போரிடவில்லை,அது ஒரே தீவில் ஒன்றாக வாழும் இன்னொரு தேசிய இனத்தின் மீது எந்தவித போரியல் விதிகளுக்கும் உட்படாது மக்களைப் படுகொலை செய்தது.அவருக்கு இது இதுவரை தெரியவில்லை என்றால் அவருக்கு அதனை உணர்த்த வேண்டிய நீங்கள் எல்லாம் கொழும்பில் என்ன செய்கிறீர்கள்?
இராஜ் புகழ்ந்து பாடுவது, தமது அரசியல் விடுதலைக்காகப் போராடிய தமிழ் இனத்தை படுகொலை செய்த சிங்களப் பேரினவாத இராணுவத்தை.சிங்களப் பேரினவாதா மாயை என்பது இராச் உடபட சகல சிங்களவரையும் பீடித்து இருக்கிறது.விதிவிலக்காக சிலர் இருகிறார்கள்,அவர்களை நாங்கள் ஆதரிப்போம்,அவர்கள் மனித் நேயம் உள்ளவர்கள் என்பதால்.
அற்புதன்,
ReplyDeleteவிளக்கத்துக்கு நன்றி.
//அவருக்கு இது இதுவரை தெரியவில்லை என்றால் அவருக்கு அதனை உணர்த்த வேண்டிய நீங்கள் எல்லாம் கொழும்பில் என்ன செய்கிறீர்கள்?
நாங்கள் அவருக்கு புரியவைக்கலாம் என்றால், நீங்கள் கூட கொழும்பு வந்து அவருக்கு அதனை உணர்த்தலாம் அல்லவா...?
அற்புதன்,
ReplyDeleteநாம் இராஜ் படையினரைப்புகழ்ந்து பாடிவிட்ட காரணத்தால் அவர் சம்பந்தப்படும் வேட்டைக்காரனைத் தடை செய்ய நிற்கிறோம்.
ஈழத்தமிழர் அரசியலையும், அவர்தம் இருப்பையும் உயிரையும் சின்னாபின்னமாக்கிச்சிதறடித்த இந்தியத்தேசியத்தையும் , அந்தத்தேசியம் போற்றும் ஒட்டுமொத்த இந்தியப்படங்களையும், இந்திய உற்பத்திகளையும் ஏன் தடை செய்கிறோமில்லை?
இந்தியப்படைகளை எப்போதும் விதந்தேற்றும் சத்தியராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சேரன், வைரமுத்து, விஜயகாந்த் என்று நீளும் பட்டியல் கலைஞர்கள் சம்பந்தப்படும் படங்களை எல்லாம் ஏன் தடை செய்கிறோமில்லை?
//ஒன்று சொல்ல மறந்திட்டேன்... நேற்றும் உனக்காக விசாரித்துப் பார்த்தேன். ஜனவரி வரைக்கும் சிறிலங்கா எயர்லைன்ஸ் இல் இலங்கைக்கான ரிக்கட்டுக்கள் இல்லையாம்.//
ReplyDeleteஇதுதான் நிதர்சனம்.
வந்தியத் தேவன்,
நிதர்சனத்தை மாற்றத் தான் போராட்டாங்கள் ,படுகொலையையும் ஒடுக்குமுறையையும் நிதர்சனம் என்னும் சொல்லினிஊடாக நியாயாப்படுத்த முடியாது.டக்கிளசின் அரசியலும் கருணாவின் அரசியலும் நிதர்சனம் என்பதினூடாக நியாயாப்படுத்த முடியும்.அதற்காக மற்றவர்களும் அத்தகைய அரசியலைச் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.எங்களுக்கு மனித நேயம்,அறம் சார் புரிதல்கள் இருக்கின்றன.
//இராஜ் அவர்களை ஒரு படைப் பாளராகப் பாருங்கள்.//
ReplyDeleteஒரு படைப் பாளர் எதைப் படைக்கிறார் என்பது முக்கியமானாது.அவர் மக்கள் சார்ந்து அறம் சார்ந்து மனிதனேயாம் சார்ந்து இயங்கிறாரா அல்லது, அடக்குமுறை சார்ந்து இனவாதாம் சார்ந்து இயங்கிறாரா என்பது முக்கியம்.அவர் சிங்களவ்ர் என்பதற்காக அவரை எவரும் எதிர்க்கவில்லை,அவர் ஒரு படுகொலை புரிந்த இராணுவத்தைப் புகழ்ந்து பாடினார் என்பதற்காகவே எத்ரிக்கப்படுகிறார்,எதிக்கப் படவேண்டியவர்.
//நாங்கள் அவருக்கு புரியவைக்கலாம் என்றால், நீங்கள் கூட கொழும்பு வந்து அவருக்கு அதனை உணர்த்தலாம் அல்லவா...?//
ReplyDeleteகொழும்புக்கு வராமலே அவரைப் புறக்கணீக்கும் செய்தி அவர் காதுகளுக்கு இப்போது எட்டி இருக்கும்,அவருக்கு இபோது புரிந்து இருக்கும்.அதனை ஏன் நீங்கள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்? புரியவில்லையே? கொழும்பில் இருக்கும் நீங்கள் செய்ய மாட்டீர்கள் ,இங்கிருந்து நாங்கள் செய்தால், செய்யாதே என்று பதிவு போடுவீர்கள்.
கொமர்ஷியல் வங்கியில் ATM மூலம் பணம் கூட பெற முடியாவிட்டால் நட்டம் பணம்பெறுபவருக்கே. வேட்டைக்காறனை புறக்கணிப்பதால் நட்டம் படம் எடுத்தவருக்கே!!
ReplyDelete///ஈழத்தமிழர் அரசியலையும், அவர்தம் இருப்பையும் உயிரையும் சின்னாபின்னமாக்கிச்சிதறடித்த இந்தியத்தேசியத்தையும் , அந்தத்தேசியம் போற்றும் ஒட்டுமொத்த இந்தியப்படங்களையும், இந்திய உற்பத்திகளையும் ஏன் தடை செய்கிறோமில்லை?
ReplyDeleteஇந்தியப்படைகளை எப்போதும் விதந்தேற்றும் சத்தியராஜ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சேரன், வைரமுத்து, விஜயகாந்த் என்று நீளும் பட்டியல் கலைஞர்கள் சம்பந்தப்படும் படங்களை எல்லாம் ஏன் தடை செய்கிறோமில்லை?///
இதுதான் கேள்வி. நன்றி மு. மயூரன். இதையெல்லாம் யோசிக்கிற மனநிலை எங்களிடம் இல்லை. அதுதான் பிரச்சினைகளின் அடிநாதம்
அற்புதன்,
ReplyDeleteஉங்களிடம் ஒரேயொரு கேள்வி...
வேட்டைக்காரனைப் புறக்கணிப்பதால் நீங்கள் பேசும் தேசியத்துக்கு கிடைக்கப்போகின்ற அந்த நன்மைதான் என்ன...?
//அற்புதன்,
ReplyDeleteஉங்களிடம் ஒரேயொரு கேள்வி...
வேட்டைக்காரனைப் புறக்கணிப்பதால் நீங்கள் பேசும் தேசியத்துக்கு கிடைக்கப்போகின்ற அந்த நன்மைதான் என்ன...? //
இதைத் தான் நான் உந்த எதிர்ப்பாளர்களிடம் கேட்டக விரும்புகிறேன்...
உங்கள் எதிர்ப்பால் என்ன நடக்கும்?
இராஜ் பங்குகொண்ட வேட்டைக்காரன் தோல்வி! சிங்கள மக்கள் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர் என்றா செய்தி வரும்?
இல்லையே?
விஜய் நகைச்சுவைகள் மட்டும் அதிகரிக்கும், விஜயை மொக்கைப்படுத்துதல் அதிகரிக்கும்....
உங்கள் எதிர்ப்புக்கள் வேட்டைக்காரனுக்கு புதுவித ஆதரவை வழங்கியிருப்பது உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் உண்மை அதுதான்....
இப்போது வேட்டைக்காரனுக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் உண்டு....
யாராவது எனக்கு பதில் சொல்லுங்கப்பா....
ReplyDeleteசீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறாராமே.. அதுவும் அதற்கு தலைவர் பிரபாகரன்தான் பெயர் தெரிவு செய்தாராம்..
அந்தப்படத்தை நாங்கள் புறக்கணிக்க வேண்டுமா ? ஆதரிக்க வேண்டுமா..?
கொழும்பில் பதுங்கியுள்ள தமிழன் நண்பன் ஆதிரைக்கு:
ReplyDeletehttp://tamilcause.blogspot.com/2009/12/blog-post_4478.html
arumai arpputhan...!
ReplyDeleteungal vaathangal "colombo pathivarkal"udaiyathu polillaamal,karuththu serivum,tharkkamum nirainthirukkirathu.
ean ippadi oru pathivu poddom enru aathirai annar varuththappada pokiraar...!
வேட்டைக்காரன் படத்தை புறக்கணிக்கிறதால் உங்களுக்கு என்ன நஸ்டம்? புறக்கணிக்கிறதால ஈழத்தமிழருக்கு கடுகளவு மனநிம்மதி கிடைக்கும் என்றாலும் அதை செய்வேன்
ReplyDeleteவேட்டைக்காரனை விடுவோம் ஆனால் ஈழத்தமிழர் போராட்டத்தை நசுக்கி தமிழ் நாட்டு மக்கள் மனதில் விஷத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிற காங்கிரஷ் கட்சியை தமிழ் நாட்டில் பலப்படுத்துவதற்காக அதனோடு பேச்சுவார்தை நாடாத்தும் ஒருவரை புறகணிகிறதிலை என்னய்யா தப்பு.
புறக்கணிப்பம்யா. புறக்கணிகிறாதால எங்களுக்கு ஒண்டும் குறைஞ்சு போகாது.
யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள்.//
ReplyDeleteஅது யூதர்கள்.
நாம் தமிழர்கள்