Search This Blog

Saturday, May 15, 2010

எழுதச் சொல்கிறாய்...!!!


எழுதச் சொல்கிறாய் நண்பா...!
மன்னித்துக் கொள்...!!!
எதையுமே நான் எழுதப் போவதில்லை.
எழுதுவதாலும் தொழுவதாலும்
எதுவுமே ஆகாதென்ற போது
வேண்டாம் இன்னொரு சாகடிப்பு...!

தோழனே...!
நாம் செய்ததெல்லாம் என்ன..?
உன் புத்தகத்தைப் பறித்து,
கரங்களுக்குள் கனரகங்களைப் புகுத்தி,
எல்லையில் உன் கருவி கனல் கக்கியதை
கணனியில் கொண்டாடி
கனவினில் நாடு கண்டோம்...!!!

சமைத்துக் கொண்டிருந்த உன் அம்மா
சரிந்து விழுந்த நாளொன்றில் அவள்
குருதியைப் படமெடுத்து
விற்றுக் கொண்டிருந்தோம்
யாராவது திரும்பிப் பார்க்கமாட்டார்களா என...!
உன் துயரத்தை கூவி விற்று
எம் உரிமையைக் கேட்டோம்.
யாருமே தரவில்லை...!!!

ஓடிக் கொண்டிருந்த வீடியோவில்,
காலிழந்த நீ...
குருதி கொப்பளிக்கும் அம்மா...
பசியையே பல நாளாய்
புசித்த உன் அக்கா மகள்...
சதைத்துண்டங்கள்...
மனித வேட்டையாடிய நாய்கள்...
இவைகளைக் காட்டியாவது
உன்னைக் காப்பாற்றலாம் எனும்
நம்பிக்கை அற்றுப் போன
ஓர் நாளில்
நீ சிறை வைக்கப்பட்டாய்...!!!!

10 comments:

  1. கவிதை கனத்துக்கிடக்கிறது.. அதே உணர்வுகள்தான் நண்பா..

    ReplyDelete
  2. நம் எல்லோர் உணர்வையும் கவிதையின் வரிகளில் சொல்லியிருக்கிறீர்கள். கனமாகிய மனத்தோடு

    ReplyDelete
  3. ம்..., எனக்கும் அதே உணர்வுகள்தான்

    ReplyDelete
  4. கவிதை கனக்கிறது. ...ஆனாலும் .. இதில் யாரைச் சாடுகிறீர்கள்.புரியவில்லை.

    ReplyDelete
  5. மிகவும் உணர்வு பூர்வமாக எழுதியுள்ளீர்கள் அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  6. என் நிழலாக தொடரும் நிஜங்களின் நீளத்தை கவியூடாக கலக்கிவிட்டிங்க

    ReplyDelete
  7. ம்ம்..

    மனம் ரணமாகிக் கிடக்கிறது..
    நேற்றும் முன்தினமும் எத்தனை தடவை இதை வாசித்தேன் எனக்கே தெரியாது..

    ஆதிரை, நாம் பார்வையாளர்கள் மட்டுமே..
    நடந்தவற்றின் நிஜங்களைக் கூட எழுதமுடியாத நிலை...

    அவ்வளவு தான்.. :(

    ReplyDelete
  8. ஜெனகன்June 7, 2010 at 3:31 AM

    நாங்கள் புரிந்து கொள்ளாத நிஜங்களை.. உண்மைகளை...வலிகளை..எல்லாவற்றையும் சிறு கவியூடாக தந்தீர்... நன்றி சிறி

    ReplyDelete

You might also like