Search This Blog

Monday, December 7, 2009

படம் காட்டும் பதிவுலகம் - 02


இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மோசமான அனர்த்தம் தந்த வடுக்கள் இவை. டிசம்பர் 3, 1984 அன்று இந்தியாவின் போபாலில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழ்ந்தனர். இன்றும் கூட அங்கு பிறக்கின்ற குழந்தைகளை அன்றைய கொடூரம் விட்டு வைக்கவில்லை.
(படம்: பிபிசி இணையத்தளம்)

★ ★ ★



காலம் மாறிய கோலம். இன்று எதிரும் புதிருமாய்....

★ ★ ★



உலகளாவிய ரீதியில் டிசம்பர் முதலாம் திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று பிபிசி செய்திச்சேவையின் இணையத்தளத்தில் காணப்பட்ட அதிர்ச்சிகரமான செய்தி இது.

நியூசிலாந்திலுள்ள ஒருத்தர் உறக்கத்திலிருந்த தன் மனைவிக்கு ஊசி மூலம் HIV கிருமிகளை உட் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிபிட்ட அந்த நியூசிலாந்து வாசிக்கு ஏற்கனவே HIV தொற்று இருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால், அவர் மனைவியோ அல்லது பிள்ளைகளோ எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை. அப்படியாயின், தன் மனைவிக்கு இவர் ஏன் பலவந்தமாக தன் இரத்தத்தை செலுத்தினார் என்ற கேள்விக்கு அவர் தரும் பதில்... தன் மனைவி எயிட்ஸ் தொற்று ஏற்பட்டுவிடலாம் எனப் பயந்து தன்னுடனான உறவுகளைத் தவிர்த்து வந்தாளாம்...

★ ★ ★



உலகை ஆட்டிப்படைக்கும் பன்றிக்காய்ச்சலின் விபரீதம்....

★ ★ ★




அண்மையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கட் ஒன்றைக் கைப்பற்றிய மகிழ்ச்சியினை ஹர்பஜனுடன் பகிரும் சிறீசாந்.

5 comments:

  1. எதிரும் புதிரும் கலக்கல். எஸ்பியின் படமும் இனி வருங்காலத்தில் இடம் பிடிக்கும்.

    ReplyDelete
  2. மகிந்த: முதலே இவ்வளவு தூரத்தில வைச்சிருக்காமல் விட்டுட்டேன்.
    ---
    எனது கடைசி இரண்டு இடுக்கையும் தேர்தலைப் பற்றியதுதான்.

    ReplyDelete
  3. அருமை....
    முதலாவது படம் எங்கள் அழிவுகளை படம்பிடித்துக் காட்டுகிறது.

    மஹிந்தர் பாவம்....

    நியூசிலாந்து நபரைப் போன்றவர்களை உலகில் இருந்து அழித்துத் தொலைக்க வேண்டும். மனிதர்களுக்குள் இருந்து மனிதர்களின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கும் 2, 3 அறிவை மட்டும் ஜந்துக்கள்.

    ReplyDelete
  4. படங்கள் சிந்திக்கவும் தூண்டியது ஆதிரை, கலக்கலோ கலக்கல்

    ReplyDelete

You might also like