Search This Blog

Thursday, May 6, 2010

தமன்னா - பிடிச்சிருக்கு


நேற்று வரைக்கும் அவிச்ச இறால் நிறத்தழகி என்றிருந்த தமன்னாவை இன்று பிடித்திருக்கின்றது. அண்மைக்காலத்தில் எல்லோர் மனதையும் தீண்டிய விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸியையும் விஞ்சி நிற்கின்றாள் பையாவின் சாரு!!! இளசுகள் பலவற்றின் தூக்கக் கலைதலுக்குக் காரணமாய் நடை, நளினம், அசைவு என்று எல்லாவிதத்திலும் நிறைந்திருக்கின்றாள்...

பையா படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என்று புளுகுவதற்கு அதில் எதுவுமில்லை. படத்தில் லொஜிக் தேடி பிழைபிடிப்பவர்களுக்கு தாராளமாக அது நிறைந்துள்ள ஒரு படம். கண்டதும் காதல், காதலுக்காய் அலைதல், வழமையான தமிழ்ச்சினிமா தடாலடிச் சண்டைகள், இறுதியில் இணைதல்... இதுதான் பையா படமென்றால்... இல்லை! அதற்கும் மேலாக படம் முழுவதும் ஓடித் திரியும் ஒரு காரின் பயணம்... அந்தக்காரின் பயணத்தினூடு இயக்குனர் லிங்குசாமி பேசுகின்ற காதலும், அதன் வலிகளும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றது. கூடவே பாடல்களும்...!!!

நா.முத்துக்குமார் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி தந்த பையா பாடல்கள் இப்போது போலவே எப்போதும் காதல்க்கீதம் இசைக்கத்தான் போகின்றன.






கார்த்தி... இரசிக்க வைக்கின்றார். இடைக்கிடை அண்ணன் சூர்யாவையும் நினைவுபடுத்த மறக்கவில்லை.

அது சரி...! எப்போதோ பார்த்த பையா பற்றி இப்போது என்ன பேச்சு என்றுதானே கேட்கின்றீர்கள். நண்பன் ஒருத்தன் சொன்னான் - தமன்னாவுக்காக சுறா பார்க்கலாமாம். பையாவில் வந்த தமன்னா பிடித்திருக்கின்றது என்பதற்காக சுறா பார்க்கப் போவேன் என்பது அந்த விஜய் பக்தனின் எதிர்பார்ப்பு... கூடவே, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல சிந்தனையும் தான். ஆனால், சொந்தச்செலவில் சூனியம் வைக்கும் எண்ணம் எனக்கில்லை!!!

8 comments:

  1. டாக்-கை பார்த்து ஏமாந்து போயிட்டேனே!அவ்வ்வ!:-))

    ReplyDelete
  2. நானும் சுறா பாக்கலாமோ எண்டு யோசிக்கிறன்... தமன்னாவுக்காக இல்ல, சும்மா...

    தமன்னா விசயம் அங்க தெரியுமோ?
    சாப்பாடு வடிவாக் கிடைக்குதா? ;)

    ReplyDelete
  3. //தமன்னாவுக்காக சுறா பார்க்கலாமாம்//

    ROFL... விஜய் தமன்னாவுக்கு அழவில்லாத டவுசரை இழுத்து இழுத்து விடுகிறார்..ஹீஹீ

    படம் பார்த்தால் சிலவேளை தமன்னா மீது கடுப்பு வரலாம்...#எச்சரிக்கை

    //சொந்தச்செலவில் சூனியம் வைக்கும் எண்ணம் எனக்கில்லை!!!//

    அது..;)))

    ReplyDelete
  4. //நேற்று வரைக்கும் அவிச்ச இறால் நிறத்தழகி //

    இதனுடன் உடன்படுகின்றேன். அதற்க்கு மிஞ்சி வேறு ஏதும் சொன்னால் லோஷன் அண்ணா தலைமையில் இயங்கும் தமன்னா ரசிகர்கள் என்னை பெண்டு கழற்றிவிடுவர்.

    சுறா பார்க்கமாட்டேன் என்று சொன்ன உங்கள் விரதம் உங்களுக்கு வரப்போபவரால் முடிவடைய நினைப்பதை எண்ணி என் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  5. எனக்கும் பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  6. பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  7. தமன்னாவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்கள் கண்ணில் ஏதோ கோளாறு என நினைப்பார்கள் ஹிஹிஹி

    அகில உலக தமன்னா ரசிகர்கள் சங்கம்

    ReplyDelete
  8. எனக்கும் பிடிக்கும்...

    ReplyDelete

You might also like