Search This Blog

Thursday, April 1, 2010

வீதிக்கு வந்த மாடுகள்


பால் சொரியப் போகின்றனவாம் - வீட்டு முற்றத்தில்
கால் பதிக்கின்றன மாடுகள்...!!!
சில பழக்கப்பட்டவை - கோடிகள் பேசி
பல இறக்கப்பட்டவை...!!

நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.
ஒட்டாது என்ற சிவலையும் கறுவலும்
கூட்டாக வந்து குடும்பம் நடத்துகின்றன.
ஒரு மடியில் தாகம் தீரக் குடித்தவைகளும்
வேறு திசைகளில் நடையைக் கட்டுகின்றன.

கொம்புகளை மறைத்து, மடியினை நிரப்பி
தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்
உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்
எங்கள் இரத்த வாடையன்றோ...
தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்
மாமிச உண்ணிகளை காண முடிகின்றது...

நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!
காலை விடிந்ததும் கன்றுகளும் கூடி வர
எல்லை கடந்திடுவீர் பெட்டி பொட்டலங்களுடன்...
அதற்கும் மட்டும்,
வென்றவர் தோற்றவர் சட்டம் கிடையாது...
ஆறு வருடங்களின் பின்னரும்
ஆறாத காயத்துடன் என்வாசல் திறந்திருக்கும்...
பால் சொரிய வருவீர்கள் என்ற வரட்டு நம்பிக்கையுடன்...!!!

- ஆதிரை

10 comments:

  1. நான் தான் முதலாவது.....

    ReplyDelete
  2. //தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்
    உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்
    எங்கள் இரத்த வாடையன்றோ...!!!//

    புரிந்து கொண்டேன்... :(

    //நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!//

    :(

    கவிதை நன்றாக உள்ளது....

    ReplyDelete
  3. // கன்கொன் || Kangon said...

    புரிந்து கொண்டேன்... :(
    //

    ஆமாம், தொலைபேசியில் குறிப்பிட்டார், ஆதிரை அண்ணா பாசத் தலைவரைப்பற்றி பற்றி கவிதை எழுதியிருக்கிறார் என்று. அப்போதே புரிந்துகொண்டேன் இவர் புரிந்துகொண்டுவிட்டார் என்று

    ReplyDelete
  4. சென்றமுறை சிறுகதை, இம்முறை கவிதையா? கலக்குங்கள் :)

    ReplyDelete
  5. ///தாவர உண்ணிகளுக்குள்ளும் என்னால்
    மாமிச உண்ணிகளை காண முடிகின்றது...///
    புடுங்கி எறிய நினைக்காதீர்கள் ....உங்கள் உடலுக்கு தீங்கு வரலாம்

    ///ஒரு மடியில் தாகம் தீரக் குடித்தவைகளும்
    வேறு திசைகளில் நடையைக் கட்டுகின்றன.///
    மீண்டும் தாகம் எடுத்தால் குடிக்க வரலாம் ....பால்....ஒரு மடியில்

    ReplyDelete
  6. // நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
    றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//

    இது தான் உண்மை.

    // நாளை உங்களுக்கு முடிசூட்டும் விழாவாம்...!!!
    காலை விடிந்ததும் கன்றுகளும் கூடி வர
    எல்லை கடந்திடுவீர் பெட்டி பொட்டலங்களுடன்...
    அதற்கும் மட்டும்,வென்றவர் தோற்றவர் சட்ட//

    இதன் அர்த்தம் புரியவில்லை.

    ReplyDelete
  7. கருத்துக்கள் புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு...
    அது சரி, உங்கட வீட்டு மதில்ல நிக்கிற மாட்டைப் பற்றியும் சொல்லி இருக்கலாமே...

    ReplyDelete
  8. அருமை.நிதர்சனம்.

    நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
    றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//

    ;)

    //கொம்புகளை மறைத்து, மடியினை நிரப்பி
    தம்புகழ் பாடி தம்பட்டம் அடித்தாலும்
    உங்கள் வருகையில் வீசுவதெல்லாம்
    எங்கள் இரத்த வாடையன்றோ...//

    மக்களின் கருத்தும் இதே..


    அருமை.

    இது புரியாதோர்..புரியாதோரே..

    ReplyDelete
  9. அனைவரினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    அர்ச்சனா,
    திருவிழா முடிந்து மறுநாள் திருவிழாவுக்கென தருவிக்கப்பட்டவைகளும் - இங்கு விலை பேசப்பட்டவைகளும் பயணப் பெட்டிகளுடன் புறப்பட்டு விடுவதுதான் வழமை.

    பால்குடி (தங்களுக்கு மட்டும்),
    நாய், வால் கதை தெரியும்தானே. :P

    ReplyDelete
  10. //நாட்டில் மேய்ப்பர்கள் இல்லாத போது
    றோட்டிற்கு வந்து விட்டன எல்லாம்.//

    ஹிஹிஹிஹி....
    நல்லா இருக்கு நிசர்சனம்..

    ReplyDelete

You might also like